தாய் ...மக்சீம் கார்க்கி

❤❤❤💙❤❤❤
8/100
📚📚📚📚📚📚📚

புத்தகம் *தாய்*
ஆசிரியர். மக்சீம் கார்க்கி 
தமிழில்..தொ.மு.சி.ரகுநாதன் 
பக்கங்கள். 346
பதிப்பகம். பாரதி புத்தகாலயம். 
வகை..நாவல்
சென்னை புத்தகக் கண்காட்சி 2020ல் வாங்கியது. 
 இப்புத்தகத்தை அறிமுகப் படுத்தியவர் இராணிப்பேட்டை DIET எனது ஆங்கிலப் பேராசிரியர் தெய்வத்திரு.சுவாமிதாஸ் அவர்கள். இந்த புத்தகத்தைப் படித்த பாதிப்பில் அவர் 'அம்மா ' என்ற நூலை எழுதியுள்ளதாகக் கூறியுள்ளார். 🙏🏻அப்போது (1993_94) சில நாட்கள் நூலகத்தில் தேடி, பிறகு மறந்து போனேன். இவ்வளவு நாட்கள் இதை படிக்காமல் விட்டு விட்டேனே என்று இப்போது வருந்துகிறேன். 😢 .
நூலைப்பற்றி.... எனக்கு ஒரு சந்தேகம்..உண்மையில் இது புனைவு(நாவல்) தானா?????🧐
29+29 அத்தியாயங்கள் இரண்டு பாகங்கள் 😮
2 அல்லது 3 முறையாவது அட்டைச்செய்தி,பதிப்புரையை படித்துப் பார்த்தேன். இதில் இடம்பெற்ற நிகழ்வுகள் உண்மையில் நடைபெற்றவையா என்று?😇 .இந்நூலைப் படிக்கும் பொழுது நம் மேல் பனித்துகள்கள் விழுகின்றன. காலடியில் பனி நொறுங்கியது.  பாவெல் விலாசவ் மற்றும் அவனது தாய் (பெலகேயா)   வாழ்க்கை போராட்டங்கள் நம் கண்முன்னால் நடக்கிறது.தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் தன் மகன் பாவெலுடன் தானும் ஒரு போராளியாக படிப்படியாக மாறுகிறார் தாய். தாய்மை உணர்வால் மகனின் போராளித்தோழர்களுக்கும் தாயாகிறாள்.  தாய் யாருக்கும் தெரியாமல் எழுதப்படிக்க முயற்சி செய்யும் இடம் கவிதை😍.
மகன் மே தினக் கொண்டாட்டத்தில் கைது செய்யப்பட்ட பிறகு மேலும் மன உறுதியுடன் பிரசுரங்களை தொழிற்சாலையில் தானே விநியோகிக்கிறாள் தாய்.
  இரண்டாம் பாகத்தில் முஜீக்குகள்(விவசாயிகள்) பண்ணை முதலாளிகளால் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள்.?,  படித்த இளைஞர்கள் மற்றவர்களுக்கு இதை புரிய வைக்கும் முயற்சிகள்,இதில் தாயின் பங்கு, உயிரையும் தர முன்வந்த தீவிரத்தோடு முடிகிறது தாயின் சரித்திரம் 👸.
ஒரே கொள்கையோடு குடும்பம் இருப்பது அரிது தான்.தாய் வேறு வழியின்றி தான் மகனை தொடர்கிறாளா? இல்லை மகனின் அழுத்தம், நிதானம் நிறைந்த பேச்சினால் தொழிலாளர்களைப் போல் கவரப்பட்டாளா?  இல்லை இளவயதிலிருந்து ஒடுக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் தலை தூக்கியதா? தெரியவில்லை. ஆனால் படித்தவர்கள் மனதை விட்டு அவ்வளவு விரைவில்  நீங்க மாட்டாள்.
 அதெல்லாம் சரி.100 வருடங்களில் தொழிலாளர்கள் வாழ்வில் சில சட்டங்களால் சிறிது மேன்மை அடைந்திருக்கிறார்கள் எனலாம். ஆனால், விவசாயிகள் நிலை????🤔

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு