Posts

Showing posts from June, 2021

4.ஹோமர்(பாலகுமார் விஜயராமன்)

Image
📚📚📚📚📚📚📚📚📚📚 4/50 புத்தகம் ..#ஹோமர்  ஆசிரியர் -பாலகுமார் விஜயராமன். பக்கங்கள்.. 162 வகை.. நாவல் அமேசான் கிண்டிலில் படித்தது. ஓர் அரசியல்வாதியின் கொலையோடு ஆரம்பிக்கும் கதைக்களம் ,புறா பந்தயக் களத்தில் பயணித்து ,நாய் வளர்ப்பு களத்திற்காக கொடைக்கானலுக்கு செல்லும் போது, காதல் களத்தையும் சற்று எட்டி பார்த்து, மீண்டும் நம்மை அரசியல் களத்திற்கு கொண்டு வந்து முடிக்கிறது.  🪶🪶 புறா வளர்ப்பு பற்றி நிறைய தகவல்கள் ஹோமர் புறா இனத்தின் தன்மை வியக்கவைக்கிறது. குறைந்த வருமானத்தை உடைய குருபால் படும் சிரமங்கள் ,இறுதியில் அவர் எடுக்கும் முடிவு என பரபர திருப்பங்கள். புறா ,நாய் என ஒவ்வொரு விலங்கினமாக யோசித்துப் பார்த்தால் கடைசியில் மனித இனம் ஒன்றுதான் அதிகமாக நன்றி மறக்கும் போல.. பந்தய வெறிபிடித்த இன்னாசி செய்யும் செயல்களை கதை என்பதை மறந்து மனதைப் பதற வைக்கிறது. புறாக்கள் வளர்க்கப்பட்ட கூடுகளைத் தேடி ,பல இடையூறுகளை தாண்டி, வருவது பெண்களின் மன நிலையையும் அகதிகளின் மனநிலையையும் நினைவூட்டுகிறது. என்னதான் வலுவான காரணம் இருந்தாலும் சட்டப்படி தவறான காரியம் செய்தால் நம் தமிழ் சினி

3.கொல்லனின் ஆறு பெண்மக்கள் ..2021

Image
3/50+📚📚📚📚📚📚📚  புத்தகம்...#கொல்லனின்_ஆறு_பெண்மக்கள்.  ஆசிரியர்..#கோணங்கி  பதிப்பகம் ..பாரதி புத்தகாலயம்.  வகை ..சிறுகதை தொகுப்பு  பக்கங்கள்..195 பாரதி புத்தகாலயம் 50 சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்களை வழங்கியபோது வாங்கியது. கோணங்கியின் எழுத்துக்களை எங்கே படித்தேன் என்பதே நினைவில் இல்லை. ஆனால் புத்தகத்தை பார்த்ததும் நமக்கு பிடிக்கும் என்று தோன்றவே வாங்கினேன் .ஏமாற்றம் தரவில்லை. அம்மாவின் குடையுடன் வந்த சிரங்கு வத்தி என்ற தலைப்பில் படிக்க ஆரம்பித்தவுடன் முதல் சிறுகதையா? இல்லையே என் தம்பி கோணங்கி என்று முதல் பத்தியில் படித்தோமே என்று  யோசித்துக் கொண்டே தான் படித்தேன் .அது எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் அணிந்துரை என்று இறுதியாகத் தான் தெரிந்தது."அந்த வயதிலேயே அவனுக்கு மறுக்கத் தெரிந்தது" போன்ற வரிகள் எத்தனையோ கதைகளை உள்ளடக்கி இருந்தது .பால்யகால நினைவுகள் அவ்வளவு இதம். கோப்பம்மாள், கொல்லனின் ஆறு பெண்மக்கள் ,ஈஸ்வரி அக்காளின் பாட்டு, தாத்தாவின் பேனா, அப்பாவின் குகையில் இருக்கிறேன் என 22 சிறுகதைகளும் ஏதோ ஒரு நிகழ்வில்,ஒரு சொல்லில் நம்மை சிறு பிராயத்து