51.நன்மைகளின் கருவூலம்.

🤸‍♂️🤸‍♀️🏋‍♀️🏋‍♂️🤸🤾‍♀️🤾‍♂️🤼‍♂️🤼‍♀️🏋‍♂️⛹🏂⛷🤾‍♂️🤽🤽‍♀️
புத்தகம்.. நன்மைகளின் கருவூலம்.
 ஆசிரியர்கள்.. பிரியசகி, ஜோசப் ஜெயராஜ்.
பதிப்பகம் ..பாரதி புத்தகாலயம்.
பக்கங்கள் ..160
வகை ..கட்டுரை தொகுப்பு

#சிறப்பு..#கவிதை_உறவு_ 2019 சிறந்த நூல்களுக்கான விழாவில் சிறந்த குழந்தை வளர்ப்பு உளவியல் நூல் என்ற பரிசைப் பெற்றது.💐💐

💜ஆசிரியர்களைப் பற்றி..
#கல்வியில்_நாடகம் பயிலரங்கில் பிரியசகி அவர்களை முதன்முதலாக சந்தித்தேன் . பழகுவதற்கு இனியவர். #கற்றல்_குறைபாடுள்ள_ குழந்தைகளுக்கான அடுத்த பயிலரங்கில் இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் அக்கறையுடன் பொறுமையாக பதில் அளித்த விதம், உளவியல் சிந்தனைகளை நம் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் உடன் இணைந்து நடத்திய விதம் இந்த புத்தகத்தை உடனே படிக்க தூண்டியது.
அதே பயிலரங்கின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மற்றொரு ஆசிரியர் ஜோசப் ஜெயராஜ் அவர்களும் உளவியலாளர், பயிற்சிப்பட்டறை நிபுணர் .எளிமையான சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கங்களை அளிக்கிறார். இருவருக்கும் எனது நன்றிகளும் பேரன்பும்❤🙏🏻

நூலைப்பற்றி....
26 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கட்டுரைக்கும் முன்பாக
 💜ஒரு சிறந்த கவிதையின் வரிகள் ,

💜ஏதேனும் ஒரு குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சி,  

💜அதனைத் தவறாக கையாள்வதால் ஏற்படும் பிரச்சனைகள் ,

💜சரியாக எவ்வாறு கையாளுவது என்பதற்கான யோசனைகள் ,

❤தகுந்த உளவியலாளர்களின் கருத்து 
 என ஒரு தெளிந்த நீரோட்டம் போல செல்கிறது வாசிப்பு. 💜

இடையிடையே நம் குழந்தைகளை கையாளும் விதத்தை ஒப்பிட்டுக் கொள்கிறது மனது .சிறிய குழந்தை முதல் பதின்ம வயதினர் வரை அனைத்து வயதினரும் சந்திக்கும் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்துள்ளனர்.

💖
நன்மைகளின் கருவூலம் #பெற்றோர்கள்தான்.. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதை நமக்கு வலிக்காமல் சொல்லியிருக்கிறார். நம்மிடம் இல்லாத நல்ல பழக்கங்களை நம் பிள்ளைகளிடம் எதிர்பார்க்க முடியுமா? என்று ஒரு கட்டுரையிலும் ,
அதீத அன்பும் ஆபத்தானதே என்று மற்றொரு கட்டுரையிலும் விளக்கி இருக்கிறார்கள்.

கவிதைகள்❤❤
//உணர்த்தாத அன்பும் 
ஊறாத கிணறும் 
இருந்தும் பயன் என்ன..(பிரியசகி)
💖
//காலையில் பரபரப்பு 
மாலையில் பரபரப்பு 
இரவில் தொலைக்காட்சி இடையிடையே விருந்தாளி 
எப்போது நான் பேச? 
எப்போது நான் கேட்க?//
(பொன்மணி வைரமுத்து)

அனைவருமே படிக்கவேண்டிய ஒரு நூல்🤝🏻

Comments

Popular posts from this blog

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு

13.ராசாத்தி ... சிந்து சீனு