எனக்குரிய இடம் எங்கே?

📚📚📚📚📚📚❤❤
14/100
📚📚📚📚📚💜❤📚
புத்தகம் .எனக்குரிய இடம் எங்கே?
ஆசிரியர்.ச.மாடசாமி 
பக்கங்கள். 128
பதிப்பகம்..பாரதி புத்தகாலயம் 
வகை.. கட்டுரை தொகுப்பு..கதை வடிவில்
  வகுப்பறை _உறவுகளைப் உரையாடல்களும்.கடந்த ஜனவரியில் புத்தகம் வாங்கும் வரையில் இது பள்ளி வகுப்பறை பற்றி பேசுவது என நினைத்திருந்தேன்.பிறகு தான் தெரிந்தது நூலாசிரியர் தமிழ்ப் பேராசிரியர் என்று. அவருடைய அனுபவப் பகிர்வுகளை ,#அய்யப்பராஜ்  என்ற கதாபாத்திரம் மூலம் நாம் வகுப்பில் காணும் பல மாணவர்களை நினைவுபடுத்துகிறார்.  உயிரோட்டமுள்ள வகுப்பறையை உருவாக்க அவர் செய்யும் ஒவ்வொரு முயற்சிகளும் அருமை. இந்நூலில் வருவது போன்ற வகுப்பறையையும்,ஆசிரியரையும் நேரில் யாராவது பார்த்து இருப்பீர்களா என்று தெரியவில்லை. ஏனெனில் நூலாசிரியரே அக்கதாபாத்திரம் பல ஆசிரியர்கள் கலந்த கலவை என்று கூறியுள்ளார். ஆனால், நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் பெயர் #சி.மகாலட்சுமி, பட்டதாரி தமிழ் ஆசிரியர். அவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் போது ஒரே பள்ளியில் பணிபுரிந்தோம். அப்போதும் சரி,அவர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக 10 வருடங்கள் பணியாற்றிய போதும்(தற்போது வரை) வகுப்பறை நிகழ்வுகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கும், எப்படி மாணவர்களின் 😍தனித்திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கிறார்? உதவி தேவைப்படும் மாணவர்களை கண்டறிந்து சரியாக உதவுகிறார்கள்? மொழிப்பாடங்களை சரளமாக வாசிக்க வைக்கிறார்? என்று ( நானும் A.S(தோழி)ம் TLM,புதிய செயல்பாடுகள் எனப் போராடிக் கொண்டிருப்போம்🤔) .❤இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். 
❤ Hats off to you C.M .மாணவர்களை குழந்தைகளாக நேசிக்கும் அத்தனை ஆசிரியத் தோழமைகளும் நம் முன்னே நடமாடுவார்கள் இப்புத்தகத்தை படிக்கும் பொழுது 😍 .
மாணவர்களிடம் கற்போம் என்று ஒரு பகுதி. எவ்வளவு  நிதர்சனம் ❤
சில வைர வரிகள் ****
#புத்தகங்களில் 
   எத்தனை கற்ற ஆசிரியரிடமும்
மாணவரிடம் 
கற்க வேண்டிய அனுபவம் 
எப்போதும் பாக்கி இருக்கிறது.
தீராத கடன் போல!
#பள்ளிக்கூடத்துக்குள்
ஒரு வீடு வேண்டும். 
இதயமுள்ள வீடு❤.
  என் பணியில் ஏதேனும் தொய்வு , சலிப்பு,தாழ்வு மனப்பான்மை  ஏற்பட்டால் நான் #டோட்டாசான் புத்தகத்திடம் தான் சரணடைவேன்😊 .இப்போது அந்த வரிசையில் இப்புத்தகமும்.❤.
ஆசிரியர்கள் மட்டுமல்ல. அனைவருமே வாசிக்கலாம்👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு