Posts

Showing posts from December, 2020

52.நுகத்தடி

Image
🙈🙉🙊🖤🖤🖤🙈🙊 🧚‍♂️🧚‍♀️🧜‍♀️👮‍♀️👮‍♀️👩‍🎓👩‍💻👩‍💻👩‍🚀👨‍🚀 புத்தகம் ..#நுகத்தடி  ஆசிரியர் ...பாண்டிய கண்ணன் . பதிப்பகம் ..#பாரதி_புத்தகாலயம் . பக்கங்கள்.. 247 வகை ..நாவல் 💜 #ஒரு_நிமிடம்_ஒரு_புத்தகம்_ஒரு_வீடியோ  நிகழ்வில் பங்கேற்றதற்காக பாரதி புத்தகாலயத்தாரால் பரிசளிக்கப்பட்டது. 🖤 புத்தகத்தின் முதல் அத்தியாயத்தைப் படித்து ...2   மாதங்களுக்கு பிறகு,  இப்போது தான் படித்தேன். 15 பக்கங்களை கடந்த பிறகு...எனக்குத் தோன்றியது😒😥  இந்த சினிமாவில் #டிஸ்கிளைமர் என்று போடுவார்கள் இல்லையா? அது போல இருதயம் பலவீனமானவர்கள் இந்த புத்தகத்தை படிக்கும் முன் மனதை #திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல் பக்கத்தில் போட்டிருக்கலாம்.  பின்பக்கத்தில் கமலாலயன் சார் கருத்தினை பிறகே படித்தேன் ..எத்தனை கொடுமைகள் எவ்வளவு ரத்தம்????🤢 🖤 செய்தித்தாள்களில் துப்புரவுத் தொழிலாளர்களின் மரணச் செய்திகளை படித்தாலே இதயம் கலங்கும். அதற்குப்பின்னால் அவர்கள் சந்திக்கும் வலி, வேதனை, சொல்லில் அடங்காத் துயரங்கள்...🌓 🖤 கதை .. துப்புரவு தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த குமார் . மனைவி சுதா  ஆகியோர

51.நன்மைகளின் கருவூலம்.

Image
🤸‍♂️🤸‍♀️🏋‍♀️🏋‍♂️🤸🤾‍♀️🤾‍♂️🤼‍♂️🤼‍♀️🏋‍♂️⛹🏂⛷🤾‍♂️🤽🤽‍♀️ ❤ புத்தகம்.. நன்மைகளின் கருவூலம்.  ஆசிரியர்கள்.. பிரியசகி, ஜோசப் ஜெயராஜ். பதிப்பகம் ..பாரதி புத்தகாலயம். பக்கங்கள் ..160 வகை ..கட்டுரை தொகுப்பு #சிறப்பு..#கவிதை_உறவு_ 2019 சிறந்த நூல்களுக்கான விழாவில் சிறந்த குழந்தை வளர்ப்பு உளவியல் நூல் என்ற பரிசைப் பெற்றது.💐💐 💜ஆசிரியர்களைப் பற்றி.. #கல்வியில்_நாடகம் பயிலரங்கில் பிரியசகி அவர்களை முதன்முதலாக சந்தித்தேன் . பழகுவதற்கு இனியவர். #கற்றல்_குறைபாடுள்ள_ குழந்தைகளுக்கான அடுத்த பயிலரங்கில் இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் அக்கறையுடன் பொறுமையாக பதில் அளித்த விதம், உளவியல் சிந்தனைகளை நம் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் உடன் இணைந்து நடத்திய விதம் இந்த புத்தகத்தை உடனே படிக்க தூண்டியது. அதே பயிலரங்கின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மற்றொரு ஆசிரியர் ஜோசப் ஜெயராஜ் அவர்களும் உளவியலாளர், பயிற்சிப்பட்டறை நிபுணர் .எளிமையான சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கங்களை அளிக்கிறார். இருவருக்கும் எனது

50.தமிழர் தலைவர்

Image
50🌞🌞🌞🌞🌞🌞🌞50 💙💙💙💜💜💜💜💜 புத்தகம்..#தமிழர்_தலைவர் .பாகம் 1 ஆசிரியர் ..சாமி. சிதம்பரனார். பதிப்பகம் ...பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம். பக்கங்கள்.. 300 💖 ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன்பு வாங்கிய புத்தகம். வாழ்க்கை வரலாறு என்றாலே படிப்பதற்கு அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது என்றும், பிறகு படித்துக் கொள்ளலாம் என்றும் ஒதுக்கி வைத்து விடுவேன் . #மாபெரும்_தமிழ்_கனவு  படித்ததன் விளைவாக #பேரறிஞர் இதனைப் படிக்க வைத்துவிட்டார் . இந்த நூலின் இன்னொரு சிறப்பம்சம் நூலாசிரியர் எழுதியவற்றை, பெரியாரே படித்துப்பார்த்து திருத்தம் செய்து இருக்கிறார் .(முதல் பதிப்பு 1939). தமிழர் தலைவர்,  பெற்றோர் பெருமை எனத் தொடங்கிப் பெரியார்  வரை பதினெட்டு கட்டுரைகளில் அவருடைய முடிவுறாத வாழ்க்கை பயணத்தை விவரித்திருக்கிறார் ஆசிரியர். ❤ //சதாசர்வ காலமும் எங்கள் வீட்டில் இருசமய பக்தர்களாலும், பண்டிதர்களாலும்  காலட்சேபம் செய்யப்பட்டு வந்தது.// இது பெரியார் அவர்களே தம் குடும்பத்தைப் பற்றிக்   குறிப்பிட்டவை. #அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே... அதனால்தான் பெரியார் சிறிய வயதிலேயே தனது

49.தாயுமானவள்

Image
👰👰👰🌍🌎🌏👰👰👰 💜💙💜💙💜💙 புத்தகம். .#தாயுமானவள்  ஆசிரியர் .#நாகூர்ரூமி  வகை ...நாவல் பக்கங்கள் ..112  பதிப்பகம் .LKM பப்ளிகேஷன், தி.நகர். வேலூர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் வாங்கியது. 💖கதையைப் பற்றி.. தாயை இழந்து பாட்டியால் வளர்க்கப்பட்ட மகனின் கதை.. இல்லை அந்த மகனை சிரமங்களுக்கு இடையில் வளர்த்த பாட்டியின் கதை என்பதே சரி❤  நாவலாசிரியர் தன் பாட்டியோடு பெற்றுக்கொண்ட மறக்கமுடியாத அனுபவங்களையே கதையாக எழுதியுள்ளார். இஸ்லாமிய  குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்துகிறார்.  🏃‍♂️🤺🕺🧘‍♂️ திண்ணை தாண்டுதல், பொன்வண்டு,கோலி விளையாடுதல்,நெல்  பத்தாயம், பேருந்தில் அரை டிக்கெட் எடுக்க... என்பது போன்ற பழைய கால நினைவுகளை மீட்டு எடுக்கிறது. ❤ தாய் இறந்தது புரியாத வயதில் //ம்மி தூங்குது// என்று கூறுவது ,வவ்வா மீன் விலை பேசுவது, மௌலது ஓதும் நிகழ்ச்சி, நில வழக்கு என சோகம் ,நகைச்சுவை, வலி என அனைத்து உணர்ச்சிக் குவியல்களோடு கதை நகர்கிறது. ❤ பாட்டியின் நிர்வாகத்தை Repaying capacity, resources என ஒப்பிட்டு எழுதி இருப்பது சிறப்பு.  பால்ய காலத்தை மீண்டுமொருமுறை அனுபவிக்கவும் ,எள்ளல் நடைய

48.அழகோ அழகு

Image
🌍🌎🌏🌏🌏🌏🌏💜💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙 புத்தகம் ..#அழகோ_அழகு ஆசிரியர்.. . வெ.இறையன்பு வகை ..சிறுகதை தொகுப்பு பக்கங்கள் ..116 #பேசும்_புத்தகம் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகத் தேர்ந்தெடுத்த புத்தகம். (இதில் நேர்மை என்னும் சிறுகதையைத் தான் தேர்ந்தெடுத்தேன்.) 14 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.  ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதி.#அழகோ_அழகு சிறுகதையில்  " புற அழகை விட அறிவு தரும் அழகு நிரந்தரம் "என்பது போல ஒவ்வொரு கதையும் ஒரு படிப்பினையைத் தருவதாக அமைந்துள்ளது.  ❤ கதைகளின் சுருக்கத்தை விட ஒவ்வொரு கதையிலும் என்னைக் கவர்ந்த சில வரிகளை இங்கு பதிவிட விரும்புகிறேன்.. ❤ #எட்டாவது_மலை_படைப்பிரிவு //சோகத்தை தகவலாக அளிப்பவனின்  துயரம்.. அனுபவிப்பவன்  துயரத்திலும் அதிகம்.// ❤ #இறந்தால்_ஆயிரம்  //மூல நிர்வாகத்திலிருந்து ஒதுக்கப்படுவதில்  உள்ள மிகப் பெரிய தண்டனையே ஒதுக்கப்பட்டவர்களே உதவுவதற்காக ஒதுக்கப் படுவார்கள் என்பது தான்//🙄 ❤ #கைமுறுக்குகாரி //நிராயுதபாணியாக நின்ற போதே சமாளித்துக் கொண்டு ,எழுந்து நின்று போராடி ஆகிவிட்டது ..இப்போது இதுநாள்வரை சேகரித்த அனுபவமும் பெயரும் உழைப்பும்....

47.விடியலை நோக்கி

Image
💙💜💙💜🌳🌳🌳🌳🌳🌞🌞🌞🌞☀️ புத்தகம்... #விடியலைநோக்கி  ஆசிரியர் ..சிந்து சீனு  பக்கங்கள் _ 84  பதிப்பகம் ..அன்பு நிலையம் ,வேலூர்  வகை.. சிறுகதை தொகுப்பு. சாரல் புத்தக மையம் நந்தகுமார் அவர்கள் அனுப்பிய புத்தகம். அம்மாவின் பிறந்தநாள் என்ற கவிதைத் தொகுப்போடு இச்சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார் . ஆசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இதில் 9 சிறுகதைகள் உள்ளன. தூத்துக்குடி வ .உ. சிதம்பரம் கல்லூரி தமிழ் பேராசிரியர்.. முதுமுனைவர். ஐயப்பன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். ❤#புதைந்த_மனிதர்கள்  முதல் சிறுகதை கேரளாவில் டீ எஸ்டேட்டிற்கு  வேலைக்குச் சென்று நிலச்சரிவில் மறைந்த மனிதர்களின் கதையைப் பேசுகிறது. 🎈#அப்பாவின்_வழியில் மகனும் மரத்திற்காகவும், மண்ணிற்காகவும் கொடியேந்தும் கதை. ❤#கிரிவலம் தங்கையின் குடும்பத்தோடு கிரிவலம் சென்று அல்லல்பட்டு திரும்பும் குடும்பத் தலைவனின் கதை. கடைசியில் அப்பாவின் வார்த்தைகள்// அண்டத்திற்கு அப்பாலுள்ள சுடரினை பிண்டத்துள் காண்பாயடி//  நிதர்சனம்.🙏🏻 ❤#முருகன்_முடி_திருத்தகம்.. இக்கதையும் உடன்பிறந்தோர்க்காக பாடுபடும் எளிய மனிதனின் வலியை

46.அம்மாவின் பிறந்த நாள்

Image
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳💙💙🌳🌳🌳 புத்தகம் ..#அம்மாவின்_பிறந்த_நாள்  ஆசிரியர்.#சிந்து_சீனு  வகை - #கவிதைத்தொகுப்பு பக்கங்கள்.. 72  பதிப்பகம்..அன்பு நிலையம், வேலூர்.   சாரல் புத்தக மையம் 'நந்தகுமார்' அவர்கள் அனுப்பியது . எனது மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி .ஆசிரியரின் முதல் முயற்சி . நம் வாழ்க்கையில் சந்திக்கும் நபர்களை நிகழ்வுகளை ஒரு டைரிக் குறிப்பில் எழுதி வைப்போம் அல்லவா, அதுபோல ஆசிரியர் அவற்றை கவிதை நடையில் எழுதி வைத்துள்ளார் அறிவொளி இயக்க காலம் தொட்டு தற்போதைய காலம் வரை கவிதைகளில் இடம்பெற்றுள்ளன. 💖 //தராசு  இரண்டு பக்கம் சரியாக இருந்தாலும்  இருக்கத்தான் செய்கிறது  கலப்படம்//   நச்சென்ற சில கவிதைகள் ..இது போன்று குறுகிய வரிகளிலேயே தனது கருத்தை வெளிப்படுத்த முடிந்தாலும் பல கவிதைகள் விரிவாகவே பதிவு செய்யப்பட்டு உள்ளன. உதாரணமாக .. *விவசாயிகள் போராட்டம்,  *அரசுப்பள்ளி மாணவிக்கு ஆறுதல்,  *எரிவாயு குழாய் விவசாய நிலத்தில்,.., *வாக்காளர்கள்-பிராய்லர் கோழிகள், *தொலைக்காட்சியில் ஜோதிட நிகழ்ச்சி ...எனப் பல.. //கோபம் வரத்தான் செய்கிறது . 2

45.புயலிலே ஒரு தோணி

Image
🛥⛴🛳🚤🛶⛵⚓💙💜💙💜⚓ #நாவல்  புத்தகம் ..#புயலிலே_ஒரு_தோணி #ஆசிரியர்_பசிங்காரம்.  பக்கங்கள்.. 318 வகை..நாவல் பதிப்பகம்... டிஸ்கவரி புக் பேலஸ். ❤ எனது முதல் பார்வையில்..(ஏனெனில்  பலமுறை வாசிக்கத் தகுந்த நூல்) நாவலைப் பற்றி விமர்சனம் வந்ததா? என்ற கேள்விக்கு ஆசிரியரின் பதில்.. //  ஒரு பாத்திரம்  தன் மனத்துக்குள் யோசிப்பதை எழுதும்போது ஒற்றை குறிக்குள் போடலைங்கிறதுக்காக  'கண்ணதாசன்' பத்திரிகையில் ஒருத்தர் யார் யாரிடம் பேசுறாங்க என்பதுகூட புரிதலை..  குழப்பமாயிருக்குன்னுனுஎழுதியிருந்தார். நம்ம ஆளுகளுக்கு எல்லாத்தையும் வெளிப்படையா பெருவெட்டாகச் சொல்லணும் தமிழ்ல dash -க்கும் hyphen _க்கும்  வித்தியாசமே பலருக்கு புரியல //ஆசிரியரோட வருத்தத்தை  வெளிப்படுத்திய வரிகள்! இது போன்ற சிறந்த கலைப்படைப்புகளை வாசிக்கும் ஒருமுறை மட்டுமே வாசித்து கருத்து சொல்லவே முடியாது. முதல் இரண்டு  அத்தியாயங்களை படிக்கும்போது புதிய, பல மொழி சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் சிலருக்கு அப்படித் தோன்றலாம்.  புலம் பெயர்ந்த மனிதர்களின் மனம் எவ்வளவு தான் வசதிகளை அனுபவித்தாலும், தாய்நாட்டின் நினைவலைகளில் ஊசலா

44.கடலுக்கு அப்பால்

Image
❤❤❤❤❤❤❤❤❤❤ ⛵⛵⛵⛴🛳🛶🚤🛥⚓ #கிளாசிக் வகை.. நாவல் புத்தகம.. கடலுக்கு அப்பால் ஆசிரியர்..#ப.சிங்காரம்  பதிப்பகம்..டிஸ்கவரி புக் பேலஸ்  பக்கங்கள்.. 196 💙 ஆசிரியரைப் பற்றி  மதுரை  சிங்கம்புணரியைச் சேர்ந்தவர். கடலுக்கு அப்பால்(1950) புயலிலே ஒரு தோணி(1962) என்ற இரண்டு  நாவல்களை மட்டுமே படைத்தவர்.   அவரது நூல்களை வெளியிடுவதில் பெற்ற கசப்பான அனுபவங்களால் எழுத்தையே நிராகரித்திருக்கிறார் இறுதிக்காலம் வரை புகழ் வெளிச்சத்திற்கு வராதவர் முதல் புலம்பெயர்ந்த நாவலை எழுதிய சாதனையாளர் கடைசியாக ஒரு நேர்காணலுக்குக் கூட மறுத்திருக்கிறார்.அவருக்கு பிடித்த நாவல் எனக் குறிப்பிட்டிருப்பது #ஹெமிங்வேயோட ."எ ஃபேர்வெல் டூ ஆர்ம்ஸ்". 💙கதையைப் பற்றி... புலம்பெயர்தல் என்பது சமூக வளர்ச்சிக்காக ,அல்லது தனிமனித  வளர்ச்சிக்காக  என்று இருந்தால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும், ஆனால் வறுமையால் வாடிய நிலையிலும், போர் காரணங்களுக்காகவும் தாயகத்தை விட்டு செல்லும் புலம்பெயர்  மனிதர்கள்தான் தற்போது அதிகமாக இருப்பார்கள். கிராமத்திலிருந்து நகரத்திற்கு பிழைப்பிற்காக வந்தவர்களே தாம் பிறந்து,வளர்ந்த இடத்தை இழந்த ஏக்க

43.பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும்

Image
👧👨‍🦱👩‍🦱👩‍🦳👨‍🍳👩‍🔧👩‍🔬👩‍💻👩‍✈️🕵‍♀️💂‍♂️🤰👰 புத்தகம்..பெண்ணியம் வரலாறும், கோட்பாடுகளும்.  ஆசிரியர்கள்.. சாரா காம்பிள்_ டோரில் மோய்  தமிழில்#ராஜ்கௌதமன் வகை..கட்டுரைத்தொகுப்பு பக்கங்கள்.. 108 👩‍💻இது ஒரு மொழிபெயர்ப்பு நூல்.பெண்ணியம் தொடர்பாக தேடிய போது கூகுள் பரிந்துரைத்த நூல். ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியது. படிப்பதற்கு மிகவும் பொறுமை தேவைப்படும் புத்தகம்.😔  முதல் பகுதி தொடக்ககால பெண்ணியம் (ஸ்டீபன் ஹாட்ஜ்ஸன்  ரைட்) இரண்டாவது கட்டுரையான முதலாம் அலை பெண்ணியம் (வேலரி ஸாண்டர்ஸ்),மூன்றாவது கட்டுரை .. இரண்டாம் அலைப் பெண்ணியம் (சூ தார்ன்ஹம்),நான்காவதாக.. பின்னைப்பெண்ணியம்(சாரா) கட்டுரையோடு அனைத்தையும் தொகுத்து சாரா காம்பிள் அவர்கள் கொடுத்துள்ளார்கள்.  16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்துதான் முதன்முதலாக பெண்கள் தங்கள் சொந்த குரலில் விவாதிக்க தொடங்கி இருக்கிறார்கள். தந்தை வழி சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக பெண்கள் திரட்டிய மகளிர் குழுமங்கள் , மீட்புவாதம் ஆகியவற்றை  விவரிக்கின்றன.  ❤1850 முதல் 1860 வரை இங்கிலாந்தில் விக்டோரியா ராணி காலத்து பெண்களுக்கு பெண்ணிய செயல்பா

42.குக்கூ

Image
🌴🌴🌴💙💜💙😍😍😍 #கவிதைத் தொகுப்பு  புத்தகம்..#குக்கூ ஆசிரியர்..மீரா(மீ.இராசேந்திரன்) வகை..கவிதை தொகுப்பு  பக்கங்கள்..152  ✒ஆசிரியரைப்பற்றி..... கவிஞர் மீராவைத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்தவர் அறிஞர் அண்ணா. மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர் மீராவின் கனவுகளில் ஒன்று பெங்குயின் நிறுவனம் போல புத்தகங்கள் வெளியிடுவது .அதைப் போலவே அவர் அன்னம் பதிப்பகம் மூலம் பல கவிதை நூல்களையும், பல சிறந்த நூல்களையும் வெளியிட்டுள்ளார். மீராவின் கனவுகள்+ கற்பனைகள்= காகிதங்கள் ,கவிதைத் தொகுதி எழுபதுகளில் இளைஞர்கள் பலரின் தூக்கத்தை கெடுத்தது . அவரது கனவுகளில் காவிரியை போலவே வால்கா நதியும் கரை புரண்டு ஓடியது .தமிழ் கவிஞர் பலர் மீராவை தொடர்ந்து தாம் நேசித்த நாடுகளை தம் அன்னையாய், தோழியாய், தோழனைப் பாடி தமிழ்க் கவிதை உலகில் புதுமையைப் புகுத்தினர்.  ' ஊசிகள்' மீராவின் குறும்பாக்கள் தொகுதி. ❤ஹைக்கூ எனும் ஜப்பானியக் கவிதை வடிவத்தை தமிழில் ஒரு புதிய வடிவமாக தனித்தன்மையுடன் பின் பற்றி எழுதப்பட்டுள்ளது.  ❤ சிறிய வடிவம் படிமக் காட்சிகள்,பிராணிகளின் செயல்கள் மூலமாக வாழ்வின் வினோதங்களை வெளிப்பட

41.பச்சைக் கனவு *லா.ச.ரா

Image
🌳🌳🌳🍁🍁🌲🪴🌱☘🍂🍃🌴🌾🌿🌳🌳 புத்தகம்- பச்சைக் கனவு  ஆசிரியர்-- #லா.ச.ராமாமிருதம். #வகை -- சிறுகதைகள் பக்கங்கள்-- 200  ❤கிண்டிலில் படித்தது .11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஏறக்குறைய பதினைந்து வருட கனவுகள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார் முன்னுரையிலேயே கனவின் நாடகத்தில் யாரோ தன்னை இழுக்கிறார்கள். சரணடைய கை கூப்பி எதிரே பார்த்தால் அத்தனை முகமும் அதே முகம். அவருக்கும் அதே முகம் 😊அடையாளம் உதயமாகிறது🙏🏻 ஆனந்தக்கூத்தன் ஆகிறார். அந்த முகத்தை அனைவரும் காணவே தன் கதைகளில் மனித மனங்களின் நுண் உணர்வுகளை வாழ்க்கைச் சம்பவங்களில் நமக்கு விவரிக்கிறார் . ❤தெரியும் வரை கனவு காண்பாய் தெரிந்தபின் களவு காண்பாய். கனவு காட்டும் களவின் உளவுமுகம் கண்டு கொண்டதும் நீயும் ஆனந்தக் கூத்தனாகி விடுவாய்.#பிறகு_யாரைப்_பற்றி_உனக்கென்ன_?   ❤💙💃💃💃❤❤💙 #பச்சைக்_கனவு முதல் கதையிலேயே எத்தனை திருப்பங்கள்🌲 ஏன் சூரிய ஒளி ,நிலவின் ஒளி இரண்டுமே பச்சை நிறமாக தெரிகிறது  என்று பார்த்தால் அவருக்குக்  கண் பார்வை இல்லை. பத்து வயதில் தாயை இழந்து, பின் கண்ணை இழந்த திருப்பம். கேட்கும் திறன், பேசும் திறன் அற்ற மனைவி அ

40.என் சிவப்பு பால்பால்பாயிண்ட் பேனா

Image
❤👨‍🚀👩‍🚀🧑‍💻👩‍💻🧑‍💻👩‍💻🧑‍💻👩‍💻🧑‍💻 #கல்வி _ புத்தகம் ..என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா  ஆசிரியர்..#ச_மாடசாமி . பதிப்பகம்...பாரதி புத்தகாலயம். பக்கங்கள் ..80 👨‍🏫தமிழகத்தின் குறிப்பிடத்தக்க கல்வியாளர்களின் ஒருவரே இந்த புத்தகத்தின் ஆசிரியர்.எனக்குரிய இடம் எங்கே? படித்ததிலிருந்து இப்புத்தகத்தை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து, வாசிக்கும் ஆசிரியர்கள் தங்களை சுயமதிப்பீடு செய்து கொள்ள வைக்கும் விதமாக எழுதி இருக்கிறார்.  கல்லூரி,பள்ளி என்று களம் வேறாயினும்   மாணவர்களின் நலன் ஒன்றே குறிக்கோள். சிவப்பு பால்பாயிண்ட் பேனா பயன்படுத்தும் போதெல்லாம் கண்டிப்பாக இந்த கட்டுரை நினைவு வரும். தொடக்க நிலையில் என்ன ஒரு வசதி என்றால் குழந்தைகள் விரைவில் மறந்து நம்முடன் சேர்ந்து கொள்வார்கள்.பதின்ம வயது  குழந்தைகளைக் கையாளும் ஆசிரியர் குறிப்பிடுவது போன்று சிவப்பு பால்பாயிண்ட் பேனாவை அதிகாரம் அற்றதாக மாற்றுவது அவசியம்.🤝🏻 *இரண்டாவது கட்டுரை அவமதிப்பு பற்றியது.. நாம் கவுண்டமணி_ செந்தில் நகைச்சுவைக் காட்சிகளைப்  பார்த்து வளர்ந்தவர்கள். நகைச்சு

39.டோட்டா_சான்

Image
🧍🧍‍♂️🧍‍♀️💜💙❤🤍🧍‍♂️🧍‍♀️🧍🏃🏌‍♀️🚶‍♀️🚶‍♂️💃💃 #குழந்தைகள்_கல்வி தொடர்பானவை புத்தகம்__ #டோட்டா_சான் ...ஜன்னலில் ஒரு சிறுமி. ஆசிரியர்..  #டெட்சுகோ_குரோயா_நாகி. தமிழில் ..வள்ளிநாயகம்  சொ. பிரபாகரன்.. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு பக்கங்கள் _  160.   *பள்ளி நூலகத்தில் உள்ள முக்கியமான நூல்* 💙குழந்தைகளுக்கான உளவியலை எவ்வளவுதான் படித்திருந்தாலும் நாம் அடிக்கடி #ஆசிரியராகவே மாறி விடுகிறோம். குழந்தைகளின் பார்வையில் இருந்து பார்க்கத் தவறி விடுகிறோம். குறும்பு செய்யும் குழந்தைகள் இல்லாத வகுப்பறையை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அவர்களைக்  கையாளும்போது உடலால் துன்புறுத்தவில்லை என்றாலும் மனதளவில் ஆவது அவர்களைத் துன்புறுத்தி தான் அடக்கி வைப்போம் . ஒழுக்க நெறிகள், பாடத்திட்டம், கண்டிப்பான ஆசிரியர் தான் நல்ல ஆசிரியர் என்ற எண்ணப்போக்கு, என எத்தனையோ காரணங்கள் நமக்கு. ஆனால் குழந்தையின் பார்வையில்??😕 😎தன்னுடைய குறும்புத்தனங்களால் முதல் வகுப்பிலேயே  பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட  சிறுமிதான் இந்த நூலின் ஆசிரியர். இரண்டாம் உலக யுத்த காலத்தில் டோக்கியோவில் இருந்த ஒரு முன்மாதிரியான

38.அருணா இன் வியன்னா

Image
💃💃💃💃💃💃💃❤💜💙❤💃💃💃 #பயணம்.  புத்தகம்..#அருணா 'இன்' வியன்னா. ஆசிரியர்..#அருணாராஜ் பக்கங்கள்.. 116  ❤கிண்டிலில் படித்தது. அருணா, பவித்ரா, பிரசன்னா, ஸ்வர்ணா என கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நான்கு பள்ளித் தோழிகள் திருமணத்திற்குப் பிறகு  ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா  சென்று வந்த கதை❤  ✈பயணக்கட்டுரைகள் ஆக இல்லாமல் ஒரு தோழியுடன் நேரில் அனுபவங்களை கேட்டு ரசித்து, சிரித்து, மகிழ்ந்த அனுபவத்தை தருகிறது இப்புத்தகம். #இடங்கள்.. ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட், ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா, மற்றும் செக்  ரிபப்ளிக் இன் தலைநகர் பிராக்.🌍 😍ஆரம்பமே அதகளம் தான் .வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார் வீட்டில் அனுமதி வாங்குவதில் இருந்து விசா வாங்குவது வரை.. ஏர்போர்ட்டில் நான்காவது டெர்மினல் வழியாக வரச்சொன்ன தோழி ,இரண்டாவது டெர்மினலில் உள்ளே நுழைந்து இரண்டு பேரும் ஒன்று சேர்வது, விமானத்தில் கொடுக்கப்படும் உணவு வரை எழுதி இரண்டாவது ரவுண்டு சிரிக்க வைக்கிறார். (அவங்களுக்கு கஷ்டம் நமக்கு சிரிப்பு🤪) #புடாபெஸ்ட்..  🎈அப்பார்ட்மெண்ட் பங்களா காம்பவுண்ட் உள்ளே நுழைய, கட்டடத்துக்கு உள்ளே நுழைய, ப

37.அருகர்களின் பாதை

Image
🙏🤍🙏🤍🙏🤍🙏🤍🙏🤍💙💙💜💙 புத்தகம் ..அருகர்களின் பாதை . ஆசிரியர்..ஜெயமோகன் பதிப்பகம்.. கிழக்கு பதிப்பகம் பக்கங்கள்.. 270 . #பயணம்  🛤️பயணங்கள் நம் பார்வையை விசாலமாக்குபவை. மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியவை😍 ஆன்மீகம், சுற்றுலா, வேலை ,உறவு என பல காரணங்களுடன் பயணிக்கிறோம் .பலவித மனிதர்களை நமக்கு பயணம் அறிமுகப்படுத்துகின்றது .கேட்டால் மட்டுமே உதவி செய்யும் சிலர், கேளாமலே தேடிவந்து உதவும் சிலர், சுயநலத்தோடு சிலர் எனப் பலரை அறிமுகப் படுத்தி வாழ்க்கைப் பாடங்களை நமக்கே தெரியாமல் நடத்தி விடும்.❤ #புத்தகத்தைப்_பற்றி ஆசிரியர் தன் நண்பர்களுடன் ஒரு மாதம் ஈரோடு முதல் ராஜஸ்தான் வரை உள்ள சமண தலங்களுக்குப் பயணித்திருக்கிறார். அந்த பயணக்குறிப்புகள்  தான் இப்புத்தகம். இணையத்தில் முதலில் வெளியிடப்பட்டுள்ளது. 🚘பத்தாம் வகுப்பில் படித்ததோடு  நின்று விட்டது என்  வரலாற்று அறிவு.  2018 ல் கயா சென்றபோது (மறதி அதிகரித்து விட்டது என்ற ஞானோதயம்.. 🤪)புத்தரைப் பற்றி தேடிப் படிக்க வேண்டும் என நினைத்தேன். இன்னும் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை. மகாவீரர் பற்றிய இந்தப் புத்தகத்தால் இணையத்தில் தேடிப்பி

36.மாபெரும் தமிழ்க் கனவு

Image
❤🙏❤🧍❤🙏🙏❤❤🙏🙏❤❤ புத்தகம் .#மாபெரும்_ _தமிழ் _கனவு . தொகுப்பு ஆசிரியர்_சமஸ்  பதிப்பகம் _#இந்து_ _தமிழ்_திசை . பக்கங்கள்.. 800 #பேரறிஞர் அண்ணா_ பேராளுமை . ❤என் தாத்தாவின் மூலம் அறிமுகம். வழக்கமாக எல்லா தாத்தாக்களையும் போல 1925 நீதிக்கட்சியில் ஆரம்பித்து தான் தற்காலத்து நிகழ்ச்சியில் வந்து திமுகவின் கதையை முடிப்பார்.😍 இரண்டாவதாக  ஆசிரியர் பயிற்சி படிக்கும்போது அண்ணாவின் உரையைப் (ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் வந்தது என்று நினைக்கிறேன்)பேசப் போவதாகச் சொன்னேன். உடனே என்னுடைய பேராசிரியர் பஷீர் சார் எத்தனை நிமிடம் ?10 நிமிடம் என்றால் எவ்வளவு படிக்க வேண்டும் தெரியுமா? நொடி முள் 10 முறை முழு சுற்று சுற்ற வேண்டும்🙄 என்று பயமுறுத்தி பின்  நல்ல உரையை தேர்வு செய்திருக்கிறாய் 👍 முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னார். ❤ ❤அண்ணாவைப் பற்றியும் அவரின் கனவுக்காக ஆற்றிய பணிகள் பற்றியும் மணிக்கணக்காக, நாட்கணக்காக, மட்டுமல்ல வருடக்கணக்காக பேசுவதற்கான தகவல் பெட்டகமே இந்த புத்தகம்💕🌅. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அனைவருக்குமே மலைப்பை  தரும் அண்ணாவின் ஆளுமையை பார்த்து... ❤அண்ணாவின் பேச்ச

35.வாழும் மூதாதையர்கள்

Image
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍 #வரலாறு ❤❤❤❤ #புத்தகம்_வாழும்_ மூதாதையர்கள்.( தமிழகப் பழங்குடி மக்கள்) #ஆசிரியர்_ முனைவர்.அ. #பகத்சிங் #பதிப்பகம் _உயிர் பதிப்பகம். *பக்கங்கள்._.178 ❤இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் உயிர் இதழில் வெளிவந்தவை இவற்றில் உள்ள  ஒளிப்படங்கள் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளன.  பழங்குடி மக்களான  👨‍👩‍👧‍👧இருளர்கள், 👨‍👩‍👧‍👧ஆனைமலை காடர்கள் , 👨‍👩‍👧‍👧அகத்தியமலை காணிகள் , 👨‍👩‍👧‍👧காடுகளின் நாயகர்கள், 👨‍👩‍👧‍👧 கோத்தர்கள், 👨‍👩‍👧‍👧நீலகிரி  குறும்பர்கள், 👨‍👨‍👧‍👧 கிழக்குத் தொடர்ச்சி மலை மலையாளிகள், 👨‍👩‍👧‍👧 பாண்டியநாட்டு முதுவர்கள்,  👨‍👩‍👧‍👧பளியர், 👨‍👩‍👧‍👧பணியர் 👨‍👩‍👧‍👧சத்தியமங்கலம் சோளகர்கள்,  மற்றும் 👨‍👩‍👧‍👧தோடர்கள் என 13 வகை பழங்குடிகளை பற்றிய வாழ்வியலைச் சொல்லும் ஆய்வுக் கட்டுரைகள் இவை. ஆசிரியர்  பகத்சிங் பழங்குடிகள் குறித்த ஆய்விற்காக மேற்கொண்ட பயணங்களின் மூலம் அவர்கள் பண்பாடு,  நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதோடு அவர்கள்  தற்காலத்தில் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களையும் எடுத்துரைக்கிறார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 36 பழங்குடிகளி

34.சமூக நீதிக்கான அறப்போர்

Image
👨‍🦽👩‍🦼🧑‍🦼🏌‍♀️🏃🏂👨‍🦯🚶‍♀️🚶‍♂️🚶🧍‍♂️🧍‍♀️🧍 # சமூக நீதி. #புத்தகம்__ #சமூகநீதிக்கான_அறப்போர் .( நலிந்தோர் நலனுக்காக ஒரு வாழ்வின் அர்ப்பணம்) ஆசிரியர் ..#முனைவர்.வே.வசந்திதேவி . தமிழில் ..ஆனந்தன். பதிப்பகம் _சவுத் விஷன் புக்ஸ் பக்கங்கள்_560 ❤ இந்திய அரசின் முன்னாள் செயலாளர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி எஸ் கிருஷ்ணன் அவர்களுடன் உரையாடல். #41 கேள்விகளுக்கான பதில்கள் என்ற அடிப்படையில் இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. ❤ மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் பள்ளிக்  கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான வசந்தி தேவி அம்மா அவர்கள் பி எஸ் கிருஷ்ணனின் "சாதி ஒழிப்புக்கான சென்னை பிரகடனம் "என்ற நூலுக்காக அறிமுக உரையை எழுதுவதற்காக கிருஷ்ணன் அவர்களிடம் கேட்ட கேள்விகளுக்கான பதில்களே "A Crusade for Social Justice " என்ற ஆங்கிலப் புத்தகம். இதன் மொழிபெயர்ப்பு தான் இப்புத்தகம் .❤யாருக்காக இந்தப் புத்தகம்? 💜 மனித உரிமைகள் மீதும் இந்தியர்களின் சமூக ரீதியான முன்னேற்றம் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கும். // இந்திய ஆட்சிப் பணி

33.ஏழாவது அறிவு

Image
💜💜💜💜💜🎈🎈🎈 #சுய_முன்னேற்றம் #புத்தகம்_ _#ஏழாவது_அறிவு (முதல்பாகம்).  ஆசிரியர்_ இறையன்பு ஐஏஎஸ் வகை ..கட்டுரைத் தொகுப்பு. பக்கங்கள்.. 268    2012 ல் எனது மகள் பரிசளித்த புத்தகம். பொதுவாக நான் சுயமுன்னேற்ற நூல்களை விரும்பிப் படிப்பதில்லை .(ஏன்னா,Follow பண்றது ரொம்ப கஷ்டங்க😍அதனால தான்).ஆகவே,🙃  இப்போதுதான் முழுமையாக படித்து முடித்தேன். ❤   புத்தகத்தைப் பற்றி... இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் சென்னை வானொலி பண்பலையில்  " இன்று பிறப்போம் புதிதாய்" என்னும் தலைப்பில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இந்த நூல். ஆகும் .இதில்  70 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.   இந்த கட்டுரைகளை நாம் படிக்கும்போது இறையன்பு அவர்களின் குரலில் கேட்பது போலவே இருக்கின்றது.தென்கச்சி ஐயாவையும் நினைவூட்டுகிறது.  ஒவ்வொரு கட்டுரையும் வித்தியாசமான  கருத்துக்களைக் கொண்டுள்ளது. எதிர்மறைச்சிந்தனை,பயம்,வாழ்க்கை,சுயம் என பல தலைப்புகள் . 💙💙 //லியோனார்டோ டாவின்சியின் புகழ்பெற்ற ஓவியமான 'Last supper ' ல் இயேசுவுக்கு மாடலாக இருந்த இளைஞன் Pietro Bandinelli பல வருடங்கள் கழித்து  யூதாஸுக்கும்  மாடலாக இருந்தான்.மனிதர்க

32.ஒற்றை வைக்கோல் புரட்சி..மசானபு ஃபுகோகா

Image
*சூழலியல்* 🌏🌏🌏🌏🌐🌱🍁🍀🍃🍂🌼🌻🌏🌏🌏 பக்கங்கள்..202 புத்தகம்_ #ஒற்றை_வைக்கோல்_ புரட்சி  ஆசிரியர்_ #மசானபு ஃபுகோகா தமிழில் #நம்மாழ்வார் தாசன்.  கிண்டிலில் படித்தது . ❤ஜப்பானைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானி அவருடைய அனுபவங்களை லாரி கோர்ன் அவர்கள் ஃபுகோகாவின் வார்த்தைகளாலேயே 🌾தொகுத்திருக்கிறார் ஆங்கிலத்தில்.  🌾🌾🌾 சிறுவயதில் இருந்தே விவசாயத்தை பார்த்து வளர்ந்தவர்கள் கூட வைக்கோலை வயலில் போடும் காட்சியை நாம் பார்த்திருக்க மாட்டோம் ஆனால், ஃபுகோகா  அவர்கள் வைக்கோலை வயலில் பரப்பி உரமாக மாற்றி, நீரை குறைவாகப் பயன்படுத்தி உரங்களை பயன்படுத்தாமல் மகசூலை கண்டு வெற்றி பெற்று இருக்கிறார். 🌾🌾 ஆராய்ச்சிகள் மூலமும் கண்டுபிடிப்புகள் மூலமும் இயற்கையை விட சிறந்த ஒன்றை கண்டுபிடிக்கும் என நம்புவது ஒரு மாயை என்கிறார் ஆசிரியர். 🌾🌾🌾 //"சரியான உணவு, சரியான செயல், சரியான விழிப்புணர்வு." இம்மூன்றும் ஒன்றிடம் இருந்து ஒன்று பிரித்துவிட முடியாதவை இதில் ஒன்று இல்லாவிட்டால் எதையும் உணர முடியாது ஒன்றை உணர்ந்து விட்டால் எல்லாமே புரிந்துவிடும் இதுவும் ஆசிரியரின் கருத்தே. இது வேளாண்மை பற்றி மட்டும

31.கண்டதச் சொல்றேன் ..T.S.கிருஷ்ணவேல்

Image
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈 🎁🎁🎁🎁🎁🎁🎁 31/100 புத்தகம்_ #கண்டத_சொல்றேன். ஆசிரியர் _டி .எஸ். கிருஷ்ண வேல். பக்கங்கள் _90 . வகை _கட்டுரை தொகுப்பு   வெளியீடு_ தமிழ்நூல் மன்றம். ❤ நமது "வாசிப்பை நேசிப்போம்" குழுமத்திலிருந்து எனக்கு கிடைத்த முதல் புத்தகப் பரிசு❤📚❤ குழுவிற்கும், இப்புத்தகத்தின் ஆசிரியருக்கும் நன்றி🙏🏻  இப்புத்தகம் 15 கட்டுரைகளைக் கொண்டது.  🔎🔎முன்னுரையில் சொல்லப்பட்டது போலவே தெரிந்த செய்திகளில் மேலும் பல கூடுதல் தகவல்களை சேர்த்துள்ளார். 📚 முதல் கட்டுரையே சுவாரசியம் தான். #24_மாதங்களில்_காணாமல்_போகும் என்பது தலைப்பு .என்ன என்று பார்த்தால் இணையத்தில் இருக்கும் நமது #கடவுச்சொல் .பாஸ்வேர்ட் ரீசெட் செய்யும் சேவைக்கு மாதம் 38 கோடி ரூபாய் செலவாகிறதாம்.  TRUSONA app பற்றியும் இதில் தெரிந்துகொள்ளலாம். 📚#கிரெடிட்_கார்டு கட்டுரையில் தனது அனுபவத்தையும், மற்றவர்களுக்கு வழிகாட்டுதல்களையும் தெரிவித்துள்ளார். பயனுள்ள கட்டுரை.  #பசங்க 2 கட்டுரையும் திரைப்படத்தில் ஆரம்பித்து கல்விமுறையில் நிற்கிறது .5_3_2 என்ற முறையில் படிக்க வைக்கலாம் என்பது புதுவித கருத்தாக தான் உள்ளது .மகனை அடித்து

30.சமுதாய வீதி_நா.பா

Image
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🏠🏠 🏠🏠🏠🏠🏠🏠🏠🏠 30/100 புத்தகம் .#சமுதாய_வீதி #ஆசிரியர் _'தீபம்' #நா.பார்த்தசாரதி.  பக்கங்கள் ..321  வகை ..நாவல்  அமேசான் கிண்டிலில் படித்தது. ❤ஆசிரியரின் பெயரை படித்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது தொலைக்காட்சியில் பார்த்த #குறிஞ்சிமலர் கதைதான். இவருடைய 51 நூல்கள்  நாட்டுடைமையாக்கப்பட்டு உள்ளன.  ❤   இந்தக் கதையைப் பற்றி இது இருபது அத்தியாயங்கள் கொண்டது.மதுரை கந்தசாமி வாத்தியார்  நடன நாடக சபாவில் வசனகர்த்தா, பாடலாசிரியர் ,நடிகர் போன்ற பன்முகத் திறமை கொண்ட முத்துக்குமாரசுவாமி பாவலர் என்ற முத்துக்குமரனும்,ஸ்த்ரீபார்ட் என்ற பெண் வேடமிடும் கோபால்சாமியும் நண்பர்கள்?. இதில் கோபால்சாமி ,⭐சென்னை திரைப்பட துறைக்கு வந்து நடிகர் கோபால் என்ற நட்சத்திர அந்தஸ்துடன் இருக்கிறார் .கோபால் தன் திரைப் புகழைப் பயன்படுத்தி நாடகம் தயாரிக்க நினைக்கும் தருணத்தில் முத்துக்குமரன் மிகச்சரியாக கோபாலை சென்னையில் சந்திக்கிறார். முத்துக்குமரன் நாடகம் எழுத ,கோபாலுக்கு கதாநாயகியாக நடிக்கிறார் துணை நடிகை மாதவி .நாடகம் சென்னையில் அரங்கேற்றப்பட்டு வெற்றிபெற்ற உடன் மலேசியாவில் நடத்த கலைக்கு

29.சிவகாமி பர்வம்..ஆனந்த் நீலகண்டன்

Image
🌇🌇🌇🌇🌇🌇🌇🌇 💖💖💖💖💖💖💖💖 29/100 புத்தகம். #சிவகாமி_பர்வம்  ஆசிரியர் .. #ஆனந்த்_நீலகண்டன் தமிழில் ..மீரா ரவிசங்கர்.  பக்கங்கள்.. 498  ஆசிரியரின் பிற நூல்கள்..  அசுரா (ரோல் ஆப் தே டைஸ்) &ரைஸ் ஆஃப் காளி. 😍😍😇கீழே உள்ள 5 அல்லது 6 வரிகளை படிச்சுட்டு அப்படியே இது எந்த காலம் என்று யோசித்து பார்க்கலாமா? #நாட்டை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே ஊழல் பெருச்சாளிகள், அரசு அனாதை விடுதியில் இருந்து 18 வயதானதும் பணத்துக்காக , சதிகாரர்களால் விற்கப்படும் குழந்தைகள்(அங்கு அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் தனி😢) நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவது நமது கடமை. நமது உயிரே எஜமானர்களுக்கு தான் சொந்தம் 🙆‍♀️என்று பெற்றோராலேயே சொல்லி வளர்க்கப்படும் அடிமை கூட்டம் ஒருபுறம், எந்த விதத்திலும் திறமை  இல்லாது போனாலும் பதவியில் இருக்கும் காரணத்தினால் எல்லாவித சுகங்களையும் அனுபவிக்கும் கூட்டம் மற்றொருபுறம், 😌 நம் கண்ணெதிரிலேயே இயற்கை அழிக்கப்படுவதையும், உழைப்பு சுரண்டப்படுவதைக் கண்டும்,அபாயகரமான வேலையில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளைக் கண்டும் கொதித்து எதிர்க்கும் புரட்சியாளர்கள் கூட்டம் ஒருபுறம் 🤺😇 இந்

28.கதாவிலாசம்..தொகுப்பு..வெ.நீலகண்டன்

Image
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈 💖💖💖🔥🔥🔥🔥🔥🔥 28/100 புத்தகம் #கால_விலாசம். தொகுப்பாசிரியர்.. வெ.நீலகண்டன் பக்கங்கள் .142 வகை.. கட்டுரை தொகுப்பு . அமேசான் கிண்டிலில் படித்தது .#குங்குமம்_தோழி இதழில் தொடராக வெளி வந்த கட்டுரைகள். ❤15 பெண் ஆளுமைகளின் வெற்றிக்கு காரணமான நேர நிர்வாகத்தைப்  பற்றி பேசுகிறது. # நம் சமூகத்தில் ஒரு பெண் ஜெயிக்கணும்னா 100% வேலை செஞ்சா போதாது 200% வேலை செய்யணும். பெண்ணுங்கிறதுக்காக எந்த சலுகையும் நான் எதிர் பார்த்தது இல்லை அப்படின்னு சொல்றாங்க தீயணைப்பு வீரர் #மீனாட்சி_விஜயகுமார் (தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி). 💖#லதா_நம்பீசன்(#HR)    “நேர நிர்வாகம் வளர்ப்போடு ஒட்டி வரவேண்டிய ஒரு வாழ்க்கை நெறி.. வெற்றி பெற்ற எல்லாருக்குப் பின்னாடியும் திட்டமிட்ட நேர நிர்வாகம் இருக்கும். ஆண், பெண் பேதமெல்லாம் இதில கிடையாது..// 💖#மஹதி(இசைக்கலைஞர்)//ஒரு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கும் போதே இன்னொரு வேலையைப் பத்தி யோசிக்கிறது.. இதெல்லாம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. இந்த மாதிரி மனிதர்களோட மனசுல எப்பவும் ஒரு பரபரப்பு இருந்துக்கிட்டே இருக்கும்.. எந்த வேலையிலயும் ஒட