இதயச்சுரங்கம்

இதயச்சுரங்கம் (மணியன்)

2/100
புத்தகம்..இதயச் சுரங்கம் 
ஆசிரியர் _மணியன். 
பதிப்பகம். பழனியப்பா பிரதர்ஸ் சென்னை 14.
தோழி A.Sankari கொடுத்தது. அவர்கள் தொடராக பள்ளி வயதில் படித்தது.மனதை பாதித்த கதை என்று தேடி வாங்கிய புத்தகம் இது.
 இந்தக் கதையில் வரும் கமலா,கலா, ஜெயந்தி, மங்களம், முரளி ஆகியோர் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்று ஆசிரியரே அறிமுகப் படுத்துகிறார். ஆனால் 2020 ல்  கமலா போல் தியாகம் செய்பவர்களைப் பார்ப்பது கடினம். (முதல் பதிப்பு 1977)
கதையில் இராமநாதன்_பாகீரதி தம்பதியருக்கு நான்கு மகள்கள்.அவர்களின் திருமண முயற்சிகள்,காதல் திருமணத்தை நடுத்தர குடும்பம் எதிர் கொள்ளும் விதம்,பெண்கள் சந்திக்கும் அலுவலகப் பிரச்சினைகள்.,என அனைத்து வயதுடைய பெண்களையும் கதைக்குள்   இழுத்துக் கொள்கிறார் ஆசிரியர். பக்கத்து வீட்டில் இல்லை அதே வீட்டில் இருந்து வாழ்க்கையைப் பார்ப்பது போல் கதை நகர்கிறது. 
புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன்பும் 
புகழ் பெற்ற எழுத்தாளர்கள்  கதையில் இருந்து சில வரிகள் போட்டிருந்தார்கள். அக்கதைகளையும் தேடி வாசிக்க சொல்லும் உங்கள்  மனம்.💙

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு