10. குழந்தைகளின் நூறு மொழிகள்-ச.மாடசாமி ஐயா

📚📚📚📚📚📚📚2021

புத்தகம் ..#குழந்தைகளின்_நூறு_மொழிகள்.
ஆசிரியர் ..ச. மாடசாமி        பதிப்பகம் ..பாரதி புத்தகாலயம்
வகை.. கட்டுரைத் தொகுப்பு.
பக்கங்கள் 96
நான் வாசிக்கும் ஆசிரியரின் மூன்றாவது நூல் .பூங்கொடி பாலமுருகன் அறிமுகப்படுத்திய உடன் வாங்கிவிட்டேன். அய்யாவின் ஒவ்வொரு நூலை வாசித்து முடித்ததும் ஒத்த அலைவரிசை உடைய நண்பர்களுடன் உரையாடிய நிறைவு மனதில்❤️
14 கட்டுரைகள் நிரம்பிய அனுபவத் தொகுப்பு.

இத்தாலியின் ரெகியோ அணுகுமுறை பற்றிய புதிய தகவல் முதல் கட்டுரையில்..
 #குழந்தைகள் பேச நூறு மொழிகள்!
 நூறு சிந்தனைகள்!
-
-
 கண்டுபிடிக்க,
 கனவு காண,
 அவர்களுக்கு நூறு உலகங்கள்! 

இது ரெக்கியோ பள்ளியின் முதல் ஆசிரியர் லோரிஸ்
மாலகுஸ்ஸி அவர்களின் கவிதை. குழந்தையின் 99 உலகங்களை மறைத்துவிட்டு ஒரே ஒரு உலகை மட்டும் காட்ட விரும்புகின்றன பள்ளிகள் என்று வருத்தப்பட்டவர்.
பாடத்திட்டத்தையும்,35 மதிப்பெண்களையும் தாண்டி இந்த வரிகள் வகுப்பறையில் நமக்கு நினைவுக்கு வருமா?

#கண்கள்_உங்களைத்தான்_கவனிக்கின்றன  என்ற இரண்டாவது கட்டுரையில்....
 நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடன் காணும் மாணவர்களின் கண்களை எதிர்கொள்வோம். திறன்களை மீட்டெடுப்போம்.

#ஆளுக்கு_ஒரு_கிணறு
ஆசிரியர் ஆமாம் என்று சொன்னது போதும் .மறுக்கப் பழகுங்கள் என்கிறார்.  அதிகாரத்திடம் அடிபணிந்தே பழகியோருக்கு #நோ சொல்வது எவ்வளவு கடினம்?!

*//தற்செயலாய் போகிற போக்கில் மனக்கட்டுப்பாடு இல்லாமல் சிலர் கொட்டும் அபிப்பிராயங்களுக்கு பெரிய அழுத்தம் கொடுத்தும் சோர்வடைய வேண்டாம்* //
என்ற ஆசிரியரின் வைர வரிகள் எவ்வளவு ஆழமானவை. படித்துப் பண்பாட்டோடு நடந்துகொள்ளும் நாமே சில நேரங்களில் ஏதோ ஒரு கணத்தில் பிற்போக்காக சிந்திப்பதைத் தான் நமக்குள் இருக்கும் கிணறாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். கிணறுகளை கண்டுபிடிப்பது இருக்கட்டும் ..பிறர் சுட்டிக் காட்டும் குறைகளையாவது நீக்கிக் கொள்ள முயற்சி செய்யலாம்.

#கொலையும்_கொண்டாட்டமும்
அறிவொளி காலத்தில்  கற்றுக்கொடுக்க போய் கற்றுக் கொண்ட கதைகளைப் பற்றிக் கூறுகிறார் . பெண்தெய்வ கதைகள் ஆச்சரியப்படவும், அழவும் வைக்கின்றன.
##நாற்றம்_அடிக்கும்_வகுப்பறை.
பழ. புகழேந்தி( கரும்பலகையில் எழுதாதவை நூலில்)யின்‌ கவிதை வரிகளில் உள்ள உண்மை சில நிமிடங்களுக்கு நம்மை சிலையாக்கி விடுகிறது. தொடர்பான விவாதம் சிந்திக்கத் தூண்டுகிறது.
//சார் ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.
அனுப்பினேன்
சார்
உடனே மற்றொருவன் 
அதட்டினேன்
 
நொடிகள் நகர உள்ளேயே ஈரம் 
வகுப்பு முழுவதும் நாற்றம் அடித்தது
 என் அதிகாரம்//

//தமக்கு எதிராகப் பாயும் விமர்சனங்களை பதற்றமில்லாமல் சந்திக்கும் பக்குவப்பட்ட ஆசிரிய மனம் வகுப்பறையின் நறுமணத்துக்கு உத்தரவாதம் ஆகிறது.// என்ற ஆசிரியரின் நம்பிக்கை வரிகள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

#குழந்தைகளின் சுதந்திரம் குழந்தைகளின் கற்பனைத்திறன் என்ற இசை குரல் எழுப்பிய டால்ஸ்டாய் காந்தி மாவோ போன்றோரின் கல்விச் சிந்தனைகளை அலசுகிறது ஒரு கட்டுரை கணினி தாண்டி எதையும் யோசிக்க இயலாது இந்த காலத்தில் பெயர்களை மட்டும் தான் கொண்டாட இயலுமோ

#பாடப்புத்தகம் மாணவர்களுக்கானது. அது அகங்காரத்தின் வடிவமாக இருக்கக்கூடாது என்ற ஆசிரியரின் ஆதங்கத்தை அவரின் அனுபவங்களோடு பகிர்கிறார். அகராதி போய் அகரமுதலி வந்த கதையைப் பற்றிய குறிப்பும் இருக்கிறது..

#அறிவொளியும் இடதுசாரிகளும்,

 கல்வியும் கலாச்சாரமும்,

 வகுப்பறையில் இட ஒதுக்கீடு,

 விவாதமும் கற்பனையும்,

பாவுலோ பிரையர் கல்விமுறை, 

 நியாய வகுப்பறை என ஒவ்வொரு கட்டுரையிலும் நாம் அறிந்து கொள்ள வேண்டியவையும் சிந்திக்க வேண்டியவையும் ஏராளம். ஆசிரியர்கள்  மட்டுமின்றி கல்வியின் பால் அக்கறை உள்ள அனைவரும், குழந்தைகளின் மீது அக்கறை உள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு