ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா? _சுப.வீ

2021_8📚📚📚📚📚

புத்தகம்.. ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா?

 ஆசிரியர் .. சுப. வீரபாண்டியன்
பதிப்பகம் கருஞ்சட்டை பதிப்பகம்
பக்கங்கள்..40

வகை..கட்டுரை
 #அறிவுத்தேடல் என்ற நிகழ்வில் இடம்பெற்றஆசிரியரின் உரையை சிறு நூலாக மாற்றியிருக்கிறார்கள்.
 
இயற்பியலை எளிமையாக எழுதுவதும், அறிவியல் துறை சாராதவர்களுக்கும்  புரியும் வகையில் இருப்பதும் ஹாக்கிங் எழுத்துக்களின் சிறப்பு.

#Brief answers to the big question என்ற  புத்தகத்தில் இடம்பெற்ற முதல் கேள்வி தான் கடவுள் இருக்கிறாரா? என்பது.
ஸ்டீபன் ஹாக்கிங்  வாழ்க்கை பற்றிய சுருக்கமான  குறிப்பும் உண்டு.

கடவுள் நம்பிக்கை நிறைந்த நியூட்டன் ,அதைப்பற்றி கவலை இல்லாமல் இருந்த  ஐன்ஸ்டீன் அவர்களது கருத்துக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இயேசு பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கிரேக்க அறிவியல் அறிஞர் அரிஸ்டார்கஸ்( ‌ Aristarchus) சூரியன் தான் மையமாக இருக்கிறது., சூரியன் பூமி நிலா ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் நிழல்களால்  தான் கிரகணங்கள் உருவாகிறது, சூரியனும் ஒரு நட்சத்திரமே போன்ற அறிவியல் உண்மைகளை கூறியுள்ளார்.

E=MC^2 எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.கருந்துளை ஒன்று மட்டும் இல்லையாம்.

 Dark matter and Dark energy ,Time beginning என்று ஆய்வுக்கான களம்‌அறிவியலில் நீண்டு கொண்டே‌தான் செல்லும்..

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது அதில் ஒன்று 
//What next? என்பது மட்டுமே என்னை இயக்கிக் கொண்டு இருக்கிறது.//

இந்தப் புத்தகத்தில் அடிக்கடி எனக்கு தோன்றும் ஒரு கேள்வி உள்ளது.
//நீங்கள் பெரியார் காலத்திலிருந்து எல்லோரும் இத்தனை அறிவியல் கருத்துக்களைச் சொன்னாலும் மூடநம்பிக்கைகள் வளர்ந்து இருக்கின்றனவே என்ன காரணம்?//
பதில் அருமை.

நானும் ஆற்றின் திசையில் தான் பயணிக்கிறேன்😎நீச்சலே தெரியாத போது எதிர்நீச்சல் எப்படி?
சிறிய புத்தகம்.நிறைய‌ தகவல்கள்‌👍

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு