Posts

Showing posts from March, 2021

1.வானவில்...ந.க.தீப்ஷிகா

Image
📚📚📚📚📚📚 #வாசிப்பனுபவம்_2021 புத்தகம்.. # வானவில்(சிறார் பாடல்கள்) #ஆசிரியர்..ந.க.தீப்ஷிகா பதிப்பகம் ..சாரல் மையம்,     திருச்சி.            735 89 686 95 பக்கங்கள்..30 🌈 ஏழாம் வகுப்பில் படிக்கும் சிறுமி இந்த நூலின் ஆசிரியர்.கதை சொல்லியும்,பாடல்களைப் பாடியும் அசத்தியவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறார். குழந்தைகளின் மொழியைக்காது கொடுத்து கேட்பவர்கள் வெகுசிலரே .அவ்வாறு குழந்தைகளின் வாழ்க்கைக்குள் நுழைந்து ,அவர்களின் மொழியை கேட்டு, புரிந்து, பாடல்களாகவும், கதைகளாகவும் நமக்கு #அழ.வள்ளியப்பா தொடங்கி தற்காலம் வரை சில எழுத்தாளர்கள் நமக்கு வழங்கி  வருகின்றனர். அதிலும் குழந்தைகளுக்கான இலக்கியங்களை குழந்தைகளே இயற்றுவது என்பது ஒரு தனி சிறப்பு தான். அவர்களின் உலகை அவர்களே அவர்கள் மொழியில் விவரிப்பது...❤ குழந்தைத்தன மிக்க தீப்ஷிகாவின் பாடல் வரிகளில் நல்ல முதிர்ச்சியும் இருக்கிறது. அன்னை பாடல் ,தன்னம்பிக்கையைக் சுட்டிக்காட்டும் தஞ்சாவூரு பொம்மை பாடல், சுறுசுறுப்பை ஊட்டும் தேனி பாடல் பாரதியார் பற்றிய பாடல்கள் என அனைத்து பாடல்களுமே அருமையாக உள்ளன. மாட்டு வண்டியையும் திண்ணையைய

2.மக்கு...By அருண்மனோகர்

Image
வாசிப்பனுபவம் #2021 📚📚📚📚📚📚 #புத்தகம்.. மக்கு ஆசிரியர்.. அருண் மனோகர். பக்கங்கள்..31 Amazon Kindle ல் (#pentopublish2021 ) வெளியிடப்பட்ட நூல்.    ஒரு கதையைப் படிக்கும் போது அது புனைவோ,உண்மையான கதையோ ஏதோ ஒரு புள்ளியில் நம்மை அந்த கதை இணைத்துக் கொள்ளும்.நம்மால் மறக்க இயலாத வரிசைகளில் ஒன்றாக இணைந்து விடும்.அதுபோல ஐந்தாம் வகுப்பில் இருந்தே கணிணி மேல் ஆர்வமிக்கவர், ஆசிரியர் பயிற்சியில் விருப்பமில்லாமல் இணைந்த நிகழ்வே என்னை இக்கதையின் உள்ளே  இழுத்துச் சென்றது.  விரும்பியது கிடைக்காவிட்டாலும் கிடைத்ததை விரும்பிச் செய்தால் சாதிக்க முடியும் என்று வெளிச்சமிட்டுக் காட்டும் நூல்.  பள்ளி மாணவரோ, கல்லூரியில் படிப்பவரோ,தடம் மாறி இருந்தாலும் ,சகவாசத்தில் தடுமாறி  இருந்தாலும் இந்தக் கதையைப் படித்த பிறகு, குறிக்கோளை நோக்கி ஓர் எட்டு வைக்க முயற்சிப்பார்கள் என்பது திண்ணம். NOTORIOUS என்ற ஒரு சொல் ஏற்படுத்திய பாதிப்பே வளர்ச்சிப் பாதைக்குத் திருப்புகிறது.ஆனாலும்..தீயினால் சுட்ட புண் உள்ளாறும்...என்ற திருக்குறள் தான் நினைவுக்கு வருகின்றது. ச.மாடசாமி ஐயா அவர்களின் கருத்துப்படி ஆசிரியர்களுக்கு