#சுளுந்தீ

❤🧡💛💙💜🤎🤍
I📚📚📚📚📚📚📚
15/100
📚🤎🤎📚💜📚💙
புத்தகம் .சுளுந்தீ
ஆசிரியர்.இரா.முத்துநாகு
பக்கங்கள். 479
வகை. நாவல் 
பதிப்பகம்..ஆதி பதிப்பகம் 
திருவண்ணாமலை.
 ❤சென்னை புத்தகக் கண்காட்சி யில்  2020ல் வாங்கியது. உதயசந்திரன்IAS அவர்கள் பரிந்துரைத்த சிறந்த புத்தகம் என்ற முறையில் ஆர்வத்தை தூண்டிய புத்தகம். 
 இராம பண்டுவன் மற்றும் அவரது மகன் மாடனைச் சுற்றி 18 ம் நூற்றாண்டில் நடக்கும் கதை.அரண்மனை    நாவிதனாக இருக்கும் இராமன் பன்றிமலைச் சித்தரின்  சீடனாக  இருந்து சித்த மருத்துவ நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்து சுற்றுவட்டாரங்களில் பிரசித்தி பெற்ற பண்டுவராக உயர்கிறார்.இராமனின் மனைவி வல்லத்தாரையிடமே வளரும் மாடனுக்கு ஒரு காலகட்டத்தில் போர்க்கலைகளைப் பயிற்றுவிக்கிறார்.தன் மகனை எப்படியாவது படை வீரனாக மாற்ற வேண்டும் என்பது அவரது பெருங்கனவு.அதை நனவாக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் ,அதற்கு இடையூறாக இருக்கும் குலமரபு,அரசியல் சூழ்ச்சிகள்...அப்பப்பா ..இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் எளியோர்_வலியோர் வேற்றுமை பாராட்டும்  இந்த வலி இருக்குமோ தெரியவில்லை. 😢 .
❤தந்தையின் மறைவுக்கு பிறகு ஒற்றை ஆளாக அரசியல் சதி வலையில் சிக்கிக் கொண்டு தவித்தாலும் முரட்டுத்தனமான வீரனாக வலம் வருகிறான் மாடன்.சிறிய பாத்திரப் படைப்பாக இருந்தாலும் மனதை கொள்ளை கொள்கிறார் அனந்த வல்லி.இராம பண்டுவனிடம் இருந்த பணிவு,எவ்வளவு  திறமை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  'ஊருடன் ஒத்து வாழ்'  என அனைவரையும் வணங்கி மருத்துவம் பார்க்கும் குணம் பிரமிக்க வைக்கிறது.
💙குலநீக்கம் எனும் கொடும் அடக்குமுறையால் தம் இன மக்களையே கொடுமைகள் செய்வதையும், இதன் விளைவாக ஏற்படும் மதமாற்றங்களையும் பதிவு செய்து உள்ளது.
💚   
பேய், சித்து விளையாட்டுகள், குதிரை மருத்துவம், யானை மருத்துவம், நாவிதர்களின் பணிகள்,நாவிதர் மனைவி மருத்துவச்சியின் பணிகள்,பிறப்பு ,இறப்பில் அவர்களது பங்கு என நாம் அறியாத பல செய்திகளை சொல்கிறது.  சீனாவிலிருந்து வரவழைக்கப்படும் கந்தகம்  முதலில் சித்த மருத்துவத்தில் செந்தூரம்(பஸ்பம்) தயாரிக்கப் பயன்படுகிறது.பிறகு இதுவே வெடி மருந்துக்கு பயன்பட்டு சித்த மருத்துவ பண்டுவர்களையும்,அவர்தம் ஏடுகளையும்  எவ்வாறு அழித்தது என்றும் கூறுகிறது.கிணறு வெட்ட அக்காலத்தில் பாடுபட்ட கதையும்,அதன்பிறகான வேளாண் வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
💚
வகுசீர்,தீக்கொளுத்தி போன்ற வழக்கொழிந்த பல சொற்கள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளன. #சுளுந்தீ என்பது மரம் என்பதும், நெருப்புக்காக மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதும் எனக்கு புதிய தகவலே.
💚 சொலவடைகள்...நிறைய இருக்கு1.பூ மணக்கும். பூ மொடஞ்ச கை முட நாத்தமெடுக்கும்.2.வீட்டுச் சண்டை முடிவுக்கு வர தெருச் சண்டையச் சொன்னால் போதும் (நல்ல  பயனுள்ள குறிப்பு தானே🤪)
💚
இரண்டு தேவைகள் இப்புத்தகத்தைப் படிக்க
1.தமிழ்ச் சொல் அகராதி 
2.வரைபடம் (மதுரையைச் சுற்றி கதை நடந்தாலும் வேலூருக்கு அருகில் படைவீடு//தற்போது படவேடு,தி.மலை //  வரைக்கும் வருகிறார்கள்.
📚📚
ஒரு சிறிய சந்தேகம். 
ஒவ்வொரு இனத்துக்கான பாடை கட்டும் முறைகள் சொல்லப்பட்டிருக்கிறது.284 ம் பக்கத்தில் வைணவனுக்கு கப்பல் பாடை என்றும், 287 ம் பக்கத்தில் சைவனுக்கு கப்பல் பாடை என்றும் உள்ளது. எது சரி???
👍🏻❤   
இறுதியாக எனக்குப்பிடித்த    வரிகள் #சாத்திரம் படிக்க நெனச்சவனை அவனைப் படைச்ச சிவனாலயும் தடுக்க முடியாது#  
📚ஆசிரியருக்கு இது முதல் நூலாம்.அப்படி தெரியவில்லை. சிறப்பாக உள்ளது. அவருடைய பல வருட உழைப்பு தெரிகிறது.
💚
இறுதியாக பாலகிருஷ்ணன் IAS ஐயா எழுதிய(சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்) நூலில் இடம்பெறும் இடப்பெயர்வுக்கான ஒரு தரவு இந்நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளது ❤👍🏻
*****************

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு