சீருடை __சிவா

📚📚📚📚💃💃📚📚
7/100

புத்தகம். சீருடை (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
பக்கங்கள். 60
பதிப்பகம். பாரதி புத்தகாலயம்(Books for children)
வகை _கட்டுரை தொகுப்பு. 
ஆசிரியர்..*கலகல வகுப்பறை* சிவா
சென்னை புத்தகக் கண்காட்சி 2020 ல் வாங்கியது.
 இன்றைய  சூழலில் தான்  கற்பித்தல் சவாலான 
பணி என்று நினைத்து இருந்தேன். எல்லா காலகட்டங்களிலும் சவால்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. நாம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கூறி உதவுகின்றன இத்திரைப்படங்கள்.
கீழ்க்கண்ட 9 திரைப்படங்களைப் பற்றிய விமர்சனத்தோடு தன் கருத்துக்களையும் பதிவு செய்து இருப்பது சிறப்பு. 
1. Ganvesh (2015,marathi)
2. Monsieur Lazhar (2015,Canadian French)
3.shikshanachya Aaicha Gho(2010,marathi)
4.The teacher's diary (2014,Thai)
5. 72 miles EK pravas (2013,maralli)
6.The Ron dark story (2006,English)
7.Gridiron gang (2006,English)
8.Dead poets society (1989,English)
9.Mr.Holland's opus (1995,English)
இதில் 3வது படம் 'தோனி' என்ற தமிழ் படமாக வெளி வந்துள்ளது. 
Ganvesh என்ற மராட்டிய படத்தில் ஒரு சீருடைக்காக தந்தையும்,மகனும் படும் துயரத்தில் பார்ப்பவரின் கண்களை நிச்சயம் கலங்க வைக்கும். விடுதி மாணவர்கள் வாழ்க்கை துயரத்தையும் ,பயணத்தால் கிடைக்கும் அனுபவங்களையும் 72 miles,Marathi படம் நம் கண் முன்னே கொண்டு வரும். எனது புதிய பள்ளியில் சந்தித்த சில சவால்களை The Ran dark story  படத்தின் காட்சிகளில் கண்டேன். 
ஒவ்வொரு படமும் ஆசிரியர்கள் சந்தித்து, தீர்வு கண்ட உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்பது தான் சுவாரசியமே👍🏻..*
*ஒவ்வொரு ஆசிரியரின் வீட்டு நூலகத்தை அலங்கரிக்கப்பட வேண்டிய நூல் இது*
கற்பித்தலில் சோர்வு ஏற்பட்டால் இதில் ஒரு படத்தைப் பாருங்கள் 😍 
தன்னம்பிக்கை அதிகரிக்கும் 👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு