ஜே.ஜே.சில குறிப்புகள்

💙❤❤💜💙❤
I📚📚📚📚📚
13/100
💙📚📚📚📚💙💙
புத்தகம் .ஜே. ஜே.சில குறிப்புகள். 
ஆசிரியர்.சுந்தர ராமசாமி 
பக்கங்கள். 224
பதிப்பகம்.  காலச்சுவடு  பதிப்பகம்
வகை.. நாவல். 
  சென்னை புத்தகக் கண்காட்சியில் (2020) வாங்கியது 'ஒரு புளிய மரத்தின் கதை ' குடும்ப நாவலில் வெளி வந்த போது கொஞ்சம் சிரமப்பட்டு தான் படித்து முடித்தேன். ஆனால் இந்த நாவல் அதுபோல் இல்லை. 
ஒரு எழுத்தாளனின் அக உணர்வுகளை, சக எழுத்தாளர்களின் பார்வையில் இருந்தும், அவருடைய நாட்குறிப்புகளில் இருந்தும்  
நமக்கு கடத்துகிறார்.
வழக்கமான நாவல் வடிவத்தில் இருந்து புதிய வடிவத்தில் படைக்கப்பட்டதாக வெளிவந்த காலத்தில் விமர்சிக்கப்பட்டது.. கதையின் நாயகன் கால்பந்தாட்டக்காரர்,ஓவியர்,நாடகம்,கவிதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றின் வல்லுனர் ஆக சித்தரிக்கப்பட்டுள்ளார்.இவை மலையாளத்தில் மறைந்த எழுத்தாளர் #சி.ஜே வை நினைவுபடுத்தும். 
 எனக்கு இந்த நாவலின் முதல் பாகம் முழுவதும் பவாசெல்லதுரையின் குரல்  என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவர்தான் தற்காலத்தில் ஒவ்வொரு எழுத்தாளரையும் கொண்டாடி,நம் மனத்திற்கு நெருக்கமானவராக மாற்றி விடுவார்.பாலு கதாபாத்திரம் எழுத்தாளராக இருந்தாலும்  ஜே.ஜே யின் வாசகனாக ,நம்மைப் போன்ற வாசகர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.
 ஜே.ஜே.ன் நாட்குறிப்பில் இருந்து (4.9.1957)
"நவீன புத்தகங்கள்மீது கொண்டிருந்த மோகம் தணிந்து ,கிளாஸிக்குகள் மீது கவனம் திரும்புகிறது. கற்பனை சார்ந்த உருவங்களைப் படிப்பதில் வேகம் குறைந்து சுய அனுபவம் சார்ந்த கூரிய மதிப்பீடுகளில் மனம் அதிகமாக ஈடுபடுகிறது. "#இது போன்ற எண்ணங்கள் உங்கள் மனதில் இருந்தாலோ அல்லது  தோன்றினாலோ நீங்கள் இந்த நாவலைப் படிக்கத் தயார் என்று அர்த்தம்😍 

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு