7.சிறகுக்குள் வானம்..ஆர்.பாலகிருஷ்ணன்.
📚📚📚📚📚📚 புத்தகம்.. சிறகுக்குள் வானம் ஆசிரியர் .. ஆர் பாலகிருஷ்ணன் ..ஐஏஎஸ் பக்கங்கள்.. 159 பதிப்பகம் .. உயிர்மை. வகை... கட்டுரை 'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் 'என்ற ஆசிரியரின் நூலைப் படித்தபிறகு தேர்ந்தெடுத்த புத்தகம். சிறகுக்குள் வானம்... தலைப்பே நிறைய நேரம் எடுத்துக் கொண்டது. சிறகை விரும்பாதவர் யார் ?அது ஒரு குறியீடு அல்லவா? நம்மை கீழிருந்து மேல் நோக்கி அழைத்துச் செல்வது தானே? என்று தொடர்ந்து கொண்டே இருந்தது ..ஆசிரியரும் தலைப்பை பற்றி தன் உரையில் அருமையான விளக்கம் அளித்துள்ளார். 24 கட்டுரைகளாக தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் அதை ஒட்டிய ஒரு கவிதை அருமை. 'குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் படணும் ',என்பார்களே அதுபோல ,ஆசிரியர் காமராஜர் அவர்களால் 14 வயதில் #ஐஏஎஸ் படி என்று ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறார். அதனால்தான், 1984இல் தமிழில் முதன் முறையாக தேர்வு எழுதி, தன் உழைப்பால் முதல் முயற்சியிலேயே வெற்றியும் பெற்றிருக்கிறார். //இலக்கு ஒரு தொலைநோக்குப் பார்வையை நமக்கு தருகிறது. நம்மை உந்துகிறது செயல்பட வைக்கிறது .//எ...