சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்..ஆர்.பாலகிருஷ்ணன் iAS

❤❤❤💙❤❤❤
11/100
📚📚📚📚📚📚📚
புத்தகம் .சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம். 
ஆசிரியர். ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப(ஓய்வு)
பக்கங்கள். 206
பதிப்பகம். பாரதி புத்தகாலயம். 
வகை..ஆய்வு நூல். கட்டுரை தொகுப்பு.
  .இந்நூலாசிரியரின் உரையினை சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் (தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்பாடு செய்த நிகழ்வு) நேரில் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றேன்😍.அதுதான்  இந்நூலைப் படிக்கத் தூண்டியது.
           இந்நூல்  இரண்டு ஆய்வுகட்டுரைகளைக் கொண்டது. .மேலும் ஆய்வுக்கான தரவுகள், அணிந்துரை (சிந்துவெளி ஆய்வு அறிஞர் திரு.ஐராவதம் மகாதேவன்),மதிப்புரை1. (நா.மம்மது,உயிர்மை மாத இதழ்), 2.பிரபஞ்சன் (தமிழ் இந்து) 3.சு.கி.ஜெயகரன்(புதிய புத்தகம் பேசுவது மாத இதழ்)4. டாக்டர். சங்கர சரவணன் (ஆனந்த விகடனில்) ஆகியவை இடம்பெற்றுள்ளன.அட்டவணைகள்,வரைபடங்களே  50 பக்கங்கள் உள்ளன. 
நமது பாரம்பரியத்தின் தேடல் என்ற உணர்வே இந்நூலை பெருமிதத்துடன்  படிக்க வைத்தது.❤
முதல் கட்டுரையில் (சிந்துவெளிப் புதிரும்,இடப்பெயர்  ஆய்வு தரும் புத்தொளிச் சான்றுகளும்) இடப் பெயர்களை ஆய்வு செய்து உள்ளார்.கொற்கை,வஞ்சி,தொண்டி போன்ற நகரங்களின் பெயர்கள் சிந்துவெளிப் பகுதிகள்,பாகிஸ்தான், ஆப்கான் மற்றும் ஈரான் நாடுகளிலும் பரவியுள்ளன🤔🧐. ஆசிரியர் இதற்கு KVT complex எனப்  பெயரிட்டு உள்ளார்.
இவற்றின் மூலம் திராவிட மொழி(தமிழ் மொழி)ப் பரவல் பல்லாயிரக் கணக்கான மைல்கள் கடந்து சென்றுஉள்ளதை  Geographical Information System..GSI ஐ முதன் முறையாக பயன்படுத்தி நிறுவியுள்ளார்👍🏻.
  இரண்டாம் கட்டுரையில்(சிந்துவெளி நகரங்களின் 'மேல் மேற்கு:கீழ் கிழக்கு ' வடிவமைப்பும்,அதன் திராவிட அடித்தளமும்) மேல் என்பது மேற்கு திசையையும் ,கீழ் என்பது கிழக்கு திசையையும் குறிக்கும் என்பதற்கு நில அமைப்பு, சங்க காலப் பாடல்கள், திராவிட வேர்ச்சொல் அகராதி போன்ற பல சான்றுகளைக் கொண்டு நிறுவியுள்ளார் .
சிந்துவெளி முத்திரை, சேவல் சண்டை ,உறையூரின் மற்றொரு பெயர் கோழியூர் ,உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் உள்ள சேவல் யானையை எதிர்க்கும் சிற்பம்   போன்ற சுவாரசியமான பல தகவல்கள் உள்ளன 🧐. நூலைப் படித்து முடித்ததும்  நா.மம்மது ஐயா எழுப்பிய கேள்வி நம் மனதிலும் வந்து போகும் ( தமிழர்கள் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்ற நூலாசிரியர் கருத்துக்கு...)??
கீழடி குறித்தும் ஆசிரியர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆய்விற்கு மேலும் பல சான்றுகள் கிடைத்து திராவிட அடித்தளம் என்பது *தொல்தமிழ் அடித்தளம்*ஆக மாற வேண்டும் என்பதே இந்நூலைப் படிக்கும் அனைவரின் பெருங்கனவாக இருக்கும் ❤❤...
💐💐நூலின் சிறப்பை நா.மம்மது ஐயாவின் சொற்களால் அப்படியே பதிவிடுகிறேன். *தமிழர் ஒவ்வொருவரும் ஒரு கையில் திருக்குறளை வைத்திருந்தால் மறுகையில் இந்த நூலை வைத்திருக்க வேண்டும்*.❤

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு