3.கொல்லனின் ஆறு பெண்மக்கள் ..2021

3/50+📚📚📚📚📚📚📚

 புத்தகம்...#கொல்லனின்_ஆறு_பெண்மக்கள். 

ஆசிரியர்..#கோணங்கி

 பதிப்பகம் ..பாரதி புத்தகாலயம்.
 வகை ..சிறுகதை தொகுப்பு 
பக்கங்கள்..195

பாரதி புத்தகாலயம் 50 சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்களை வழங்கியபோது வாங்கியது. கோணங்கியின் எழுத்துக்களை எங்கே படித்தேன் என்பதே நினைவில் இல்லை. ஆனால் புத்தகத்தை பார்த்ததும் நமக்கு பிடிக்கும் என்று தோன்றவே வாங்கினேன் .ஏமாற்றம் தரவில்லை.

அம்மாவின் குடையுடன் வந்த சிரங்கு வத்தி என்ற தலைப்பில் படிக்க ஆரம்பித்தவுடன் முதல் சிறுகதையா? இல்லையே என் தம்பி கோணங்கி என்று முதல் பத்தியில் படித்தோமே என்று  யோசித்துக் கொண்டே தான் படித்தேன் .அது எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் அணிந்துரை என்று இறுதியாகத் தான் தெரிந்தது."அந்த வயதிலேயே அவனுக்கு மறுக்கத் தெரிந்தது" போன்ற வரிகள் எத்தனையோ கதைகளை உள்ளடக்கி இருந்தது .பால்யகால நினைவுகள் அவ்வளவு இதம்.

கோப்பம்மாள், கொல்லனின் ஆறு பெண்மக்கள் ,ஈஸ்வரி அக்காளின் பாட்டு, தாத்தாவின் பேனா, அப்பாவின் குகையில் இருக்கிறேன் என 22 சிறுகதைகளும் ஏதோ ஒரு நிகழ்வில்,ஒரு சொல்லில் நம்மை சிறு பிராயத்து க்கு அழைத்துச் செல்கின்றன.

.ஒரு கதையில் புளியம் பூவின் உள்ளே தெரியும் வரிகளை புலியோடு ஒப்பிட்டு இருப்பார். சிறுவயதில் சொப்பு விளையாட்டில் தவறாமல் இடம் பெறும் புளியம்பூ சோறாக அல்லது பொரியலாக.  ஆனால் பூவில் வரிகள் இருக்குமோ என்ற சந்தேகம் வந்த போது கூகுள் உதவியது.😍

கொல்லனின் ஆறு பெண்மக்கள் கொல்லனின் வலியையும் ,குடும்பத் தலைவரின் இழப்பை 
செய்யும் பெண்களின் உறுதியையும், வலியையும் ஒருசேர விவரிக்கிறது.

நீல நிற குதிரைகள் ரூர்கேலா வில் இரும்பு கம்பெனிகளில் பணியாற்றும் பணியாளர்களின் மனநிலையைக் காட்டுகிறது.

 மதுரைக்கு வந்த ஒப்பனை காரன்.நவீனத்தால் நாடக நடிகர்கள் மட்டுமா பாதிக்கப்பட்டார்கள்? நாங்களும் தான் என்கிறான்.

மீண்டும் ஆண்டாளின் தெருக்களில் நண்பர்களுடன் விவாதிக்க வேண்டிய பகுதி இரண்டு முறை  படித்தும் இன்னும் புரிந்து கொள்ளப்பட வேண்டியது ஏதோ இருக்கிறது என்பதுபோல..

 ஒவ்வொரு கதையிலும் குழந்தை பருவ விளையாட்டுக்கள்..

 ஒவ்வொரு கதையிலும் தற்கால குழந்தைகள் கேள்விப்பட்டிராத கொல்லன் ,வண்ணாத்தி கோனார், சம்சாரி , கொத்தன் .... வெள்ளந்தியான மனிதர்கள்..

 வார்த்தைகளால் விவரிக்க முடியாத வாசிப்பனுபவத்தை கொடுத்த புத்தகம்..
வாசியுங்கள்👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு