Posts

Showing posts from June, 2020

#சுளுந்தீ

Image
❤🧡💛💙💜🤎🤍 I📚📚📚📚📚📚📚 15/100 📚🤎🤎📚💜📚💙 புத்தகம் . சுளுந்தீ ஆசிரியர்.இரா.முத்துநாகு பக்கங்கள். 479 வகை. நாவல்  பதிப்பகம்..ஆதி பதிப்பகம்  திருவண்ணாமலை.  ❤சென்னை புத்தகக் கண்காட்சி யில்  2020ல் வாங்கியது. உதயசந்திரன்IAS அவர்கள் பரிந்துரைத்த சிறந்த புத்தகம் என்ற முறையில் ஆர்வத்தை தூண்டிய புத்தகம்.   இராம பண்டுவன் மற்றும் அவரது மகன் மாடனைச் சுற்றி 18 ம் நூற்றாண்டில் நடக்கும் கதை.அரண்மனை    நாவிதனாக இருக்கும் இராமன் பன்றிமலைச் சித்தரின்  சீடனாக  இருந்து சித்த மருத்துவ நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்து சுற்றுவட்டாரங்களில் பிரசித்தி பெற்ற பண்டுவராக உயர்கிறார்.இராமனின் மனைவி வல்லத்தாரையிடமே வளரும் மாடனுக்கு ஒரு காலகட்டத்தில் போர்க்கலைகளைப் பயிற்றுவிக்கிறார்.தன் மகனை எப்படியாவது படை வீரனாக மாற்ற வேண்டும் என்பது அவரது பெருங்கனவு.அதை நனவாக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் ,அதற்கு இடையூறாக இருக்கும் குலமரபு,அரசியல் சூழ்ச்சிகள்...அப்பப்பா ..இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் எளியோர்_வலியோர் வேற்றுமை பாராட்டும்  இந்த வலி இருக்குமோ தெரியவில்லை. 😢 . ❤தந்தையின் மறைவுக்கு பிறகு ஒற்றை ஆளாக அர

எனக்குரிய இடம் எங்கே?

📚📚📚📚📚📚❤❤ 14/100 📚📚📚📚📚💜❤📚 புத்தகம் .எனக்குரிய இடம் எங்கே? ஆசிரியர்.ச.மாடசாமி  பக்கங்கள். 128 பதிப்பகம்..பாரதி புத்தகாலயம்  வகை.. கட்டுரை தொகுப்பு..கதை வடிவில்   வகுப்பறை _உறவுகளைப் உரையாடல்களும்.கடந்த ஜனவரியில் புத்தகம் வாங்கும் வரையில் இது பள்ளி வகுப்பறை பற்றி பேசுவது என நினைத்திருந்தேன்.பிறகு தான் தெரிந்தது நூலாசிரியர் தமிழ்ப் பேராசிரியர் என்று. அவருடைய அனுபவப் பகிர்வுகளை ,#அய்யப்பராஜ்  என்ற கதாபாத்திரம் மூலம் நாம் வகுப்பில் காணும் பல மாணவர்களை நினைவுபடுத்துகிறார்.  உயிரோட்டமுள்ள வகுப்பறையை உருவாக்க அவர் செய்யும் ஒவ்வொரு முயற்சிகளும் அருமை. இந்நூலில் வருவது போன்ற வகுப்பறையையும்,ஆசிரியரையும் நேரில் யாராவது பார்த்து இருப்பீர்களா என்று தெரியவில்லை. ஏனெனில் நூலாசிரியரே அக்கதாபாத்திரம் பல ஆசிரியர்கள் கலந்த கலவை என்று கூறியுள்ளார். ஆனால், நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் பெயர் #சி.மகாலட்சுமி, பட்டதாரி தமிழ் ஆசிரியர். அவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் போது ஒரே பள்ளியில் பணிபுரிந்தோம். அப்போதும் சரி,அவர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக 10 வருடங்கள் பணியாற்றிய போதும்(தற்போது

