Posts

Showing posts from November, 2020

27. #நீதிதேவன்மயக்கம்..பேரறிஞர் அண்ணா

Image
🏅🥇🥈🥉🥈🥇🏅🥉🥈🥇🏅🥈🥉🥇🏅🥉🥈🎈🎈🎈🎈🎈🎈 27/100 புத்தகம் ..#நீதி_தேவன்_மயக்கம். ஆசிரியர்..பேரறிஞர் அண்ணா.  வகை.நாடகம். பக்கங்கள்.102 ❤ அமேசான் கிண்டிலில் படித்தது. ❤❤அண்ணாவின் எழுத்துக்களைப் படித்த எல்லோரும் அவருடைய தம்பிகளாக எப்படி மாறினார்கள் என்பதற்கு இந்த புத்தகம் ஒரு சாட்சி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல👍🏻 ❤தாம் மட்டும் மாத்தி யோசி என்று இருக்காமல் தம்மை சுற்றியுள்ள சமூகமும் மாற்றி யோசிக்க வேண்டும் என்று சிந்தித்தவர்கள் பெரியாரும் அண்ணாவும். ❤நாடகத்தைப் பற்றி.. இது பூலோகத்தில் புதுமைக் கருத்துக்கள் பரவி விட்டதால் பழைய தீர்ப்புகளை மாற்ற வேண்டும் என்று ஆண்டவர் புனர் விசாரணை நீதிமன்றம் ஒன்றை அமைக்கிறார்.முதல் விசாரணை  கம்பரின் குற்றச்சாட்டுக்குள்ளான ராவணன் ஒரு அரக்கன் என்பதைப்பற்றியே👍🏻  இராவணன் தண்டிக்கப்பட்டது நியாயமா என்பதை விசாரிக்கிறார் நீதிதேவன். இராவணன் தரப்பு நியாயத்தை செவிமடுக்கிறது புதிய நீதிமன்றம் ❤  ❤இராவணன் தான் மட்டுமா அரக்கன்? #அரிச்சந்திரன்  பெருமையை உலகிற்கு தெரிவிக்கிறேன் என்று இரக்கமில்லாமல் அவனிடம் நடந்துகொண்ட விசுவாமித்திரர், மேனகையை

26 .#தீதும்_நன்றே

Image
🌍🕵️‍♂️🕵️‍♀️🕵️‍♂️🕵️‍♀️🕵️‍♂️🕵️‍♀️🕵️‍♂️🕵️‍♀️🕵️‍♂️🕵️‍♀️🌏 26/100 புத்தகம்.. #தீதும்_நன்றே ஆசிரியர் ..ஜே.எஸ்.கே பாலகுமார் . பக்கங்கள்..128 🔍அமேசான் கிண்டிலில் படித்த இரண்டாவது  துப்பறியும் நாவல். 📚❤🔍  இலண்டனில்.. ரேஷ்மா மாடலிங் துறை.நவீன் சாப்ட்வேர் கம்பெனி அதிபர். திருமணத்திற்கு அனுமதி வாங்குவதற்காக இருவரும் இந்தியா வருகிறார்கள்.ஏன்னா ரேஷ்மாவின் அம்மா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். மறுநாளே  ரேஷ்மா  காணாமல் போகிறாள். ரேஷ்மாவின் அம்மா அவள் யுஎஸ் சென்று விட்டதாக கூறுகிறார். ஆனால் அதை நம்பாத நவீன் அவள் எங்கு இருக்கிறாள்?என்ன ஆனாள்? என்பதை கண்டுபிடிப்பதே மீதிக்கதை. 🔍நவீனின் தந்தை அபிஜித், அமைச்சர் பரமசிவம் பற்றியெல்லாம் ஒருவரியில் கூறினாலும் நீங்கள் கதையை ஊகித்து விடுவீர்கள். அதனால்.,  ஒரு முறை படிச்சுடுங்க😍👍🏻

25. #கொற்கை (கால்டுவெல் &ரீயா)

Image
🌏 🌏🌎🧭🀄🀄⛳🏖🏝🏜🏝 25/100 புத்தகம் .#கொற்கை வகை..கட்டுரைகள்  ஆசிரியர்கள்..1. அருட்திரு ராபர்ட் கால்டுவெல்2. முனைவர் அலெக்ஸாண்டர் ரீயா தமிழில்..#வானதி (முத்து பிரகாஷ்) . பக்கங்கள்..60 ❤இந்த நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூல். மூன்று கட்டுரைகளை உள்ளடக்கியது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளே   மூன்று கட்டுரைகளாக  ஆசிரியர் மொழிபெயர்த்துள்ளார் ஆதிச்ச நல்லூரில் அகழ்வு எப்போது ஆரம்பித்தது ?என்ற அவரின் கேள்விக்கு விடை தேடிய போது கிடைத்த பதில்களை புத்தகமாக வெளியிட்டுள்ளதாக தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார்.   ❤தாமிரபரணியின் இரண்டு புறமும் கிடைத்த தொல்லியல் பொருள்களை அடிப்படையாகக் கொண்டவையே இந்த கட்டுரைகள்.முதல் கட்டுரை இராபர்ட் கால்டுவெல் அவர்களால் எழுதப்பட்டு உள்ளது .ஆனால் இந்த கதை 1876 இல் தொடங்குகிறது .ஜெர்மனியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் முனைவர்  ஜோகார்  என்பவர் தென் தமிழ்நாட்டில் சுற்றி வரும்போது #கொற்கை என்ற சிறிய ஊரின்  அருகே பல வரலாற்றுக்கு முந்தைய பொருட்கள் கிடப்பதை பார்த்து அவற்றை சேகரித்து ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார்.  அந்த விசாரணை

24. #அந்த_ஒரு_நிமிடம் ..🙈😔

Image
🕠🕕🕡🕡🕖🕖🕢🕖🕤 👨‍🌾👮‍♂️👮‍♀️🕵️‍♂️🕵️‍♀️🕵️‍♀️🕵️‍♀️🕵️‍♀️🕵️‍♀️ 24/100 புத்தகம்..அந்த ஒரு நிமிடம் (12.30am) ஆசிரியர்..தெரியவில்லை  Crazy dragon?? பக்கங்கள். 110 வகை..துப்பறியும் நாவல் *அமேசான் கிண்டிலில் படித்தது. ❤  ஆரம்பம் முதல் முடிவு வரை திகில் மற்றும்  மர்மம் நிறைந்ததாக இருக்கும் என்று முன்னுரையில் கூறி இருந்தார்கள். ஆனால் என்னுடைய  எதிர்பார்ப்போடு  இது ஒத்து வரவில்லை.   🔍5 பேர் நண்பர்கள். அவர்கள் ஒவ்வொருவராக 12.35 am மணிக்கு கொலை செய்யப்படுகிறார்கள் 🔎🔍.துப்பறியும் கதைகளில் முதலில் ஒரு சிலரைப் பற்றி நாம் இவர்தான் குற்றவாளி ஆக இருப்பார் என்று கருதும்படி காட்சிகளை அமைத்து இருப்பார்கள் ஆனால் கடைசி அத்தியாயத்திற்கு முன் அத்தியாயத்தில் ஒரு கதாபாத்திரத்தை நுழைத்து அவர்தான் குற்றவாளி என்று முடிப்பார்கள் இதிலும் அவ்வாறுதான் இருக்கிறது😍. //"குணாவோட பாடில  கழுத்துல அந்த தீய்ஞ்சு போன  ரத்தத்தோட குற்றவாளி கழுத்தை இறுக்கிப் பிடிக்கும்போது குற்றவாளி கையில் போட்டு இருந்த கையுறையைத் தாண்டி  குற்றவாளியின் நகம் பட்டு கீரல் விழுந்து இருந்தது.. "//இந்த வரிகளில் பொருள்

24.உத்தராயணம் #லா.ச.ரா.

Image
❤💐⚘💙🌷❤💙⚘🌷 23/100 புத்தகம் ..உத்தராயணம் ஆசிரியர் ..லாசா ராமாமிருதம் *அமேசான் கிண்டிலில் படித்த புத்தகம். ❤ஆசிரியரைப் பற்றி... இவர் மணிக்கொடி காலத்திலிருந்து  எழுதிய பழைய எழுத்தாளர் என்று குறிப்பிடுவார்கள். இவருடைய ஐம்பதாவது வயதில்தான் #புத்ர என்ற முதல் நாவலை எழுதியுள்ளார் .1989 ல் அவருடைய சுயசரிதை சிந்தாநதி என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். ❤ திருமணத்திற்கு முன் இவருடைய சிறுகதைகள் வாசித்த நினைவு 🙄. உத்தராயணம் என்ற இந்த தலைப்பை படித்ததும் என் நினைவுக்கு வந்தது என் அப்பா வழிப்பாட்டிதான்.💙 அவர்கள்தான் தை முதல் ஆனி வரை உள்ள காலத்தை உத்தராயண புண்ணிய காலம் என்று கூறுவார்கள் .அந்த காலத்தில் நல்ல நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்றும் கூறுவார். அதே போல்  ... மார்கழி மாதத்தில் உயிர் பிரிந்தால் வைகுண்டத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை பல பேருக்கு அக்காலத்தில் உண்டு.    அதைவிட இந்த உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர் பிரிவது தான்  மிகவும் சிறந்தது என்பதுவும் அவரின்  அதீத நம்பிக்கை  . ❤    அதற்கு ஏற்றார் போலவே இந்த உத்தராயணம் என்னும் தலைப்பில் உள்ள 13 சிறுகதைகளும் ஏதோ ஒரு