12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு

#Reading marathon_2021
Book 12

புத்தகம்📙📘📗📓 ..#வானிலிருந்து_வந்தவர்கள் .
ஆசிரியர்.. சிந்து சீனு வகை ..சிறுகதை தொகுப்பு 
பதிப்பகம் ..அன்பு நிலையம், வேலூர். அலைபேசி 98 65 22 42 92.

ஆசிரியரின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு ஒன்பது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அத்தனை சிறுகதைகளும் நம்முடைய சூழலில் நடைபெறும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதோடு ஒரு படிப்பினையைத் தருவதாகவும் 👍

#நாடி_ஜோதிடம்
நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வு எப்படியாவது மேன்மை அடைந்து விடாதா என்று விழும் இடங்களில் ஒன்று ஜோதிடம். ஓலைச்சுவடிகளில் தங்கள் எதிர்காலத்தைத் தேடுபவர்களில் அநேகர் பட்டம் வாங்கியோர். ஒரு பவுன் தங்கத்தகட்டிற்காக ஒரு பெண்மணி படும் துயரத்தைக் கூறி நாம் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகின்றோம் என்று காட்டி இருக்கிறார்.

#விவசாயி
பருவகாலங்கள் பொய்த்துப்போன இந்த காலத்தில் சிறு விவசாயிகளின் வேதனை சொல்லி மாளாது தான் .இரண்டு தங்கைகளையும் 5 மகள்களையும் பெற்ற விவசாயி ,அவரின்நிலை இறுதியாக வெள்ள நிவாரண நிதிக்கு காத்திருப்பதை வலியுடன் விவரித்திருக்கிறார். வேளாண் சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தைப் பற்றியும் தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

#உதவி_காவல்_ஆய்வாளர்
 நேர்மையான காவல் அதிகாரியின் நினைவில் ஒரு கதை. பணியில் இருக்கும்போதே மாரடைப்பில் இறந்து விடுகிறார் நமக்கு தெரிந்த பெரும்பாலான நல்லவர்களுக்கு எல்லாம் இந்த நிலை தானோ?

#தனியார்_நிர்வாகம் 
முனைவர் பட்டம் பெற்று தனியார் பள்ளியில் பணிபுரியும் கதையின் நாயகன். பெருந்தொற்று   காலத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு நகரத்தில் இருந்து சொந்த ஊருக்குச் சென்று டீக்கடையும் நூலகமும் ஆரம்பிக்க முடிவு செய்கிறார் .

நூலகம் ஆரம்பிக்கும் அளவுக்கு விசாலமான அறிவு பெற்றுள்ள மனிதனின் மனம் கூட இந்த கொடும் காலத்தில் அரசு ஊழியர்களும், ஓய்வூதியம் பெறுபவர்களும்  நிம்மதியான வருவாயைப் பெறுகிறார்கள் எனப் பொறாமைப்படுகிறது! அன்றாடங் காய்ச்சிகளும், கிராமத்தில் படிக்கும் காலத்தில் அக்கறையற்று திரிந்தவர்களும் புறம் பேசுவதில் நாம் குறை கூறவே முடியாது என்ன செய்வது ?இது பெருந் தொற்றுக் காலம்.!!

#மகேஷ்
 எதற்கெடுத்தாலும் பார்ட்டி கொடுக்கும் இளைய தலைமுறையினரின் கதை. விழிப்புணர்வூட்டும் சிறுகதை.

#ஒரு_பகுதி 
தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் படும் துயரங்கள் ,இருதய அடைப்பிற்கு மருத்துவமனைக்கு துணையுடன் அலைவது தொடர்கதையாய்.... ஆனாலும் நம்பிக்கையுடன் தொடர்வேன் என்பது முத்தாய்ப்பு!👍

 #வானிலிருந்து_வந்தவர்கள் 
கதையின் நாயகன் டீக்கடையில் சந்திக்கும் பொறியாளர் குடும்பத்துடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களே கதை. இனிமையாக ஆரம்பித்து துயரில் முடிவது.
 வேதனைக்கு நடுவில்... ஆந்திராவிற்கு செல்லும் ஆன்மீகச் சுற்றுலா பற்றி தனியாக பயணம் கட்டுரையில் எழுதி இருக்கலாம் அவ்வளவு தகவல்கள்..

#கோழிப்பண்ணையும்_குப்பையான_குளமும்.
 குளமும், கிராமங்களும்
வருவாய்க்காக கோழிப் பண்ணைகளால் பாதிக்கப்படுவது பற்றிய  கதை.

#நியாயவிலைக்கடை நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் பொருட்களின் தரம், பரிசோதனை செய்யும் முறை, ஆதார் கார்டில் விரல்ரேகை பதிவது என ஒரு சாமானியனின் பார்வையில் நகர்கிறது.

அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கதையாக்கி,சமூக சிந்தனைகளையும் விதைக்க முயற்சிக்கிறார் ஆசிரியர்.

வாழ்த்துக்கள்💐

Comments

  1. அருமையான விமர்சனம். நறுக் சுறுக் பானு :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

13.ராசாத்தி ... சிந்து சீனு