2.மக்கு...By அருண்மனோகர்

வாசிப்பனுபவம் #2021
📚📚📚📚📚📚
#புத்தகம்..மக்கு
ஆசிரியர்..அருண் மனோகர்.
பக்கங்கள்..31
Amazon Kindle ல் (#pentopublish2021 ) வெளியிடப்பட்ட நூல்.
   ஒரு கதையைப் படிக்கும் போது அது புனைவோ,உண்மையான கதையோ ஏதோ ஒரு புள்ளியில் நம்மை அந்த கதை இணைத்துக் கொள்ளும்.நம்மால் மறக்க இயலாத வரிசைகளில் ஒன்றாக இணைந்து விடும்.அதுபோல ஐந்தாம் வகுப்பில் இருந்தே கணிணி மேல் ஆர்வமிக்கவர், ஆசிரியர் பயிற்சியில் விருப்பமில்லாமல் இணைந்த நிகழ்வே என்னை இக்கதையின் உள்ளே  இழுத்துச் சென்றது. 

விரும்பியது கிடைக்காவிட்டாலும் கிடைத்ததை விரும்பிச் செய்தால் சாதிக்க முடியும் என்று வெளிச்சமிட்டுக் காட்டும் நூல்.
 பள்ளி மாணவரோ, கல்லூரியில் படிப்பவரோ,தடம் மாறி இருந்தாலும் ,சகவாசத்தில் தடுமாறி  இருந்தாலும் இந்தக் கதையைப் படித்த பிறகு, குறிக்கோளை நோக்கி ஓர் எட்டு வைக்க முயற்சிப்பார்கள் என்பது திண்ணம்.

NOTORIOUS என்ற ஒரு சொல் ஏற்படுத்திய பாதிப்பே வளர்ச்சிப் பாதைக்குத் திருப்புகிறது.ஆனாலும்..தீயினால் சுட்ட புண் உள்ளாறும்...என்ற திருக்குறள் தான் நினைவுக்கு வருகின்றது.

ச.மாடசாமி ஐயா அவர்களின் கருத்துப்படி ஆசிரியர்களுக்குள்ளும் பல கிணறுகள்  இருக்கின்றன.நமக்குள் இருக்கும் கிணறுகளைக் கண்டறிந்து முதலில் நீக்கிக் கொள்வோம் என்று கூறியிருப்பார்.(#குழந்தைகளின்_நூறு_மொழிகள்)  ..இடையிடையே SM சாரின் இந்நூலில் உள்ள கட்டுரைகள் நினைவுக்கு 
வருவதை தவிர்க்க இயலவில்லை.

👫🏻👭🏻👭🏻வாழ்க்கையில் நல்ல  நண்பர்கள் கிடைப்பது பெறுதற்கரிய பேறு என்பது இக்கதையில் வரும் நண்பர்களான மனோ,சக்தி,ஞானம் இவர்களின் நட்பைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது.
👍🏻
இது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை  தரும் நூல் என்று ஒரு வரியில் சொல்லி விடலாம்.ஆனால் ..,

இது ஆசிரியர்களுக்கும் ஒரு செய்தி வைத்திருக்கிறது.கற்பிக்கும் புனிதமான இடத்தில் சாதியைப் பார்க்காதீர்கள் என்று. 
மாணவர்களைக் கடிந்து கொள்ளும் சொற்களில் கூட கவனம் வைக்க வேண்டும் என்று..

நண்பர்களுக்கு ஒரு வழிகாட்டல் இருக்கிறது.எப்படியெல்லாம் தன்னம்பிக்கையூட்டி நல்வழிப்படுத்தலாம் என்று..

தமிழ்வழியோ,ஆங்கிலவழியோ மீடியம் மாறும் போது மாணவர்கள் அடையும் உளவியல் பிரச்சனைகள் ...

போகிறபோக்கில் அப்படியே இட ஒதுக்கீடு பற்றிப் பேசி அரசியலையும் நுழைத்திருக்கிறார்.

#ஆசிரியருக்கு..
மேலும் பல நூல்களைப் படிக்கவும்,எழுதவும்  வாழ்த்துகள்💐💐

 கடைசியாக..ஒரே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியரின் முதல் நூல் என்பதில் பெருமையும்,மகிழ்ச்சியும்.ஆகவே நண்பர்கள் படித்து உங்கள் கருத்துகளை தெரிவிக்க விரும்புகிறேன்.❤

Comments

Post a Comment

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு