சஞ்சாரம் 🌍எஸ்.ரா

🌍🌍🌍🌍🌎🌎🌏
❤❤❤❤❤❤❤❤📚
18/100
புத்தகம். #சஞ்சாரம்.
ஆசிரியர்.எஸ்.ராமகிருஷ்ணன் 
பக்கங்கள். 359
வகை.நாவல்
பதிப்பகம்..தேசாந்திரி பதிப்பகம், சென்னை 93.
   சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கியது.பல வருடங்களாக எஸ்.ரா வின் புத்தகங்களை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இப்போது தான் ஆரம்பித்து உள்ளேன்.ஆனந்த விகடனில் #துணையெழுத்து, #கதாவிலாசம்,#தேசாந்திரி  மூலம் அறிமுகமானவர். 10 வருடங்களுக்கு முன் ஒரு பயிற்சி வகுப்பில் நீங்கள்  எஸ். ரா வை வாசித்திருக்கிறீர்களா? என ஆச்சரியத்துடன் வினவிய வாசகரின் நினைவுகள் இப்புத்தகத்தை கையில் எடுத்ததும்😊  .எஸ்.ராவின் எழுத்துகள் அப்படி. வாசகர்களை கதை நடக்கும்  அந்தந்த இடத்திற்கே அழைத்துச் சென்று வசியப்படுத்தி விடுவார். எளிமையான எழுத்து நடை❤.
கதையைப் பற்றி..
நாதஸ்வரம் கலைஞர்களைப் பற்றியது. ரத்தினம், பக்கிரி,பழனி,தண்டபாணி ஆகிய நால்வரும் ஒதியூரில் இருந்து மூதூரில் நடக்கும் கருப்பசாமி திருவிழாவில் கச்சேரிக்கு வருகிறார்கள்.பனங்குளத்துகாரர்களுக்கும்,மூதூர்க்காரர்களுக்கும் இடையே நடக்கும் பஞ்சாயத்தில் கச்சேரி நிறுத்தப்படுகிறது.குடிகாரனிடம் அடி வாங்கும் ரத்தினம், பக்கிரி அவர்களை எதிர்த்து பேசியதால் இரவு முழுவதும் கட்டி வைக்கப்படுகிறார்கள்.பூசாரியால் இருவரும் விடுவிக்கப்படுகிறார்கள்.மத்திய வயதில் இருக்கும் ரத்தினம் சூழலைப் புரிந்து தப்பித்து செல்ல விழைகிறார்.  இளவயது பக்கிரிக்கு தனக்கு நேர்ந்த அவமானத்தால் பழி உணர்ச்சிக்கு ஆளாகி ரத்தினத்திற்கு தெரியாமல் விழா பந்தலுக்கு தீ வைத்து விடுகிறான்.
❤இதனால் ஊரில் கலவரம்,போலிஸ் தேடல் 🧐இருவரும் பயந்து பக்கிரியின் அக்கா வீட்டிற்கு, கொடுமுடிக்கு செல்கிறார்கள்.இறுதியாக ஊருக்கு திரும்பிச் சென்ற ரத்தினத்தின் மூலம் பக்கிரி யையும் போலிஸ் கைது செய்கிறது. இதற்கு இடையில்  தான் கரிசல் பூமியிலும்,புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்கள் வாழ்விலும் ரத்தினம், பக்கிரியின் நினைவுகளிலும்  சஞ்சாரம் செய்கிறது கதை.
🎼அரட்டானம் லட்சய்யா வித்வானின் முதல் கதையே # சும்மா அதிருதுல்ல😉  ரகம்.  #கல்யாணி ராகத்தை வாசித்து  🐘கல்யானையின் காதை அசைத்துக் காட்டுகிறார்!அதைப் பார்த்த கல்மனம் படைத்த மாலிக் கபூர் அசந்து போகிறார்.டெல்லிக்கு தன்னுடன் அழைத்து செல்கிறார். 
#கரிசக்குளம்,,
#உறங்காப்பட்டி,
#பொம்மக்காபுரம்
#லண்டன் 
#திருச்சுழி 
📘பக்கிரி நாதஸ்வரம் படித்த மருதூர்,
😎அருப்புக்கோட்டையில் அரசியல்வாதிக்கு வாசிப்பு ,
🏅ஜமீன்தார் வீட்டுக் கல்யாணத்துக்கு வாசிக்கப் போவதை விடவும் ஒத்து ஊதும் தங்கவேலு வீட்டு கல்யாணத்தில் வாசிப்பதற்காக நடந்தே வந்த கண்ணுசாமி கதை(பரோடா சமஸ்தானத்தில் வாசித்தவர்💐)
🥗🍿கரிசல் கிராமத்தில் திருட வந்தவனுக்கு #ஏழுவீட்டுச்சோறு என்ற புதுமையான தண்டனை கொடுக்கும் பாட்டி மனிதத்தின் உச்சம்❤ .
😎கண் பார்வையற்ற மேலையூர் #தன்னாசி  கதை பரிதாபப்பட்டு பட வைக்கும்,ஆச்சரியப் பட வைக்கும். சிலரை பொறாமைப்பட வைக்கும்ஆனால்.. தாசி  கமலவள்ளி படுக்கையில் முள்ளை போட வைத்து துன்பறுத்தியது,தெரியாமல் கால் பட்டதால் வண்டியில் இருந்து தவில்காரரைத்  தள்ளியது  இவற்றை எல்லாம் படித்தால் என்ன மூர்க்கத்தனம்😡 என்று நம்மை கோபமும் பட வைக்கும்.
🎼வெளிநாட்டில் இருந்து வந்த ஹாக்கின்ஸ் மருதூர் மடத்தில் நாதஸ்வரம் கற்றுக் கொள்வது,🎼நடுக்கோட்டை அபு இப்ராகிம் பெரிய வித்வானாக மாறுவது ...இசைக்கு ஏது மதம்???😍 
🎼கேள்வி ஞானம் மூலமே இசையை விமர்சிக்கும் ஊமை ஐயர்
🤸‍♂️🤸‍♀️அருப்புக்கோட்டையில் பக்கிரி,அவனுடைய நண்பன் குமார் சிகரெட் அட்டைகளை சேகரிப்பது,வீட்டில் சொல்லாமல் வெளியூர் செல்வது,பிள்ளையைத் தொலைத்து தவித்துக் கொண்டிருக்கும் போலீஸ்காரர் மூலம் வீடு திரும்புவது எல்லாம் #வாழ்க்கை கவிதை ❤ 
🔍#வேப்பங்காடு ..வைகை ஓரம் உள்ள ஊர்.மேற்கு பக்கம் மேச்சேரி, கிழக்கு பக்கத்தில் மற்ற குடியிருப்புகள்.சாதிப்பிரச்சனையில் ஊருக்கு நடுவே சுவர்.கம்யூனிஸ்ட் தோழர் உதவியுடன் சுவரை இடிக்கிறார்கள். 🧐நாமே கட்டிக்கொண்டு இருக்கும் #மனச்சுவரை எப்படி உடைப்பது?
❤💐பிடித்த வரிகள்
பக்கிரியின் அக்கா.."எதுக்கடா உனக்கு இந்த வேண்டாத வேலை"
பக்கிரி.."சோற்றுல உப்பு போட்டுத் திங்குறேன்ல அதான் ."💪🏻  
வாசிங்க வாசிங்க😍

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு