9.காலம் தோறும் பெண்_இராஜம் கிருஷ்ணன்.

2021📚📚📚📚📚 புத்தகம்.. காலம்தோறும் பெண் (சமூகவியல் ஆய்வு) ஆசிரியர் .. ராஜம் கிருஷ்ணன். பதிப்பகம்.. சிந்தன் புக்ஸ் சென்னை. Mobile 9445123164 வகை...கட்டுரை பக்கங்கள்..143 பெண் ஏன் அடிமையானாள்? எப்படி ஆனாள்? என ஆராய்கிறார் ஆசிரியர் ராஜம் கிருஷ்ணன் 25 கட்டுரைகளில்.. ஆதி நாட்களில் மனித இனக் குழந்தைகளின் தலைவியாக, தாயாக இருந்த பெண்கள் எப்போது ஒடுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு, அடிமையாக்கப்பட்டாள்? 'தெய்வந் தொழாள் கொழுநற்றொழுதெழுவாள் ' என்று வள்ளுவர் கூறியுள்ளார் எனில் எந்த நூற்றாண்டில் இப்படி மாறியது? வேத காலத்தில் பெண்களுக்கு மரியாதை இருந்ததா? வேதங்களையே படிக்கக் கூடாது என்ற நிலை தானே இருந்தது? கல்வி அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்கிறதா? கிடைத்த வேலையை செய்ய முடிகிறதா? இவை போன்ற வினாக்களை எழுப்பி ஆசிரியர் தான் பார்த்து பாதிப்படைந்த சம்பவங்களைப் பகிர்ந்து விடை காணவும்,படிப்பவர்களை சிந்திக்கவும் வைத்திருக்கிறார்...