1.வானவில்...ந.க.தீப்ஷிகா

📚📚📚📚📚📚
#வாசிப்பனுபவம்_2021

புத்தகம்.. #வானவில்(சிறார் பாடல்கள்)
#ஆசிரியர்..ந.க.தீப்ஷிகா
பதிப்பகம் ..சாரல் மையம்,     திருச்சி.
           735 89 686 95
பக்கங்கள்..30
🌈
ஏழாம் வகுப்பில் படிக்கும் சிறுமி இந்த நூலின் ஆசிரியர்.கதை சொல்லியும்,பாடல்களைப் பாடியும் அசத்தியவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

குழந்தைகளின் மொழியைக்காது கொடுத்து கேட்பவர்கள் வெகுசிலரே .அவ்வாறு குழந்தைகளின் வாழ்க்கைக்குள் நுழைந்து ,அவர்களின் மொழியை கேட்டு, புரிந்து, பாடல்களாகவும், கதைகளாகவும் நமக்கு #அழ.வள்ளியப்பா தொடங்கி தற்காலம் வரை சில எழுத்தாளர்கள் நமக்கு வழங்கி  வருகின்றனர். அதிலும் குழந்தைகளுக்கான இலக்கியங்களை குழந்தைகளே இயற்றுவது என்பது ஒரு தனி சிறப்பு தான். அவர்களின் உலகை அவர்களே அவர்கள் மொழியில் விவரிப்பது...❤
குழந்தைத்தன மிக்க தீப்ஷிகாவின் பாடல் வரிகளில் நல்ல முதிர்ச்சியும் இருக்கிறது. அன்னை பாடல் ,தன்னம்பிக்கையைக் சுட்டிக்காட்டும் தஞ்சாவூரு பொம்மை பாடல், சுறுசுறுப்பை ஊட்டும் தேனி பாடல் பாரதியார் பற்றிய பாடல்கள் என அனைத்து பாடல்களுமே அருமையாக உள்ளன. மாட்டு வண்டியையும் திண்ணையையும் நகரக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்துள்ளார் என்றே கூறலாம்.

நூலின் சிறப்பை இவ்வாறு சிறப்பிக்க முயல்கிறேன் .
என் மாணவிகளிடம் இப்பாடல் புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னேன் .பாடல்கள் எவ்வாறு இருந்தது? உங்களுக்கு பிடித்த பாடல் எது? என்று நான் கேட்டுக் கொண்டிருக்க,அவர்கள் புத்தகத்தின் வழுவழுப்பை வருடியபடி, என்னிடம் வினாக்கணைகள் தொடுத்துக் கொண்டிருந்தனர்.
  *டீச்சர், ஒரு நாளைக்கு இந்த புக் வீட்டுக்கு தருவீங்களா ?
*இந்த புக் எவ்வளவு விலை ?
*ஒரு அம்பது ரூபாய் சேர்த்து வெச்சு கொடுத்தா எனக்கே இந்த புத்தகத்தை கொடுப்பீங்களா ?என்று ....
வேறென்ன சொல்ல?

சரி தீப்ஷிகாவுக்கென ரசிகர் பட்டாளம் சேர ஆரம்பிச்சாச்சு. (என்னையும் சேர்த்துதான்) தீப்ஷிகாவின் பயணம் மேலும் வெற்றி பயணமாக தொடர வாழ்த்துகள்💐💐
🌈
#வானவில்
மழைக்கு முன்னும் பின்னும் 
பவனியாக வந்திடும்
வில்லுவண்டி போலவே 
பலவித வண்ணங்களில் விண்ணையும் மண்ணையும் சேர்த்திடும் 
வானில் வரும் வானவில்லே..🌈

Comments

  1. முதல் வரியிலிருந்தே பிரம்மிப்பு தொடர்கிறது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

10. குழந்தைகளின் நூறு மொழிகள்-ச.மாடசாமி ஐயா

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்