ஜே.ஜே.சில குறிப்புகள்

💙❤❤💜💙❤ I📚📚📚📚📚 13/100 💙📚📚📚📚💙💙 புத்தகம் .ஜே. ஜே.சில குறிப்புகள்.  ஆசிரியர்.சுந்தர ராமசாமி  பக்கங்கள். 224 பதிப்பகம்.  காலச்சுவடு  பதிப்பகம் வகை.. நாவல்.    சென்னை புத்தகக் கண்காட்சியில் (2020) வாங்கியது 'ஒரு புளிய மரத்தின் கதை ' குடும்ப நாவலில் வெளி வந்த போது கொஞ்சம் சிரமப்பட்டு தான் படித்து முடித்தேன். ஆனால் இந்த நாவல் அதுபோல் இல்லை.  ஒரு எழுத்தாளனின் அக உணர்வுகளை, சக எழுத்தாளர்களின் பார்வையில் இருந்தும், அவருடைய நாட்குறிப்புகளில் இருந்தும்   நமக்கு கடத்துகிறார். வழக்கமான நாவல் வடிவத்தில் இருந்து புதிய வடிவத்தில் படைக்கப்பட்டதாக வெளிவந்த காலத்தில் விமர்சிக்கப்பட்டது.. கதையின் நாயகன் கால்பந்தாட்டக்காரர்,ஓவியர்,நாடகம்,கவிதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றின் வல்லுனர் ஆக சித்தரிக்கப்பட்டுள்ளார்.இவை மலையாளத்தில் மறைந்த எழுத்தாளர் #சி.ஜே வை நினைவுபடுத்தும்.   எனக்கு இந்த நாவலின் முதல் பாகம் முழுவதும் பவாசெல்லதுரையின் குரல்  என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவர்தான் தற்காலத்தில் ஒவ்வொரு எழுத்தாளரையும் கொண்டாடி,நம் மனத்திற்கு நெருக்கமானவராக மாற்றி விடுவார்.பாலு கதாபாத்தி

தந்தை பெரியாரின் வாழ்வும் வாக்கும்

📚📚📚📚📚📚📚 12/100 📚📚📚📚📚📚❤ புத்தகம் .தந்தை பெரியாரின் வாக்கும் வாழ்வும்.  ஆசிரியர்.ச.குமார்  பக்கங்கள். 70 பதிப்பகம்.  அறிவுப் பதிப்பகம், ராயப்பேட்டை  வகை.. கட்டுரை தொகுப்பு.   தந்தை பெரியாரைப் பற்றி   எளிமையான எழுத்து நடையில் உள்ள புத்தகத்தை தேடிய போது கிடைத்தது.#மாணவர்களும் படிப்பதற்கேற்ற புத்தகம்💙.நான்கு கட்டுரைகளை உள்ளடக்கியது.அவை 1.தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறும் இளமைக்காலம். 2.தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள்.  3.தந்தை பெரியாரின் அறிவுரைகள். 4.உலகளாவிய தலைவர் தந்தை பெரியார்.   #பிழைகள் 1.7 ம் பக்கத்தில் இந்தியாவின் ஜனாதிபதி ஆன இராஜாஜி   என்று உள்ளது.இந்தியாவின் கவர்னர் ஜெனரல் என்றிருக்க வேண்டும்.  2.10 ம் பக்கத்தில்  வைக்கம் போராட்டம் பற்றிய விளக்கத்தில் சொல்ல வந்த கருத்து எனக்கு சரியாகப் புரியவில்லை. அவ்வரிகள் "#விடுதலைக்கான பல போராட்டங்களில் கலந்து கொண்ட இராமசாமிக்கு கிடைக்காத பெயரும் புகழும் இப்போராட்டத்தின் மூலம் கிடைத்தது என்று காந்தி அரிசன மக்களுக்கு ஆதரவாக எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை". மேலும் மணியம்மையாரைப் பற்றிய தகவல்கள் பிற நூல்களோடு ஒ