10. குழந்தைகளின் நூறு மொழிகள்-ச.மாடசாமி ஐயா
📚📚📚📚📚📚📚2021 புத்தகம் ..#குழந்தைகளின்_நூறு_மொழிகள். ஆசிரியர் ..ச. மாடசாமி பதிப்பகம் ..பாரதி புத்தகாலயம் வகை.. கட்டுரைத் தொகுப்பு. பக்கங்கள் 96 நான் வாசிக்கும் ஆசிரியரின் மூன்றாவது நூல் .பூங்கொடி பாலமுருகன் அறிமுகப்படுத்திய உடன் வாங்கிவிட்டேன். அய்யாவின் ஒவ்வொரு நூலை வாசித்து முடித்ததும் ஒத்த அலைவரிசை உடைய நண்பர்களுடன் உரையாடிய நிறைவு மனதில்❤️ 14 கட்டுரைகள் நிரம்பிய அனுபவத் தொகுப்பு. இத்தாலியின் ரெகியோ அணுகுமுறை பற்றிய புதிய தகவல் முதல் கட்டுரையில்.. #குழந்தைகள் பேச நூறு மொழிகள்! நூறு சிந்தனைகள்! - - கண்டுபிடிக்க, கனவு காண, அவர்களுக்கு நூறு உலகங்கள்! இது ரெக்கியோ பள்ளியின் முதல் ஆசிரியர் லோரிஸ் மாலகுஸ்ஸி அவர்களின் கவிதை. குழந்தையின் 99 உலகங்களை மறைத்துவிட்டு ஒரே ஒரு உலகை மட்டும் காட்ட விரும்புகின்றன பள்ளிகள் என்று வருத்தப்பட்டவர். பாடத்திட்டத்தையும்,35 மதிப்பெண்களையும் தாண்டி இந்த வரிகள் வகுப்பறையில் நமக்கு நினைவுக்கு வருமா? #கண்கள்_உங்களைத்தான்_கவனிக்கின்றன என்ற இரண்டாவது கட்டுரையில்.... நம்பிக்...