Posts

Showing posts from May, 2025

16.கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் கதை

Image
#அறிவியல் புத்தகம் ..கொஞ்சம் அறிவியல் , கொஞ்சம் கதை. ஆசிரியர்... என் சொக்கன்  பதிப்பகம்.. மதி நிலையம்  சென்னை 86 . 044-28111506. சில வருடங்களுக்கு முன்பு வேலூரில் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம். குமுதம், கோகுலம், முத்தாரம், சூரியக்கதிர் போன்ற புத்தகங்களில் வெளிவந்த கதை/ கட்டுரைகளின் தொகுப்பு .கட்டுரைகள் என்பதைவிட கதைகள் என்றே சொல்லலாம். அவ்வளவு சுவாரசியமாக விஞ்ஞானிகளின் வாழ்வில் நடந்த சிறுசிறு சம்பவங்களின் மூலம் அவர்களை அறிமுகப் படுத்துகிறார்  ஆசிரியர்.  பள்ளி நாட்களில் ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை அறிமுகப்படுத்தும் போது 'யுரேகா' என்று ஓடிய சம்பவத்தை கூறாத அறிவியல் ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் .இதே வகையில் கோப்பர்நிக்கஸ் சார்லஸ் டார்வின் , அச்சு எந்திரத்தை கண்டுபிடித்த குட்டன்பர்க், மின்காந்தப் புலத்தை வகுப்பறையில் கண்டுபிடித்த ஹன்ஸ் ஓர்ஸ்டட், 'பேக்லைட் 'என்ற பிளாஸ்டிக் தொழில்நுட்பம் கண்டுபிடித்த லியோ, பேராசிரியர் யஷ்பால், பாராசூட் கண்டுபிடித்த செபாஸ்டியன், பில்கேட்ஸ், ஜெகதீஷ் சந்திரபோஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ,அணுவை முதன்முதலில் #அடோ...

15.கிடை

Image
முகநூலில்..June 15/2021 #கிராவைக்_கொண்டாடுவோம் புத்தகம் ..கிடை  வகை ..குறுநாவல்  பக்கங்கள்.. 60  பதிப்பகம் ..காலச்சுவடு கி.ராவின் எழுத்துக்களை சிறுவயதிலிருந்தே வாசித்த அனுபவம் இருந்தாலும் அவருடைய எந்த புத்தகமும் அலமாரியில் இல்லை. அதற்காகவே CBF2021ல் இந்த நாவலை வாங்கினேன்.   குறுநாவல் அளவில் சிறியதாக இருந்தாலும் பேசப்படும் விஷயங்கள் அதிகம். #செம்மறி ஆடு, வெள்ளாடு களின் வகைகளைப் பற்றி...  #கிடையில் பாங்கு பிரிப்பதைப் பற்றி...  #கீதாரியின் வேலையைப்பற்றி..  #வயதான கீதாரிகளின் கைத்திறமைகள் பற்றி...  #கிடையை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்பவர்கள் பாடு பற்றி.. #இடைக்காடர் என்னும் சித்தர் பஞ்ச காலத்தில் தன் ஆடுகளை எப்படி வளர்த்தார் என்பது பற்றி... #மக்களின் மூட நம்பிக்கைகளைப் பயன் படுத்திக் குளிர்காயும் பொன்னுசாமி நாயக்கர் போன்ற மனிதர்களைப் பற்றி (பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக்கொள்கிறான்) ... #ராமக்கோனார்  முதன் முதலாக திருச்செந்தூருக்கு ரயிலில் சென்று, முதன்முதலில் கடலைப்‌பார்த்த கதை மூலம் அவர்களின்  நகைச்சுவை  உணர்வு பற்றி ...