19.ஷாந்தினி சொர்க்கம்

❤❤❤❤❤❤❤❤❤❤
💜💜💜💜💜💜💜💜💜💜
19/100
 💕💕💕💕💕💕💕💕💕💕💕
புத்தகம். #ஷாந்தினி சொர்க்கம் 
ஆசிரியர். குணசீலன்
பக்கங்கள். 685
வகை.சுயசரிதை 
பதிப்பகம்.. ***
    அமேசான் கிண்டிலில் படித்தது.சந்தியா ராஜ மாணிக்கம் மதிப்புரையைப் பார்த்து படிக்க ஆரம்பித்தேன். 
❤ இது ஆசிரியரின் சுயசரிதை பாகம் -1 இந்த வயதில் "கிட்டத்தட்ட " எல்லாமே உண்மை என்று முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இதைப்படித்தவுடன் ஆசிரியரின் மனைவியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்😍 ஏற்பட்டு விட்டது.எவ்வளவு பொறுமைசாலி,தைரியசாலி, திறமைசாலி💐💐💐 இந்த மாதிரி மனுஷன் கூட வாழறது எல்லாம் சாதாரண விஷயமா என்ன!?..
❤#நகைச்சுவை 
 எவ்வளவு தான் சீரியஸான ஆளா இருந்தாலும் சில இடங்களில் வாய்விட்டுச் சிரிக்காம படிக்கவே முடியாது 🤣   அதுவும் #அந்த  பஸ் வந்து இவர் எறிந்த கல் மேல மோதிடுச்சு" அப்படின்னுவாரே அதிலேயே தெரிஞ்சுக்கலாம் ஐயாவோட திறமையை🤣
அந்த கவிதை ஏரியா 😍
வாய்ப்பே இல்லை ராசா ரகம்.பத்தாவது படிக்கும் போதே அப்படி ஒரு கவிதை எழுதனவர் கை சும்மாயிருக்க சான்ஸே இல்ல.முதல்ல கவிதை புத்தகம் தான் வெளிவந்திருக்க வேண்டும் 💐  .இல்லறக் கவிதையை மனோதத்துவ மருத்துவர்கள் படித்தால் கிளினிக் ல அச்சிட்டு பின்னால் மாட்டி வெச்சிப்பாங்க.இல்லனா டைரியிலாவது குறித்து வைத்துக் கொள்வார்கள். 👍🏻.
❤📚 படிப்பை பாதியிலேயே விட்டுட்டமேன்னு புலம்பறவங்க எல்லாம் இவர் கதையை படிச்சே ஆகணும். தேன்மொழிக்காக ஜாதகம் பார்க்க கற்றுக்கொள்ள போய் தொழில்முறை ஜோசியர்களுக்கே டிப்ஸ் கொடுப்பார் போல.
மருத்துவத்துறையையும் விட்டு வைக்கல.மயக்க மருந்து,மனம்பிறழ்வு ,கென்னத் வாக்கர்,அமெரிக்க விஞ்ஞானி ஆண்ட்ரிஜா ப்யூஹாரிச் பற்றி எல்லாம் பேசி டாக்டரையே அசர வைக்கிறார். 💐  
😎❤
ஆவி பற்றி எல்லாம் எனக்கும் பெரிதாக நம்பிக்கை  எதுவும் இல்லை. ஆனால் சின்ன வயசுல ரொம்ப பயப்பட்டிருக்கேன்🤪 .
ஒரு சிலரோட ஜாதக அமைப்பின் படி ஆவிகளை உணர முடியும் என்பதை நானும் படிச்சிருக்கேன்.  பிளேக் மேஜிக்,பேரலல் யுனிவர்ஸ் இதெல்லாம் ஆர்வம் இருக்கறவங்க தேடிப் படிக்கலாம்.எதற்கும் ஆசிரியருக்கு ஜாதகம் அனுப்பி சரிபார்த்துக்கங்க😍
❤  நான் தெரிந்து கொண்ட புதிய தகவல்.#வைரத்தை வைரத்தால்அறுக்கமுடியாது.அதைவிடக் கடினமான #போரான்கார்பைட் என்ற அடர்கரியால் மட்டும்தான் அது சாத்தியம் .
❤தேன்மொழி, வேம்பு,நம்ம ஷாந்தினி 🙄,நண்பேண்டா மோகன் ,கிராமத்து மனிதர்களின் எளிய வாழ்வியல்,
விவசாயம்,பில்டிங் இடித்தது இதையெல்லாம் ஒருவரியில் சொல்லணும்னா கூட ஒரு குறுநாவல் அளவுக்குப் போய்டும்.
❤ இந்த சுயசரிதையைப் படிக்கற ஆண்கள் நண்பர் மோகனைப் போல பல இடங்களில் பெருமூச்சு விடுவாங்க.இவ்வளவு கஷ்டத்துலயும் மனுஷன் செமையா வாழ்ந்திருக்கிறாரே என்று. 
பெண்கள் தேன்மொழி,முல்லைக்கொடி,செல்வி வரிசையில் வராமல் இருந்தால் சரி.🤪  ஆனால், ஆசிரியரோட மனைவி அவருக்கு போன ஜென்மத்தில் அம்மாவா இருந்தவங்களாம். அதனால் இதற்குப்பிறகு முற்றுப்புள்ளி தான்🎼.செல்விக்கும் ஏதோ ஒரு வகையில் உதவி இருப்பீர்கள் என நம்புகிறேன். ஆமா,ஷாந்தினி ஆசையை நிறைவேற்றி விட்டீர்களா ஆசிரியரே???
❤அடுத்த புத்தகத்தை எதிர்பார்க்கும் அளவுக்கு எழுதி இருக்கிறார். வாழ்த்துகள் 💐💐

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு