53.தங்கம்

2021...💜💜💜💜💜
#புத்தகம் #தங்கம் 
ஆசிரியர்.. சிந்து சீனு
பதிப்பகம்.. அன்பு நிலையம்,          வேலூர்
போன் 98652 24292.
பக்கங்கள்..78
வகை..சிறுகதைத் தொகுப்பு.
🌻🌻🌻
     11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு அட்டைப்படம் எளிமையான அழகு❤.
🌻🌻
சிறுவயதில் பாட்டிகளிடம் கேட்ட நீதிக்கதைகள், தன் நண்பர்களிடம் கூறிய கற்பனை கதைகள், (பெரும்பாலும் பேய் கதைகள்) ,கோயில்களில் கேட்ட புராணக் கதைகள், மேடைகளில் கேட்ட புரட்டுக் கதைகள் எனப் பல்வேறு கதைகள் உடனே பயணிப்பவர்கள் தான் நாம் அனைவரும்.
வாழ்வில் ஒவ்வொரு நாளும் பெறும் அனுபவங்கள் பலவிதம். வசதி படைத்தோருக்கு மகிழ்ச்சியான சம்பவங்களும், எளியோருக்கு வலிமிகுந்த சம்பவங்களும் நடக்கலாம் அவ்வளவே.
🌓 அதுபோல தன் வாழ்வில் ,நண்பர்களின் வாழ்வில் நடந்தவற்றை நம் அருகில் அமர்ந்து  சொல்வதைப் போலவே இருக்கிறது அனைத்து கதைகளும்..😊

#தங்கம்👩‍❤️‍💋‍👩
புத்தகத் தலைப்பாக உள்ள தங்கம் சிறுகதை பற்றி முதலில் கூற வேண்டும் ...திருநங்கை/ நம்பிகளை ஒரு மனிதப் பிறவியாக ,சக உயிராக மதிக்க வலியுறுத்தும் கதை. கோயிலில் திருஷ்டி கழிக்க வரும் திருநங்கையைப் பார்த்தவுடன்,(தன் வீட்டின் அருகில் வளர்ந்தவர்) அன்பாகப் பேசி,உணவிட்டு கடைசியாக கூறும் வார்த்தைகள் தான்..
. //அன்னைக்கு நீ எனக்கு தம்பி.. இன்னைக்கு என் தங்கை //❤❤பேரன்பை வெளிப்படுத்துபவை. பெற்ற தாய்,தந்தையரால் ஒதுக்கப்படும் அவர்களுக்கு #அன்பு ஒன்றே தேவை என்பதை வலியுறுத்துகிறது இக்கதை.

🌻🌻
#நிருபர்
பொறியியல் படித்து வேலையில்லாமல் அலையும் பட்டதாரியின் போராட்டத்தையும், தனியார் ஊடகங்களில் பணிபுரியும் நிருபர்களின் வேதனைகளையும் விளக்குகிறது.
❤❤
#கடைசி_மகள்
 வசதியான குடும்பத்தில் வாழ்ந்து தன் முதல் இரு மக்களை திருமணம் செய்து கொடுத்த ஒரு தாய் இறுதிக்காலத்தில் வீட்டு வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார் .காதல் திருமணம் செய்த கடைசி மகளால் காக்கப்படுவதே இந்த கதை .நெகிழ்ச்சி.❤
🍼🍼
#இரண்டாவது_குழந்தை

புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பதால் கருவில் இருக்கும் குழந்தையின் நுரையீரலில் பிரச்சினை ஏற்பட்டு மரணிக்கிறது. படிப்பவர்கள் யாரேனும் ஒன்றிரண்டு பேருக்காவது இது மாற்றத்தை ஏற்படுத்தினால் மகிழ்ச்சியே .
😢இறந்த குழந்தையை ஆராய்ச்சிக்கு கேட்கிறது  ஸ்கேன் செண்டர்..முன்னேற்பாடாக முகவரியை வாங்கி வைத்துக் கொள்கிறது. அந்த ஆராய்ச்சிகளில் என்னதான் கண்டுபிடிக்கிறார்கள்? பொது மக்களுக்கு என்ன நன்மை என்று அறிய நமக்கு எத்தனை காலங்கள் ஆகுமோ தெரியவில்லை.
#அரசு_பள்ளி
போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் பள்ளி சிறுவர்களைப் பற்றிய கதை. பெற்றோர்கள் இருவரும் மருத்துவராக இருந்தாலும் எதிர்கால நலன் கருதி அரசு பள்ளியில் சேர்க்க முடிவெடுக்கிறார் தாய். போதைப் பொருட்களின் வரிசையில் செல்போனும் ,கேம்ஸ் களும் சேர்ந்து இருப்பது காலத்தின் கொடுமை. வாசிக்கவும் ,வெளியே விளையாடவும், உடல் நலத்தை பாதுகாக்கவும் இக்கதையில் உள்ள தாயை போல முயற்சி எடுக்க வேண்டும்..👍🏻

❤❤
#அவள் 
 இது ஒரு முடிவுறாத காதல் கதை
💜💜
#மலேசிய_மேஸ்திரி

இன்றும் எளியவர்களின் வறுமையைப் போக்கவும் ,வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் தன் உயிரையும் பணயம் வைத்து செல்ல முனைவது வெளிநாட்டு வேலைக்கு... ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து ஏமாறுபவர்கள் ஒரு பக்கம் ,நல்ல நண்பனின் உதவியுடன் சென்றும், உடல் ஊனமாகித் திரும்பும்  குமார் போன்றவர்கள் ஒரு பக்கம்... நடுவில் மலேசியாவைச் சுற்றிப்பார்க்கும் இடங்களையும் குமாரின் பார்வையால் விவரித்திருக்கிறார்.

🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻
#ஆசிரியர_மார்லி
நாம் சாதாரணமானவர்கள், முரட்டுத்தனமானவர்கள், என்று நினைத்து இருப்பவர்கள் திடீரென அசாதாரணமான காரியங்களைச் செய்து அசத்துவார்கள் .அதுபோலவே மகன்,மகளின்படிப்பை நிறுத்தி வயல் வேலைக்கு அனுப்பி, அவர்களுக்கு திருமணம் முடித்தவர் மார்லி.
வாழைத்தோட்டம் புயலால் வீழ்ந்ததைக் கண்டு தன் வாழ்வையே முடித்துக் கொண்ட மூத்த மகன்😢, கைக்குழந்தையுடன் மூத்த மருமகள் ,இவரைக்கண்டு சிறுவயதில் இருந்தே பயப்படும் ஆசிரியர் அவருக்கே சல்யூட் அடிக்கிறார்..🙏🏻. பெருமிதத்துடன்.. அப்படி என்னதான் செய்தார்? கதையைப் படியுங்கள்😍

🐶🐶🐶🐶
#கருப்பன் 
நாயைப் பற்றிய தகவல்கள் அதிகம் நிரம்பிய கதை. பணக்காரர்கள் நாயைச் சங்கிலியில் கட்டி வைப்பதை கல்லூரி பெண்ணின் வாயிலாக கண்டிக்கும் கதை..

🕌⛪💒🏫🛕
#ஆன்மீகம் 
இன்றைய ஆன்மிக அரசியலை அம்பலப்படுத்தும் கதை.. இரமண மகரிஷியின் வாழ்வில் நடந்த சம்பவங்களையும், பட்டினத்தாரின் சிறப்புகளையும் கூறும் இடம் சிறப்பு.
❤❤
#சுடுகாட்டுப்பாதை

சாதி, மதம் பார்க்காத சங்கரப்பாவிற்கு எளிய மனிதர்களே இறுதி யாத்திரைக்கு வலியோரை எதிர்த்துப் பாதை ஏற்படுத்தித்தரும் கதை.

🌻🌻🌻
ஒவ்வொரு கதையுமே வாழ வேண்டிய நெறிகளை வழிகாட்டும் விதத்திலும், இந்த சமூகத்தில் நடைபெறும் அவலங்களை சுட்டிக்காட்டும் விதத்திலும் அமைந்திருப்பது சிறப்பு.
🙏🏻🙏🏻🙏🏻
#நன்றிக்குரியோர்  பட்டியலில் என்னை இணைத்து ஆச்சரியப்படுத்திய ஆசிரியருக்கு நன்றி.😍
(கலைஞர்கள் சிறிய விஷயங்களுக்கு எல்லாம் உணர்ச்சி வசப்படுவார்கள் என்று இதன் மூலம் உறுதிப்படுகிறது.😊)
வாசிப்போம்..👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு