53.தங்கம்

2021...💜💜💜💜💜 #புத்தகம் #தங்கம் ஆசிரியர்.. சிந்து சீனு பதிப்பகம்.. அன்பு நிலையம், வேலூர் போன் 98652 24292. பக்கங்கள்..78 வகை..சிறுகதைத் தொகுப்பு. 🌻🌻🌻 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு அட்டைப்படம் எளிமையான அழகு❤. 🌻🌻 சிறுவயதில் பாட்டிகளிடம் கேட்ட நீதிக்கதைகள், தன் நண்பர்களிடம் கூறிய கற்பனை கதைகள், (பெரும்பாலும் பேய் கதைகள்) ,கோயில்களில் கேட்ட புராணக் கதைகள், மேடைகளில் கேட்ட புரட்டுக் கதைகள் எனப் பல்வேறு கதைகள் உடனே பயணிப்பவர்கள் தான் நாம் அனைவரும். வாழ்வில் ஒவ்வொரு நாளும் பெறும் அனுபவங்கள் பலவிதம். வசதி படைத்தோருக்கு மகிழ்ச்சியான சம்பவங்களும், எளியோருக்கு வலிமிகுந்த சம்பவங்களும் நடக்கலாம் அவ்வளவே. 🌓 அதுபோல தன் வாழ்வில் ,நண்பர்களின் வாழ்வில் நடந்தவற்றை நம் அருகில் அமர்ந்து சொல்வதைப் போலவே இருக்கிறது அனைத்து கதைகளும்..😊 #தங்கம்👩❤️💋👩 புத்தகத் தலைப்பாக உள்ள தங்கம் சிறுகதை பற்றி முதலில் கூற வேண்டும் ...திருநங்கை/ நம்பிகளை ஒரு மனிதப் பிறவியாக ,சக உயிராக மதிக்க வலிய...