Posts

Showing posts from May, 2020

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்..ஆர்.பாலகிருஷ்ணன் iAS

Image
❤❤❤💙❤❤❤ 11/100 📚📚📚📚📚📚📚 புத்தகம் .சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்.  ஆசிரியர். ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப(ஓய்வு) பக்கங்கள். 206 பதிப்பகம். பாரதி புத்தகாலயம்.  வகை..ஆய்வு நூல். கட்டுரை தொகுப்பு.   .இந்நூலாசிரியரின் உரையினை சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் (தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்பாடு செய்த நிகழ்வு) நேரில் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றேன்😍.அதுதான்  இந்நூலைப் படிக்கத் தூண்டியது.            இந்நூல்  இரண்டு ஆய்வுகட்டுரைகளைக் கொண்டது. .மேலும் ஆய்வுக்கான தரவுகள், அணிந்துரை (சிந்துவெளி ஆய்வு அறிஞர் திரு.ஐராவதம் மகாதேவன்),மதிப்புரை1. (நா.மம்மது,உயிர்மை மாத இதழ்), 2.பிரபஞ்சன் (தமிழ் இந்து) 3.சு.கி.ஜெயகரன்(புதிய புத்தகம் பேசுவது மாத இதழ்)4. டாக்டர். சங்கர சரவணன் (ஆனந்த விகடனில்) ஆகியவை இடம்பெற்றுள்ளன.அட்டவணைகள்,வரைபடங்களே  50 பக்கங்கள் உள்ளன.  நமது பாரம்பரியத்தின் தேடல் என்ற உணர்வே இந்நூலை பெருமிதத்துடன்  படிக்க வைத்தது.❤ முதல் கட்டுரையில் (சிந்துவெளிப் புதிரும்,இடப்பெயர்  ஆய்வு தரும் புத்தொளிச் சான்றுகளும்) இடப் பெயர்களை

சமூகப் போராளிகள்...சோ.மோகனா

Image
❤❤❤💙❤❤❤ 9/100 📚📚📚📚📚📚📚📚 புத்தகம் *சமூகப் போராளிகள்* ஆசிரியர். பேரா.சோ.மோகனா. பக்கங்கள். 91 பதிப்பகம்.  :அறிவியல் இயக்கம்  வகை..கட்டுரை தொகுப்பு   இப்புத்தகத்தை ஆசிரியரிடம் இருந்து கோயம்புத்தூர் நிகழ்வில் கடந்த மாதம் நேரில் பெற்றேன் 😍❤. இப்புத்தகத்தில் 16 சமூகப் போராளிகளைப் பற்றி சுவையான கட்டுரை களாகக் கொடுத்துள்ளார். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர், மருத்துவர், சூழலியல் செயற்பாட்டாளர், முஸ்லிம் போராளி, தற்கொலைப்போராளி,2 நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி, துப்பாக்கி ஏந்திய புரட்சிப்பெண் எனத் தேடித்தேடி பல விஷயங்களைக் கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக வேலு நாச்சியாரின் மெய்க்காப்பாளர் குயிலி பற்றிய தகவல்கள் அருமை. மாற்றுக்கருத்துகளையும்,அவரைப் பற்றிய புதிய தகவல்களையும் அடுத்த புத்தகத்தில் எதிர் பார்க்கலாம்.பெண் போராளிகளின்  புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன ❤.  நான் 3 புத்தகங்களை மட்டுமே வாங்கினேன்.படித்த பிறகு தான் தெரிந்தது மேலும் சிலவற்றை வாங்கியிருக்கலாம் என்று 😊. *ஆசிரியரைப் பற்றி* பழனி கல்லூரியில் 38 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். புற்றுநோயில் இருந்து ம

தாய் ...மக்சீம் கார்க்கி

Image
❤❤❤💙❤❤❤ 8/100 📚📚📚📚📚📚📚 புத்தகம் *தாய்* ஆசிரியர். மக்சீம் கார்க்கி  தமிழில்..தொ.மு.சி.ரகுநாதன்  பக்கங்கள். 346 பதிப்பகம். பாரதி புத்தகாலயம்.  வகை..நாவல் சென்னை புத்தகக் கண்காட்சி 2020ல் வாங்கியது.   இப்புத்தகத்தை அறிமுகப் படுத்தியவர் இராணிப்பேட்டை DIET எனது ஆங்கிலப் பேராசிரியர் தெய்வத்திரு.சுவாமிதாஸ் அவர்கள். இந்த புத்தகத்தைப் படித்த பாதிப்பில் அவர் 'அம்மா ' என்ற நூலை எழுதியுள்ளதாகக் கூறியுள்ளார். 🙏🏻அப்போது (1993_94) சில நாட்கள் நூலகத்தில் தேடி, பிறகு மறந்து போனேன். இவ்வளவு நாட்கள் இதை படிக்காமல் விட்டு விட்டேனே என்று இப்போது வருந்துகிறேன். 😢 . நூலைப்பற்றி.... எனக்கு ஒரு சந்தேகம்..உண்மையில் இது புனைவு(நாவல்) தானா?????🧐 29+29 அத்தியாயங்கள் இரண்டு பாகங்கள் 😮 2 அல்லது 3 முறையாவது அட்டைச்செய்தி,பதிப்புரையை படித்துப் பார்த்தேன். இதில் இடம்பெற்ற நிகழ்வுகள் உண்மையில் நடைபெற்றவையா என்று?😇 .இந்நூலைப் படிக்கும் பொழுது நம் மேல் பனித்துகள்கள் விழுகின்றன. காலடியில் பனி நொறுங்கியது.  பாவெல் விலாசவ் மற்றும் அவனது தாய் (பெலகேயா)   வாழ்க்கை போராட்டங்கள் நம் கண்முன்னால் ந

சீருடை __சிவா

Image
📚📚📚📚💃💃📚📚 7/100 புத்தகம். சீருடை (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்) பக்கங்கள். 60 பதிப்பகம். பாரதி புத்தகாலயம்(Books for children) வகை _கட்டுரை தொகுப்பு.  ஆசிரியர்..*கலகல வகுப்பறை* சிவா சென்னை புத்தகக் கண்காட்சி 2020 ல் வாங்கியது.  இன்றைய  சூழலில் தான்  கற்பித்தல் சவாலான  பணி என்று நினைத்து இருந்தேன். எல்லா காலகட்டங்களிலும் சவால்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. நாம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கூறி உதவுகின்றன இத்திரைப்படங்கள். கீழ்க்கண்ட 9 திரைப்படங்களைப் பற்றிய விமர்சனத்தோடு தன் கருத்துக்களையும் பதிவு செய்து இருப்பது சிறப்பு.  1. Ganvesh (2015,marathi) 2. Monsieur Lazhar (2015,Canadian French) 3.shikshanachya Aaicha Gho(2010,marathi) 4.The teacher's diary (2014,Thai) 5. 72 miles EK pravas (2013,maralli) 6.The Ron dark story (2006,English) 7.Gridiron gang (2006,English) 8.Dead poets society (1989,English) 9.Mr.Holland's opus (1995,English) இதில் 3வது படம் 'தோனி' என்ற தமிழ் படமாக வெளி வந்துள்ளது.  Ganvesh என்ற மராட்டிய படத்தில் ஒரு சீருடைக்

போதிமரக்காடு __மதுரா

Image
📚📚📚📚💃💃📚📚 6/100 புத்தகம். போதிமரக்காடு நூலகப் புத்தகம் . பதிப்பகம்..திருவரசு புத்தக நிலையம், தி.நகர்  பக்கங்கள். 159 வகை.சிறுகதைத் தொகுப்பு  ஆசிரியர்..மதுரா      16 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல் இது. ஒரு முறை படிக்கலாம். ஆசிரியர்  முன்னுரையில்  என்றோ நான் எழுதிய எழுத்துகள் என்று குறிப்பிட்டு இருப்பது போல் கதைகள் பழைய காலகட்டங்களில் பெரும்பாலும் நகர்கிறது. தாய்ப்பாசத்தை ஒட்டியே மூன்று கதைகள்.சாதி பற்றி பேசும்  *அடையாளம்* கதை தனித்து தெரிகிறது. தண்ணீர் பிரச்சினை குறித்த *மணல் நதிகள்* எல்லா காலகட்டங்களிலும் ,எப்போது படித்தாலும் பொருந்தும். *போதிமரக்காடு* Ego வை ஒழித்து மனிதத்தை வளர்க்கச் சொல்கிறது. *அது ஒரு காதல் காலம்* பாக்யராஜ் சார் படங்களை நினைவூட்டுகிறது. 😍 16 கதைகளைப் பற்றியும் விவரித்து எழுதணுமா🙆 என்ன? புத்தகம் கிடைத்தால் படித்து விடுங்களேன் Plz 😍👍🏻

பெரியார்

Image
📚📚📚📚💃💃📚📚 5/100 புத்தகம். பெண் ஏன் அடிமையானாள்? ண் ஏன் அடிமையானாள்? ஆசிரியர். தந்தை பெரியார்.  பதிப்பகம். PSRPI,வேப்பேரி பக்கங்கள். 78. கற்பு,வள்ளுவரும் கற்பும்,காதல்,கல்யாண விடுதலை, மறுமணம் தவறல்ல,விபசாரம், விதவைகள் நிலைமை,சொத்துரிமை,கர்ப்பத்தடை, பெண்கள் விடுதலைக்கு 'ஆண்மை' அழிய வேண்டும் என 10 தலைப்புகளில் எழுதியிருக்கிறார். முகவுரையில் சுருக்கமாக தாம் சொல்ல வந்த கருத்துகளை தெளிவுபடுத்தி இருக்கிறார். இருப்பினும் நாம் படிக்கும் போது தாத்தாவின்😍 சொல் பிரயோகங்களை புரிந்து கொள்வது சிரமமாக இருந்தது.மறுமணத்தைப் பற்றி 5வது அத்தியாயம் ல ஆண்களுக்கு தான் 9 வகையான அசவுகரியங்களை பட்டியலிட்டு விட்டு பெண்களுக்கு  ம் இதுபோன்ற சூழ்நிலையில் சுதந்திரம் வேண்டும் என்று முடித்திருக்கிறார் 🙃. 2020 ல் பொதுவெளியில் பேசத் தயங்கும் விஷயங்களை ஏறக்குறைய  100 வருடங்கள் முன் எப்படி பேசினார் னு தெரியலை. 🧐.ஊருக்கு உபதேசம் செய்யாமல் தங்கை மகளுக்குமறுமணம் செய்து வைத்திருப்பது சிறப்பு. 💐💐. என்னுடைய Teenage la ஏதோ கெட்ட புத்தகம் னு (இதைத் தான்)பாதியிலேயே படிக்காமல் தூக்கிப் போ

துருக்கி தொப்பி..கீரனூர் ஜாகிர் ராஜா

Image
4/100 📚📚📚📚 புத்தகம்..துருக்கி தொப்பி  ஆசிரியர். கீரனூர் ஜாகிர் ராஜா.  அத்தியாயம் 58(பக்கங்கள் 150 இருக்கும் 😎) நூலகத்தில் எடுத்தது. இஸ்லாமிய குடும்பங்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நாவல். நூர்ஜஹான் என்னும் பெண்ணின் திருமணத்தில்  தொடங்கும் கதை அவளின் மகன் ரகமத்துல்லாவின் நடத்தை மாற்றத்துடன்  (நம் மனதை கனமாக்கி)முடிகிறது கதை. தாயில்லா பிள்ளையைப் போல் அலைகழிக்கப்படுகிறான் தாயால் வெறுக்கப்படும் ரகமத்துல்லா .பிள்ளை பேற்றின்போது பெரியம்மையால் பாதிக்கும் நூர்ஜஹான் தன் அழகு குலைந்தது மகனால்தான் என்று நினைக்கிறாள்.தன் கணவன் அத்தாவுல்லா படித்து இருந்தாலும் அழகு இல்லை என்று நினைக்கக் காரணம் திருமணத்திற்கு முன் அவள் விரும்பிய அப்பாஸ்.தந்தை குட்டிலெவை,மாமியார் பட்டம்மாள், மாமனார் கேபிஷே(இவருடைய தொப்பி தான் தலைப்பே).என ஒவ்வொருவருக்கும் கிளைக்கதைகள்.இப்படியெல்லாம் நடக்குமா?இப்படியெல்லாமா  இருப்பார்கள்? என இடையிடையே எனக்கு தோன்றிக் கொண்டேதான் இருந்தது கதை நிகழ்வுகளால்🤔. காங்கிரஸ், நீதிக்கட்சி, திராவிட இயக்க வளர்ச்சி  என அரசியல் நிகழ்வுகளை யும் விவரித்து கூறியுள்ளார்

கார்ல் மார்க்ஸ்

Image
கார்ல் மார்க்ஸ்..சாமிநாத சர்மா.  3/100 📚📚📚📚 புத்தகம்..கார்ல் மார்க்ஸ்  ஆசிரியர்..வெ.சாமிநாதன் சர்மா  பக்கங்கள் 194 பதிப்பகம். கவிதா பப்ளிகேஷன் தி.நகர்  "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் " என்ற பொதுவுடைமை அறிக்கையின் புகழ் பெற்ற வாசகத்தின் சொந்தக்காரர்  கார்ல் மார்க்ஸ்.  மார்க்ஸ் ன் சிறப்பை மட்டும்  அல்லாமல் அவரின் உற்ற நண்பர் ப்ரீட்ரிக் எங்கெல்ஸ்  மற்றும் மனைவி ஜென்னி யைப் பற்றியும் விவரித்து கூறியுள்ளார். "மார்க்ஸீயத்தைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் " என்ற ஆவலை இந்த வாழ்க்கை சரிதம் தூண்ட வேண்டும் என்று ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே மார்க்ஸ் பற்றிய வேறு நூல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.  நாவல்களை மட்டுமே படித்துக் கொண்டிருந்த எனக்கு இந்நூலைப் படிக்க அதிக நாட்கள் ஆகிவிட்டது. 😍. மார்க்ஸ் பற்றிய வேறு நூல்கள்    (எளிமையான எழுத்து நடையில்) அறிமுகப் படுத்துங்களேன். முயற்சி  செய்கிறேன். 👍🏻

இதயச்சுரங்கம்

Image
இதயச்சுரங்கம் (மணியன்) 2/100 புத்தகம்..இதயச் சுரங்கம்  ஆசிரியர் _மணியன்.  பதிப்பகம். பழனியப்பா பிரதர்ஸ் சென்னை 14. தோழி A.Sankari கொடுத்தது. அவர்கள் தொடராக பள்ளி வயதில் படித்தது.மனதை பாதித்த கதை என்று தேடி வாங்கிய புத்தகம் இது.  இந்தக் கதையில் வரும் கமலா,கலா, ஜெயந்தி, மங்களம், முரளி ஆகியோர் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்று ஆசிரியரே அறிமுகப் படுத்துகிறார். ஆனால் 2020 ல்  கமலா போல் தியாகம் செய்பவர்களைப் பார்ப்பது கடினம். (முதல் பதிப்பு 1977) கதையில் இராமநாதன்_பாகீரதி தம்பதியருக்கு நான்கு மகள்கள்.அவர்களின் திருமண முயற்சிகள்,காதல் திருமணத்தை நடுத்தர குடும்பம் எதிர் கொள்ளும் விதம்,பெண்கள் சந்திக்கும் அலுவலகப் பிரச்சினைகள்.,என அனைத்து வயதுடைய பெண்களையும் கதைக்குள்   இழுத்துக் கொள்கிறார் ஆசிரியர். பக்கத்து வீட்டில் இல்லை அதே வீட்டில் இருந்து வாழ்க்கையைப் பார்ப்பது போல் கதை நகர்கிறது.  புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன்பும்  புகழ் பெற்ற எழுத்தாளர்கள்  கதையில் இருந்து சில வரிகள் போட்டிருந்தார்கள். அக்கதைகளையும் தேடி வாசிக்க சொல்லும் உங்கள்  மனம்.💙

லெனின் முதல் காம்ரேட்

Image
WELCOME 💕💐💐 1/100 புத்தகம். லெனின்  முதல் காம்ரேட்  ஆசிரியர். மருதன் கிழக்கு பதிப்பகம்    விளதீமிர் இலீயிச் உலியானவ் எப்படி லெனின் ஆக மாறினார் என்று 10  தலைப்புகளில் சுவாரசியமாக விவரித்து இருக்கிறார்.  சிறுவயதில் 'சோவியத் நாடு' என்ற புத்தகம் படித்திருக்கிறேன். அதை நினைவூட்டுகிறது இந்த லெனின் சரித்திரம்.  சரித்திரம் படைக்க புத்தக வாசிப்பு அவசியம் என்பதை  தன் அண்ணனைப் பார்த்து  படிக்கத் தொடங்கிய லெனின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது.  💙நாவல்களைத் தவிர(குறிப்பாக ரமணிசந்திரன், துப்பறியும்  மற்றும்  வரலாற்று நாவல்கள்) வேறு புத்தகங்களை முழுமையாக என்னால் வாசிக்க இயலாது என நினைத்து இருந்தேன். பலமுறை முயற்சி செய்து நூலகத்தில் படித்து முடிக்காமல் திரும்ப கொடுத்திருக்கிறேன. அந்த அவநம்பிக்கையை போக்கியிருக்கிறது இப்புத்தகம் நன்றி Dhanalaksmi Sekar மாமா  மகளுக்கு 💙💙💙