Posts

Showing posts from July, 2020

போலி அறிவியல் மாற்றுமருத்துவம் &மூடநம்பிக்கை..ஒரு விஞ்ஞான உரையாடல்

Image
👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️💜👩‍⚕️👩‍⚕️👩‍⚕️ 👩‍⚕️👩‍⚕️👩‍⚕️💜👩‍⚕️👩‍⚕️💕👩‍⚕️👩‍⚕️ 20/100  📚👩‍⚕️❤📚 புத்தகம். # போலி அறிவியல், மாற்றுமருத்துவம்& மூடநம்பிக்கை _ஒரு விஞ்ஞான உரையாடல்.. ஆசிரியர்.டாக்டர். சத்வா.T பக்கங்கள். 178 அமேசான் கிண்டிலில் படித்த நூல் இது. ⛑🏥🚑அலோபதி என்றும் ஆங்கில மருத்துவம் என்றும் கூறப்படும் நவீன விஞ்ஞான மருத்துவத்தைப் பற்றியும், அதன் நம்பகத்தன்மை பற்றியும் பல்வேறு ஆதாரங்களுடன், பல கோணங்களில் அலசி,நம்மை சிந்திக்க வைக்கிறார் ஆசிரியர் .🏥போலி அறிவியலை அம்பலப்படுத்துவது காலத்தின் தேவை என்ற கட்டுரையில்  ஆரம்பிக்கும் ஆசிரியர் ஆதி சமூகத்தில் நோய்க்கான காரணிகள் தொற்றுநோய்களின் சுருக்கமான வரலாறு,  பரவாத நோய்களின் சுருக்கமான வரலாறு விஞ்ஞானத்தின் தோற்றம் என படிப்படியாக நம்மை விஞ்ஞானத்தின் பக்கம் நகர்த்துகிறார். 🚑நவீன விஞ்ஞான மருத்துவம் இயற்கையும் இல்லை செயற்கையும்  இல்லை அது பகுத்தறிவின் உச்சம் என்று நிரூபிப்பதற்காக  நம் நாட்டில் நிலவும் மருத்துவ மூட நம்பிக்கைகள், இதர நாடுகளில் நிலவும் மருத்துவ மூட நம்பிக்கைகள் ,மாற்று மருத்துவமும் தீராத நோய்களும்,அந்த மருத்துவ

19.ஷாந்தினி சொர்க்கம்

Image
❤❤❤❤❤❤❤❤❤❤ 💜💜💜💜💜💜💜💜💜💜 19/100  💕💕💕💕💕💕💕💕💕💕💕 புத்தகம். # ஷாந்தினி சொர்க்கம்  ஆசிரியர். குணசீலன் பக்கங்கள். 685 வகை.சுயசரிதை  பதிப்பகம்.. ***     அமேசான் கிண்டிலில் படித்தது.சந்தியா ராஜ மாணிக்கம் மதிப்புரையைப் பார்த்து படிக்க ஆரம்பித்தேன்.  ❤ இது ஆசிரியரின் சுயசரிதை பாகம் -1 இந்த வயதில் "கிட்டத்தட்ட " எல்லாமே உண்மை என்று முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இதைப்படித்தவுடன் ஆசிரியரின் மனைவியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்😍 ஏற்பட்டு விட்டது.எவ்வளவு பொறுமைசாலி,தைரியசாலி, திறமைசாலி💐💐💐 இந்த மாதிரி மனுஷன் கூட வாழறது எல்லாம் சாதாரண விஷயமா என்ன!?.. ❤#நகைச்சுவை   எவ்வளவு தான் சீரியஸான ஆளா இருந்தாலும் சில இடங்களில் வாய்விட்டுச் சிரிக்காம படிக்கவே முடியாது 🤣   அதுவும் #அந்த  பஸ் வந்து இவர் எறிந்த கல் மேல மோதிடுச்சு" அப்படின்னுவாரே அதிலேயே தெரிஞ்சுக்கலாம் ஐயாவோட திறமையை🤣 ❤ அந்த கவிதை ஏரியா 😍 வாய்ப்பே இல்லை ராசா ரகம்.பத்தாவது படிக்கும் போதே அப்படி ஒரு கவிதை எழுதனவர் கை சும்மாயிருக்க சான்ஸே இல்ல.முதல்ல கவிதை புத்தகம் தான் வெளிவந்திருக்க வேண்டும் 💐  .இல்லறக் கவிதைய

சஞ்சாரம் 🌍எஸ்.ரா

Image
🌍🌍🌍🌍🌎🌎🌏 ❤❤❤❤❤❤❤❤📚 18/100 புத்தகம். # சஞ்சாரம். ஆசிரியர். எஸ்.ராமகிருஷ்ணன்   பக்கங்கள். 359 வகை.நாவல் பதிப்பகம்..தேசாந்திரி பதிப்பகம், சென்னை 93.    சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கியது.பல வருடங்களாக எஸ்.ரா வின் புத்தகங்களை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இப்போது தான் ஆரம்பித்து உள்ளேன்.ஆனந்த விகடனில் #துணையெழுத்து, #கதாவிலாசம்,#தேசாந்திரி  மூலம் அறிமுகமானவர். 10 வருடங்களுக்கு முன் ஒரு பயிற்சி வகுப்பில் நீங்கள்  எஸ். ரா வை வாசித்திருக்கிறீர்களா? என ஆச்சரியத்துடன் வினவிய வாசகரின் நினைவுகள் இப்புத்தகத்தை கையில் எடுத்ததும்😊  .எஸ்.ராவின் எழுத்துகள் அப்படி. வாசகர்களை கதை நடக்கும்  அந்தந்த இடத்திற்கே அழைத்துச் சென்று வசியப்படுத்தி விடுவார். எளிமையான எழுத்து நடை❤. கதையைப் பற்றி.. நாதஸ்வரம் கலைஞர்களைப் பற்றியது. ரத்தினம், பக்கிரி,பழனி,தண்டபாணி ஆகிய நால்வரும் ஒதியூரில் இருந்து மூதூரில் நடக்கும் கருப்பசாமி திருவிழாவில் கச்சேரிக்கு வருகிறார்கள்.பனங்குளத்துகாரர்களுக்கும்,மூதூர்க்காரர்களுக்கும் இடையே நடக்கும் பஞ்சாயத்தில் கச்சேரி நிறுத்தப்படுகிறது.குடிகாரனிடம் அடி வாங்கும் ரத்தினம், பக்க

#கடவுளுக்கும்_முன்பிருந்தே_உலகம் _இருக்கிறது .

Image
🌷🌷🌷🌷⚘⚘⚘⚘🌷 17  📚📚📚📚📚📚📚👮‍♂️ புத்தகம் . கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது. ஆசிரியர்.ஆதவன் தீட்சண்யா பக்கங்கள். 112 வகை. கட்டுரைகள் பதிப்பகம்..நூல் வனம் இராமாபுரம் சென்னை 89.    சென்னை புத்தகக் கண்காட்சியில்2020 வாங்கியது. ஆசிரியரின் கவிதைகள் ஒன்றிரண்டு படித்த நினைவினாலும் ,இந்த நூலின் தலைப்பிற்காகவும்   தேர்ந்தெடுத்தேன்.இந்த தலைப்பை இரண்டாம் முறையாக படித்த போது தான் "எவ்வளவு #செறிவான வாக்கியம்" என்று ஆச்சரியமாக இருந்தது. திரும்பத் திரும்ப வாசிக்க, சிந்திக்க வைத்து விட்டது.அட! ஆமால்ல!😍என்று! 📗இப்புத்தகத்தில் 18 கட்டுரைகள்.ஆசிரியர் சில இடங்களில் பேசிய பேச்சுகளும் கட்டுரை வடிவில்... கட்டுரை தலைப்புகளைப் படித்தாலே அவற்றில் சொல்ல வந்த கருத்துகளை ஓரளவு யூகிக்க  முடியும் என்பதால் அவற்றை கீழே பட்டியலிடுகிறேன் 1.கொலையில் பிழைக்கிறதாம் கலவரம். 2.காமன்வெல்த் மாநாடு:பொருத்தமான இடத்தில், மிகப் பொருத்தமான நபரால். 3.#கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது.  4.இறைவனது படைப்பிலேயே மனிதனுக்கு மட்டும் தான் பகுத்தறிவு இருக்கிறது... 5.#அப்படியென்ன அதியுன்னத புல் புடுங்கப

16.நடமாடும் சொர்க்கம்..பட்டுக்கோட்டை பிரபாகர் 👮‍♂️

Image
👨‍💻❤👮‍♂️❤🌻👨‍💻❤👮‍♂️❤📚❤ 16/100  📚📚📚📚 புத்தகம் . நடமாடும் சொர்க்கம்  ஆசிரியர்.பட்டுக்கோட்டை பிரபாகர்  பக்கங்கள். 128 வகை. நாவல்  பதிப்பகம்..ஜெனரல் சப்ளைஸ் மந்தைவெளி, சென்னை 28    நூலகப் புத்தகம். இருபது வருடங்களுக்கு மேல் ஆகிறது PKP ன் கதைகளைப் படித்து.அதனால மீண்டும் வாசிப்போம் எனத் தேர்ந்தெடுத்தேன்.❤ஆசிரியர் ஆரம்ப காலத்தில் எழுதிய கதை.முன்னுரையில் கதை 'எக்ஸ்பிரஸ் 'வேகத்தில் செல்வதாக (பிற்கால படைப்புகள் 'ஜெட்' வேகம்) கூறப்பட்டுள்ளது. அப்படியே! ☕  கதையைப் பற்றி...கார் ஒன்றில் நடைபெற்ற குண்டு வெடிப்பை போலிஸ் உதவியுடன் மறைக்கிறார் வெடிகுண்டு தயாரிப்பதையும் ஒரு  தொழிலாக  வைத்திருக்கும் தொழிலதிபர். இரண்டு வருடங்களுக்கு பிறகு DIG மகளான புலனாய்வு பத்திரிகை நிருபர் வழக்கை எவ்வாறு முடிக்கிறார் என்பதே கதை. 😍படிக்கலாம்.