சமூகப் போராளிகள்...சோ.மோகனா

❤❤❤💙❤❤❤
9/100
📚📚📚📚📚📚📚📚
புத்தகம் *சமூகப் போராளிகள்*
ஆசிரியர். பேரா.சோ.மோகனா.
பக்கங்கள். 91
பதிப்பகம்.  :அறிவியல் இயக்கம் 
வகை..கட்டுரை தொகுப்பு 
 இப்புத்தகத்தை ஆசிரியரிடம் இருந்து கோயம்புத்தூர் நிகழ்வில் கடந்த மாதம் நேரில் பெற்றேன் 😍❤.
இப்புத்தகத்தில் 16 சமூகப் போராளிகளைப் பற்றி சுவையான கட்டுரை களாகக் கொடுத்துள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர், மருத்துவர், சூழலியல் செயற்பாட்டாளர், முஸ்லிம் போராளி, தற்கொலைப்போராளி,2 நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி, துப்பாக்கி ஏந்திய புரட்சிப்பெண் எனத் தேடித்தேடி பல விஷயங்களைக் கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக வேலு நாச்சியாரின் மெய்க்காப்பாளர் குயிலி பற்றிய தகவல்கள் அருமை. மாற்றுக்கருத்துகளையும்,அவரைப் பற்றிய புதிய தகவல்களையும் அடுத்த புத்தகத்தில் எதிர் பார்க்கலாம்.பெண் போராளிகளின்  புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன ❤.
 நான் 3 புத்தகங்களை மட்டுமே வாங்கினேன்.படித்த பிறகு தான் தெரிந்தது மேலும் சிலவற்றை வாங்கியிருக்கலாம் என்று 😊.
*ஆசிரியரைப் பற்றி*
பழனி கல்லூரியில் 38 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். புற்றுநோயில் இருந்து மீண்டு அறிவியல் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார். விலங்கியல், விண்ணியல்
,அறிவியல் வரலாறு, பெண்ணியம் எனப் பல துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார். 😍பெண்களுக்கு இவருடைய வாழ்க்கையே ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது 💚..

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு