6.கல்விச்சிக்கல்கள்..(தீர்வை நோக்கி...). *உமா‌ மகேஸ்வரி*

📚📚📚📚
புத்தகம்.. கல்விச் சிக்கல்கள்.. தீர்வை நோக்கி..
ஆசிரியர்  ..சு.உமா மகேஸ்வரி.
பதிப்பகம்..#பன்மை_வெளி ,சென்னை.
 944 391 8095
பக்கங்கள்.. 208
வகை.. கட்டுரை தொகுப்பு.

ஆசிரியரைப் பற்றி... முகநூலில் அறிமுகம் ஆனவர். சென்னையில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிபவர் .பன்முகத் திறமை கொண்டவர் . மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பவர்  என்பது சிறப்புத் தகுதி.

புத்தகத்தைப் பற்றி..
இந்து காமதேனு இதழில் கட்டுரைகளாக வெளிவந்தவை. சமகாலத்தில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கிறது. சிக்கல்களைப் பற்றி மட்டும் பேசாமல் தீர்வை நோக்கி நம்மை நகர வைப்பதே இந்த நூலின் வெற்றி.
31 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. 

இணையவழிக் கல்வி பற்றிய முதல் கட்டுரையில் ஆன்லைன் கல்வியினால் ஏற்பட்ட விபரீதங்களைச் சுட்டிக் காட்டி,ஒக்லஹாமா பல்கலைக்கழக உளவியல் வல்லுனர் டக்வாலன்டினா அவர்களின் மூன்று முடிவுகளையும் குறிப்பிட்டுள்ளார் .

அதில் முக்கியமானது  தற்போதைய கற்கும் சூழலில்.. கற்றல் எதிர்ப்பு மனநிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுவது (Anti Education)..
கொரானா காலம் தொடர்ந்தால் ஏற்படும் இடைநிற்றலைக் குறித்து கல்வியாளர்கள் பலர் குரல் கொடுத்தும் தீர்வு கிட்டவில்லை என்பதே கசப்பான உண்மை.
#வீதிகளே வகுப்பறைகள் போன்ற முயற்சிகளில் சில ஆசிரியர்கள் ஆர்வமாக செயல்படுகின்றனர்.அவை மேலும் பல மாணவர்களைச் சென்றடைய வேண்டும்.
 2. தமிழக பள்ளிக் கல்வியும், 2020 புதிய கல்விக் கொள்கையும் அரசுப் பள்ளிகளில் மேம்படுத்த வேண்டிய தேவைகள்..

🔥மருத்துவக் கல்விக்கு ஒதுக்கீடு தந்து கல்வி வாய்ப்பை சுருக்கியதை அறிவோமா?

 என்ன சொல்கிறது அரசாணை 145?

 பலனற்றுப் போகும் பயிற்சி வகுப்புகள்..

பதிவேடு மட்டும் போதுமா பாடம் நடத்த வேண்டாமா?
🔥 ஆதிக்கம் செய்யும் ஆசிரியர் சங்கங்கள்

🔥விருது அரசியல்

 பாலின பாகுபாட்டில் இருந்து எப்போது விடுதலை?...
 மொழி வளர்ச்சியில் பள்ளிகளின் பங்கு  என்ன ?
*🔥கல்விக்காக ஒதுக்கும் நிதியை முறையாக பயன்படுத்துகிறோமா?

 மாணவர்களின் வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கு என்ன? 
🔥பலனளிக்கின்றனவா பள்ளி நூலகங்கள்? *பராமரிக்கப்படாத கழிப்பறைகள்.. பாதிக்கப்படும் மாணவர்கள்.. இது போன்ற தலைப்புகளே கட்டுரைகளின் விவரத்தை நமக்கு சொல்லி விடும்.

தான் ஒரு ஆசிரியர் என்றாலும் ஆசிரியர்களின் பக்கத்திலும் உள்ள குறைகளையும் பட்டியலிட்டு எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்று அலசி இருக்கிறார்.
 கடைசிக் கட்டுரை..
பள்ளிக்குள் பெற்றோர்களை வரவேற்போம் ...இதில் SMC எனப்படும் பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குகிறார். 

பெற்றோர்களை வரவேற்கும் அரசுப்பள்ளிகள் சிலவற்றை உதாரணங்களாக எடுத்துக்காட்டியுள்ளார் அதில் ஒன்று பிஎஸ்கே  தொடக்கப்பள்ளி.. Maragathavalli Palaniappan 💐💐

 பெற்றோர்களின் மன நிலையை மாற்றுவது
கடினம் என்று முடங்கி யுள்ள நமக்கு நேர்மறையான எண்ணங்களை விதைக்கிறது இத்தகைய ஆசிரியர்களின் செயல்பாடுகள். 🎉

இந்த நூல் ஆசிரியர்களை தாண்டி இளம் பெற்றோர்கள் ,படித்த இளைஞர்கள் ஆகியோர் வாசிக்கவேண்டும். அருகிலுள்ள அல்லது தான் படித்த பள்ளிக்கு நிச்சயம் இந்த நூல் அழைத்துச் செல்லும் ஒரு மாற்றத்தின் தொடக்கமாக...
அனைவரும் வாசிக்கலாம்.

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு