35.வாழும் மூதாதையர்கள்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍
#வரலாறு
❤❤❤❤
#புத்தகம்_வாழும்_ மூதாதையர்கள்.( தமிழகப் பழங்குடி மக்கள்)
#ஆசிரியர்_ முனைவர்.அ. #பகத்சிங் #பதிப்பகம் _உயிர் பதிப்பகம்.
*பக்கங்கள்._.178
❤இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் உயிர் இதழில் வெளிவந்தவை இவற்றில் உள்ள  ஒளிப்படங்கள் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளன.  பழங்குடி மக்களான
 👨‍👩‍👧‍👧இருளர்கள்,
👨‍👩‍👧‍👧ஆனைமலை காடர்கள் ,
👨‍👩‍👧‍👧அகத்தியமலை காணிகள் ,
👨‍👩‍👧‍👧காடுகளின் நாயகர்கள்,
👨‍👩‍👧‍👧 கோத்தர்கள்,
👨‍👩‍👧‍👧நீலகிரி  குறும்பர்கள்,
👨‍👨‍👧‍👧 கிழக்குத் தொடர்ச்சி மலை மலையாளிகள்,
👨‍👩‍👧‍👧 பாண்டியநாட்டு முதுவர்கள்,
 👨‍👩‍👧‍👧பளியர்,
👨‍👩‍👧‍👧பணியர்
👨‍👩‍👧‍👧சத்தியமங்கலம் சோளகர்கள்,
 மற்றும் 👨‍👩‍👧‍👧தோடர்கள் என 13 வகை பழங்குடிகளை பற்றிய வாழ்வியலைச் சொல்லும் ஆய்வுக் கட்டுரைகள் இவை.
ஆசிரியர்  பகத்சிங் பழங்குடிகள் குறித்த ஆய்விற்காக மேற்கொண்ட பயணங்களின் மூலம் அவர்கள் பண்பாடு,  நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதோடு அவர்கள்  தற்காலத்தில் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களையும் எடுத்துரைக்கிறார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 36 பழங்குடிகளில் 6 சமூகத்தவர் தொன்மையான பழங்குடிகள் என அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர்.
#வாழ்வியல்_முறைகள்
❤இயற்கையோடு இணைந்த வாழ்வு இந்த பழங்குடிகளின் வாழ்வு. திருமண சடங்குகள், விழாக்களைக் கொண்டாடும் முறை ஆகியவை பெரும்பாலான பழங்குடிகளுக்கு ஒற்றுமையாகவே உள்ளது.

💃 இசையும் நடனமும் வாழ்வியலில் இரண்டறக்  கலந்துள்ளன. 

💜விதவை,(விதுரன்..இப்போது தான் இச்சொல்லைக் கேள்விப்படுகிறேன்)   மறுமணம் சாதாரணமாக நடைபெறுவது, உழைக்கும் நபராக உள்ள பெண்ணை மணம் புரிவதால் பரிசப் பணம் மணமகள் வீட்டிற்கு தருவது ஆகியவை சிறப்பு💜.

🌾அகத்தியமலை காணிகள் #ஆரோக்கியப்_பச்சை என்ற மூலிகையை அறிமுகம் செய்து உலகத்தின் கவனத்தை பெற்றுள்ளனர்.
 🎈இதுபோல பழங்குடிகள் பெற்றுள்ள பாரம்பரிய 
மருத்துவ அறிவு, சாதிய படிநிலை அற்ற சமத்துவ சமூக அமைப்பு, இயற்கையோடு இணைந்த எளிமையான வாழ்க்கை முறை என நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.

😌பொதுவாக பழங்குடிகள் என்றாலே நமது சமூகத்தில் ஏளனப் பார்வை நிச்சயம் அந்த ஏளனப் பார்வையை மாற்றும் வகையில் இந்த நூல் உள்ளது. அணிந்துரை வழங்கிய ஆசிரியர் நக்கீரன், பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன்,பேராசிரியர்  செல்லப்பெருமாள் ஆகியோர் அனைவரும் வலியுறுத்துவது இதையே // அவர்களது வாழ்க்கையை அவர்களது போக்கிலேயே தொந்தரவு செய்யாமல் விடுவதுதான்.// அவர்களுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் நாம் செய்வது என்ன?

❤இந்த நூலில் உள்ள  ஒவ்வொரு கட்டுரையும் இந்த சமூகம் இன்றைக்கு சந்திக்கக்கூடிய சவால்களை வெளிக்காட்டி அமைகின்றது. அவர்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு நாம் அவர்களை துன்பத்துக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தால் போதுமானது.
💜வில்_ அம்பு சடங்கு வித்தியாசமாக உள்ளது .
❤சேவையாட்டம் இன்று நிகழ்த்து கலையாக நடைபெற்று வருகிறது.
பண்பாட்டினை மீட்டெடுப்பதற்காக நீலகிரி குறும்பர்கள் *நாட்டு ஹப்பா*என்ற பண்பாட்டு விருந்தோம்பல் நிகழ்வு நடத்துகின்றனர் .
🎈ஆகஸ்ட் 9 பழங்குடிகள் தினம்.
🌾2019 பழங்குடியின மொழிக்கான சர்வதேச ஆண்டு இரண்டு வாரத்திற்கு ஒரு பழங்குடி இன மொழி அழியும் நிலையில் உள்ளதாம்🙄
💜இப்புத்தகத்தின் ஆசிரியர் மானிடவியல் குறித்து ஒரு இணையவழிக் காணொளியில்   பேசினார். மானிடவியல், இனவரைவியல் இதெல்லாம் நமக்கு புதியதாயிற்றே? முழுசா கேட்போமா? என்ற சந்தேகத்துடன் கேட்க ஆரம்பித்தேன் .ஆனால் எப்படி ஒன்றரை மணி நேரம் கடந்தது என்றே தெரியவில்லை.😍 அவரின் பேச்சை போலவே இந்த நூலும் எளிமையாக.. சுவாரசியமாக...எளிய மக்களின் மீதான அக்கறையோடு....👍❤

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு