12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு

#Reading marathon_2021 Book 12 புத்தகம்📙📘📗📓 ..#வானிலிருந்து_வந்தவர்கள் . ஆசிரியர்.. சிந்து சீனு வகை ..சிறுகதை தொகுப்பு பதிப்பகம் ..அன்பு நிலையம், வேலூர். அலைபேசி 98 65 22 42 92. ஆசிரியரின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு ஒன்பது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அத்தனை சிறுகதைகளும் நம்முடைய சூழலில் நடைபெறும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதோடு ஒரு படிப்பினையைத் தருவதாகவும் 👍 #நாடி_ஜோதிடம் நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வு எப்படியாவது மேன்மை அடைந்து விடாதா என்று விழும் இடங்களில் ஒன்று ஜோதிடம். ஓலைச்சுவடிகளில் தங்கள் எதிர்காலத்தைத் தேடுபவர்களில் அநேகர் பட்டம் வாங்கியோர். ஒரு பவுன் தங்கத்தகட்டிற்காக ஒரு பெண்மணி படும் துயரத்தைக் கூறி நாம் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகின்றோம் என்று காட்டி இருக்கிறார். #விவசாயி பருவகாலங்கள் பொய்த்துப்போன இந்த காலத்தில் சிறு விவசாயிகளின் வேதனை சொல்லி மாளாது தான் .இரண்டு தங்கைகளையும் 5 மகள்களையும் பெற்ற விவசாயி ,அவரின்நிலை இறுதியாக வெள்ள நிவாரண நிதிக்கு காத்திருப்பதை வலியுடன் விவரித்திருக்கிறார். வேளாண் சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தைப்...