Posts

Showing posts from December, 2021

9.காலம் தோறும் பெண்_இராஜம் கிருஷ்ணன்.

Image
2021📚📚📚📚📚 புத்தகம்.. காலம்தோறும் பெண் (சமூகவியல் ஆய்வு)  ஆசிரியர் .. ராஜம் கிருஷ்ணன். பதிப்பகம்.. சிந்தன் புக்ஸ்                              சென்னை.            Mobile  9445123164 வகை...கட்டுரை பக்கங்கள்..143 பெண் ஏன் அடிமையானாள்? எப்படி ஆனாள்? என ஆராய்கிறார் ஆசிரியர் ராஜம் கிருஷ்ணன் 25 கட்டுரைகளில்.. ஆதி நாட்களில் மனித இனக் குழந்தைகளின் தலைவியாக, தாயாக இருந்த பெண்கள் எப்போது ஒடுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு, அடிமையாக்கப்பட்டாள்?  'தெய்வந் தொழாள் கொழுநற்றொழுதெழுவாள்  ' என்று வள்ளுவர் கூறியுள்ளார் எனில் எந்த நூற்றாண்டில் இப்படி மாறியது? வேத காலத்தில் பெண்களுக்கு மரியாதை இருந்ததா? வேதங்களையே படிக்கக் கூடாது என்ற நிலை தானே இருந்தது? கல்வி அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்கிறதா? கிடைத்த வேலையை செய்ய முடிகிறதா? இவை போன்ற‌ வினாக்களை எழுப்பி ஆசிரியர் தான் பார்த்து பாதிப்படைந்த சம்பவங்களைப் பகிர்ந்து விடை காணவும்,படிப்பவர்களை சிந்திக்கவும் வைத்திருக்கிறார். முன்னேறி இருப்பது போல் ஒரு‌ தோற்றமே இன்றும்.. மாற்றம் ஒன்றே மாறாதது.காத்திருப்போம்.

ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா? _சுப.வீ

Image
2021_8📚📚📚📚📚 புத்தகம்.. ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா?  ஆசிரியர் .. சுப. வீரபாண்டியன் பதிப்பகம் கருஞ்சட்டை பதிப்பகம் பக்கங்கள்..40 வகை..கட்டுரை  #அறிவுத்தேடல் என்ற நிகழ்வில் இடம்பெற்றஆசிரியரின் உரையை சிறு நூலாக மாற்றியிருக்கிறார்கள்.   இயற்பியலை எளிமையாக எழுதுவதும், அறிவியல் துறை சாராதவர்களுக்கும்  புரியும் வகையில் இருப்பதும் ஹாக்கிங் எழுத்துக்களின் சிறப்பு. #Brief answers to the big question என்ற  புத்தகத்தில் இடம்பெற்ற முதல் கேள்வி தான் கடவுள் இருக்கிறாரா? என்பது. ஸ்டீபன் ஹாக்கிங்  வாழ்க்கை பற்றிய சுருக்கமான  குறிப்பும் உண்டு. கடவுள் நம்பிக்கை நிறைந்த நியூட்டன் ,அதைப்பற்றி கவலை இல்லாமல் இருந்த  ஐன்ஸ்டீன் அவர்களது கருத்துக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இயேசு பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கிரேக்க அறிவியல் அறிஞர் அரிஸ்டார்கஸ்( ‌ Aristarchus) சூரியன் தான் மையமாக இருக்கிறது., சூரியன் பூமி நிலா ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் நிழல்களால்  தான் கிரகணங்கள் உருவாகிறது, சூரியனும் ஒரு நட்சத்திரமே போன்ற அறிவியல் உண்மைகளை கூறியுள்ளார்.

7.சிறகுக்குள் வானம்..ஆர்.பாலகிருஷ்ணன்.

Image
📚📚📚📚📚📚 புத்தகம்.. சிறகுக்குள் வானம்  ஆசிரியர் .. ஆர் பாலகிருஷ்ணன் ..ஐஏஎஸ் பக்கங்கள்.. 159  பதிப்பகம் .. உயிர்மை.  வகை... கட்டுரை 'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் 'என்ற ஆசிரியரின்  நூலைப் படித்தபிறகு தேர்ந்தெடுத்த புத்தகம். சிறகுக்குள் வானம்... தலைப்பே நிறைய நேரம் எடுத்துக் கொண்டது. சிறகை விரும்பாதவர் யார் ?அது ஒரு குறியீடு அல்லவா? நம்மை கீழிருந்து மேல் நோக்கி அழைத்துச் செல்வது தானே? என்று தொடர்ந்து கொண்டே இருந்தது ..ஆசிரியரும் தலைப்பை பற்றி தன் உரையில் அருமையான விளக்கம் அளித்துள்ளார். 24 கட்டுரைகளாக தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் அதை ஒட்டிய ஒரு கவிதை அருமை. 'குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் படணும் ',என்பார்களே அதுபோல ,ஆசிரியர் காமராஜர் அவர்களால் 14 வயதில் #ஐஏஎஸ் படி என்று ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறார். அதனால்தான், 1984இல் தமிழில் முதன் முறையாக தேர்வு எழுதி, தன் உழைப்பால் முதல் முயற்சியிலேயே வெற்றியும் பெற்றிருக்கிறார். //இலக்கு ஒரு தொலைநோக்குப் பார்வையை நமக்கு தருகிறது. நம்மை  உந்துகிறது செயல்பட வைக்கிறது .//என்ற பீட்

6.கல்விச்சிக்கல்கள்..(தீர்வை நோக்கி...). *உமா‌ மகேஸ்வரி*

Image
📚📚📚📚 புத்தகம்.. கல்விச் சிக்கல்கள்.. தீர்வை நோக்கி.. ஆசிரியர்  .. சு.உமா மகேஸ்வரி. பதிப்பகம்..#பன்மை_வெளி ,சென்னை.  944 391 8095 பக்கங்கள்.. 208 வகை.. கட்டுரை தொகுப்பு. ஆசிரியரைப் பற்றி... முகநூலில் அறிமுகம் ஆனவர். சென்னையில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிபவர் .பன்முகத் திறமை கொண்டவர் . மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பவர்  என்பது சிறப்புத் தகுதி. புத்தகத்தைப் பற்றி.. இந்து காமதேனு இதழில் கட்டுரைகளாக வெளிவந்தவை. சமகாலத்தில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கிறது. சிக்கல்களைப் பற்றி மட்டும் பேசாமல் தீர்வை நோக்கி நம்மை நகர வைப்பதே இந்த நூலின் வெற்றி. 31 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.  இணையவழிக் கல்வி பற்றிய முதல் கட்டுரையில் ஆன்லைன் கல்வியினால் ஏற்பட்ட விபரீதங்களைச் சுட்டிக் காட்டி,ஒக்லஹாமா பல்கலைக்கழக உளவியல் வல்லுனர் டக்வாலன்டினா அவர்களின் மூன்று முடிவுகளையும் குறிப்பிட்டுள்ளார் . அதில் முக்கியமானது  தற்போதைய கற்கும் சூழலில்.. கற்றல் எதிர்ப்பு மனநிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுவது (Anti Education).. கொரானா காலம் தொடர்ந்தால் ஏற்படும் இடைநிற்றலைக் குறித்து கல்வியாளர்