7.சிறகுக்குள் வானம்..ஆர்.பாலகிருஷ்ணன்.

📚📚📚📚📚📚

புத்தகம்.. சிறகுக்குள் வானம்

 ஆசிரியர் .. ஆர் பாலகிருஷ்ணன் ..ஐஏஎஸ்
பக்கங்கள்.. 159 
பதிப்பகம் .. உயிர்மை.
 வகை... கட்டுரை

'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் 'என்ற ஆசிரியரின்  நூலைப் படித்தபிறகு தேர்ந்தெடுத்த புத்தகம்.

சிறகுக்குள் வானம்... தலைப்பே நிறைய நேரம் எடுத்துக் கொண்டது. சிறகை விரும்பாதவர் யார் ?அது ஒரு குறியீடு அல்லவா? நம்மை கீழிருந்து மேல் நோக்கி அழைத்துச் செல்வது தானே? என்று தொடர்ந்து கொண்டே இருந்தது ..ஆசிரியரும் தலைப்பை பற்றி தன் உரையில் அருமையான விளக்கம் அளித்துள்ளார்.

24 கட்டுரைகளாக தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் அதை ஒட்டிய ஒரு கவிதை அருமை.

'குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் படணும் ',என்பார்களே அதுபோல ,ஆசிரியர் காமராஜர் அவர்களால் 14 வயதில் #ஐஏஎஸ் படி என்று ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறார். அதனால்தான், 1984இல் தமிழில் முதன் முறையாக தேர்வு எழுதி, தன் உழைப்பால் முதல் முயற்சியிலேயே வெற்றியும் பெற்றிருக்கிறார்.

//இலக்கு ஒரு தொலைநோக்குப் பார்வையை நமக்கு தருகிறது. நம்மை  உந்துகிறது செயல்பட வைக்கிறது .//என்ற பீட்டர் டிரக்கர் , மேலாண்மை வல்லுநரின் கருத்து பலரை யோசிக்க வைக்கும். பள்ளியில் படிக்கும்போதே நீ என்னவாகப் போகிறாய்? என்ற கேள்வியை எதிர் கொள்வோம் .ஆனால் அந்த ஆசை நிறைவேறுமா? நம் விருப்பப்படி படிப்போமா அல்லது வேலை பார்ப்போமா என்றால் 90% இல்லை என்பதே பதில். தெளிவில்லாத இலக்கும் ,குடும்பச் சூழ்நிலையும் கிடைத்த வேலையை பற்றிக் கொள்ள செய்கிறது.ஆனால் தெளிவாகச் செயல்படவும், திட்டமிட்டு வெற்றி பெறவும் இலக்கு அவசியம் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது .

#ரகுராஜ்பூர் ஒடிசாவில் உள்ள ஒரு கலை கிராமம் ..பட்டச்சித்ரா எனப்படும் மரபுசார்ந்த ஓவியக்கலை ,கோத்திப்புவா நடனம், அதன் குரு பத்மஸ்ரீ விருது பெற்ற குரு மாகுனி தாஸ் பற்றிப்  படித்தபிறகு ஒரு முறையாவது அந்த ஊரைச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது.

//ஒத்திப் போடுவது என்பது முன்கூட்டியே ஒப்புக் கொள்ளப்பட்ட தோல்வி// என்றும்  
 //நிகழ்காலம் என்பதே நிஜம்// என்றும் தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

*1992 பார்சிலோனா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 'டெரக் ரெட்மாண்ட்' , *மும்பையில் கட்டுமான நிறுவனம் ஒன்றின் அதிபர் அசோக் காடே, *சென்னை ஃபுட் கிங் சரத்குமார்‌ போன்றோரின் வாழ்க்கை வழிகாட்டுதல்கள்..

தமிழ்க்குடி மகன் , புலவர்  மு. சோமநாதன் போன்ற தன் ஆசிரியர்களையும் போற்றி ஆசிரியர்களுக்கும் வழிகாட்டி இருக்கிறார். 

ஒவ்வொரு கட்டுரையிலும் தன் அனுபவங்களை இணைத்து இளைஞர்களுக்கு வழிகாட்டியுள்ளார் 🎉

//#கனவு மெய்ப்பட வேண்டும் என்றால்

 கனவு 'மெய்' எனப் படவேண்டும்.

கனவு மெய்யாக... பாடுபட வேண்டும்.

'#மெய்யாகப்  பாடுபடவேண்டும்.🔥

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு