போலி அறிவியல் மாற்றுமருத்துவம் &மூடநம்பிக்கை..ஒரு விஞ்ஞான உரையாடல்

👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️💜👩‍⚕️👩‍⚕️👩‍⚕️
👩‍⚕️👩‍⚕️👩‍⚕️💜👩‍⚕️👩‍⚕️💕👩‍⚕️👩‍⚕️
20/100
 📚👩‍⚕️❤📚
புத்தகம். #போலி அறிவியல், மாற்றுமருத்துவம்& மூடநம்பிக்கை _ஒரு விஞ்ஞான உரையாடல்..
ஆசிரியர்.டாக்டர். சத்வா.T
பக்கங்கள். 178
அமேசான் கிண்டிலில் படித்த நூல் இது.
⛑🏥🚑அலோபதி என்றும் ஆங்கில மருத்துவம் என்றும் கூறப்படும் நவீன விஞ்ஞான மருத்துவத்தைப் பற்றியும், அதன் நம்பகத்தன்மை பற்றியும் பல்வேறு ஆதாரங்களுடன், பல கோணங்களில் அலசி,நம்மை சிந்திக்க வைக்கிறார் ஆசிரியர் .🏥போலி அறிவியலை அம்பலப்படுத்துவது காலத்தின் தேவை என்ற கட்டுரையில்  ஆரம்பிக்கும் ஆசிரியர் ஆதி சமூகத்தில் நோய்க்கான காரணிகள் தொற்றுநோய்களின் சுருக்கமான வரலாறு,  பரவாத நோய்களின் சுருக்கமான வரலாறு விஞ்ஞானத்தின் தோற்றம் என படிப்படியாக நம்மை விஞ்ஞானத்தின் பக்கம் நகர்த்துகிறார்.
🚑நவீன விஞ்ஞான மருத்துவம் இயற்கையும் இல்லை செயற்கையும்  இல்லை அது பகுத்தறிவின் உச்சம் என்று நிரூபிப்பதற்காக  நம் நாட்டில் நிலவும் மருத்துவ மூட நம்பிக்கைகள், இதர நாடுகளில் நிலவும் மருத்துவ மூட நம்பிக்கைகள் ,மாற்று மருத்துவமும் தீராத நோய்களும்,அந்த மருத்துவ முறைகளால் அற்புதங்கள் ஒருமுறை கூட  நடந்தது இல்லை என்ற கருத்து ,அறிவியலும் போலி அறிவியலும் _அதை எவ்வாறு கண்டுபிடிப்பது, தொழில்நுட்பம் வேறு விஞ்ஞானம் வேறு ,கூட்டு மனப்பிறழ்வு தடுப்பூசிகளை பற்றிய புரளிகள் ஆகியவற்றை பற்றி விளக்கமாக அடுத்தடுத்த கட்டுரைகளில் எடுத்துரைக்கிறார்.
🏥சர்க்கரை நோய் பற்றிய கட்டுக்கதைகள், மஞ்சள்காமாலைக்கு பச்சிலை மருந்து சாப்பிடுவது ,மக்களை முடமாக்கும் புத்தூர் கட்டு , சதுரங்கவேட்டை போல மருத்துவத் துறையிலும் ஏமாற்றுவது,தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் கருத்துகள்,ஆகியவற்றைப் பற்றியும் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார்.
🚑ஆர்கானிக் உணவு மோசடிகள், அமேசான் காட்டில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறிய எர்வாமாட்டின் ஹேர் ஆயில் கதை ,A2(ஆர்கானிக்)பால் மோசடி ஆகியவற்றைப் பற்றியும் விளக்குகிறார்.
🚑விஞ்ஞான மருத்துவத்தின் சாதனையாக தடயவியல் மருத்துவம் ,மயக்க மருத்துவம் ஆகியவற்றை குறிப்பிடுகிறார் .கால்நடை மருத்துவம்  கூட நவீன விஞ்ஞான மருத்துவத்தின் சாதனையே .ஏனெனில் மாற்று மருத்துவ முறைகள் கால்நடைகளுக்கு ஏன் இல்லை ?என்று வினா எழுப்புகிறார் மருத்துவர்.(ஆடு,மாடுகளுக்கு அக்கு புள்ளிகள் இல்லை யா?🤪
நல்ல கேள்வி)
🚑மருத்துவம் வியாபாரமாகி விட்டது.  அதனால் தான் மக்கள் மாற்று மருத்துவத்திற்கு சென்று விட்டார்கள் என்பதை மருத்துவரே ஒப்புக்கொள்கிறார். ஏனெனில் இரண்டு வருடங்களுக்கு முன்பு டெல்லியில்  டெங்கு காய்ச்சலுக்கு இரண்டு வாரம் மருத்துவமனையில் இருந்த செலவு 17 லட்சம் என்பதை அவர் எடுத்துரைக்கிறார்.  வியாபாரமான மருத்துவத்திற்கு மாற்று மருத்துவம் தீர்வாகாது என்பதேமருத்துவரின் கருத்து.விஞ்ஞானமே உயரிய ஆன்மீகம் என்ற கருத்தினையும் அழகாக, ஏற்றுக்கொள்ளும் விதமாக கூறியிருப்பது சிறப்பு ❤ 
#வரிகள் _அப்படியே
தமிழ்நாடு இன்றும் சுகாதார அமைப்பில் முதன்மையானதாக இருக்க காரணம் இங்கு திராவிட அரசியலினால் கட்டிகாப்பாற்றப்பட்ட 'சமுக நீதி' கொள்கைகளே.
❤ஆன்மீகத்தின் பணிகள் __1. மனிதன் என்பவன் யார் மற்றும் அவன் வாழும் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் எல்லை யாது என்று அறிந்துணர்வது  2. மனித வாழ்வை துன்பங்கள் நீக்கப்பட்ட நிலைக்கு இட்டு செல்வது
❤ இன்றைய ஆன்மீகம் _மனித இனத்தின் தோற்றத்தை விளக்கவில்லை. யாருடைய வாழ்வையும் சுபிட்சமாக ஆக்கவில்லை.
❤இந்தியர்கள் அதிக நோய்வாய்ப்படுவதற்கும் அவர்களின் தோள்கள் வலிமையாக இல்லாமல் இருப்பதற்கும் காரணம் இந்தியாவின் அகமண திருமண முறையாகும். பல்வேறு சாதிகள், அதனுள் பல்வேறு உட்சாதிகள். ...
❤எல்லாம் நமக்கு தெரிந்த விஷயங்கள் போல் இருந்தாலும் புத்தகத்தை வாசித்த பிறகு இன்னும் தெளிவடையலாம். 👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு