துருக்கி தொப்பி..கீரனூர் ஜாகிர் ராஜா


4/100
📚📚📚📚
புத்தகம்..துருக்கி தொப்பி 

ஆசிரியர். கீரனூர் ஜாகிர் ராஜா. 

அத்தியாயம் 58(பக்கங்கள் 150 இருக்கும் 😎)
நூலகத்தில் எடுத்தது.

இஸ்லாமிய குடும்பங்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நாவல்.
நூர்ஜஹான் என்னும் பெண்ணின் திருமணத்தில் 
தொடங்கும் கதை அவளின் மகன் ரகமத்துல்லாவின் நடத்தை மாற்றத்துடன்  (நம் மனதை கனமாக்கி)முடிகிறது கதை.
தாயில்லா பிள்ளையைப் போல் அலைகழிக்கப்படுகிறான் தாயால் வெறுக்கப்படும் ரகமத்துல்லா .பிள்ளை பேற்றின்போது பெரியம்மையால் பாதிக்கும் நூர்ஜஹான் தன் அழகு குலைந்தது மகனால்தான் என்று நினைக்கிறாள்.தன் கணவன் அத்தாவுல்லா படித்து இருந்தாலும் அழகு இல்லை என்று நினைக்கக் காரணம் திருமணத்திற்கு முன் அவள் விரும்பிய அப்பாஸ்.தந்தை குட்டிலெவை,மாமியார் பட்டம்மாள், மாமனார் கேபிஷே(இவருடைய தொப்பி தான் தலைப்பே).என ஒவ்வொருவருக்கும் கிளைக்கதைகள்.இப்படியெல்லாம் நடக்குமா?இப்படியெல்லாமா  இருப்பார்கள்? என இடையிடையே எனக்கு தோன்றிக் கொண்டேதான் இருந்தது கதை நிகழ்வுகளால்🤔.
காங்கிரஸ், நீதிக்கட்சி, திராவிட இயக்க வளர்ச்சி  என அரசியல் நிகழ்வுகளை யும் விவரித்து கூறியுள்ளார். மொத்தத்தில் சிறந்த நாவலுக்கான எல்லா இலக்கணங்களோடு உள்ளது.கதையில் ஒரு இடத்தில் வீட்டில் உள்ள வேப்பமரத்தை வெட்ட நூர்ஜஹான் ஒருவரை வரவழைத்து இருப்பாள்.அவர்  மிகவும் மகிழ்ச்சியோடு கத்தியை சீவிக் கொண்டே கூறுகிறார் "என் அப்பாவை உங்கள் மாமனார்  பஞ்சாயத்தில் கட்டி வைத்து    உதைத்த மரம்மா இது".
மனிதர்களின் மனதை..❤👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு