1.வானவில்...ந.க.தீப்ஷிகா

📚📚📚📚📚📚 #வாசிப்பனுபவம்_2021 புத்தகம்.. # வானவில்(சிறார் பாடல்கள்) #ஆசிரியர்..ந.க.தீப்ஷிகா பதிப்பகம் ..சாரல் மையம், திருச்சி. 735 89 686 95 பக்கங்கள்..30 🌈 ஏழாம் வகுப்பில் படிக்கும் சிறுமி இந்த நூலின் ஆசிரியர்.கதை சொல்லியும்,பாடல்களைப் பாடியும் அசத்தியவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறார். குழந்தைகளின் மொழியைக்காது கொடுத்து கேட்பவர்கள் வெகுசிலரே .அவ்வாறு குழந்தைகளின் வாழ்க்கைக்குள் நுழைந்து ,அவர்களின் மொழியை கேட்டு, புரிந்து, பாடல்களாகவும், கதைகளாகவும் நமக்கு #அழ.வள்ளியப்பா தொடங்கி தற்காலம் வரை சில எழுத்தாளர்கள் நமக்கு வழங்கி வருகின்றனர். அதிலும் குழந்தைகளுக்கான இலக்கியங்களை குழந்தைகளே இயற்றுவது என்பது ஒரு தனி சிறப்பு தான். அவர்களின் உலகை அவர்களே அவர்கள் மொழியில் விவரிப்பது...❤ குழந்தைத்தன மிக்க தீப்ஷிகாவின் பாடல் வரிகளில் நல்ல முதிர்ச்சியும் இருக்கிறது. அன்னை பாடல் ,தன்னம்பிக்கையைக் சுட்டிக்காட்டும் தஞ்சாவூரு பொம்மை பாடல், சுறுசுறுப்பை ஊட்டும் தேனி பாடல் பாரதியார் பற்றிய பாடல்கள் என அனைத்து பாடல்க...