22.*வரலாறு மறந்த விஞ்ஞானிகள்*

🌍👩‍🚀👨‍🚀👩‍🚀👨‍🚀👩‍🚀👨‍🚀🌍
👨‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻
22/100
புத்தகம் ..#வரலாறு_மறந்த_விஞ்ஞானிகள். ஆசிரியர் .ஆயிஷா இரா நடராசன்.
பதிப்பகம். பாரதி புத்தகாலயம் 
பக்கங்கள்..96
👨‍🔬👨‍🔬👩‍🔬👩‍🔬❤விஞ்ஞானி என்றதுமே என் நினைவுக்கு வருவது ஆர்க்கிமிடீஸ் தான். ஏனெனில் ,"யுரேக்கா, யுரேக்கா "என்று அவர் ஓடியதை நகைச்சுவையுடன் அறிவியல் ஆசிரியர் கூறியது இன்றும் மறக்க இயலவில்லை. அதே போல்தான் இந்த விஞ்ஞானிகளின் கதைகளும் சுவாரசியமாக இருக்கும் என்று இந்த நூலை  வாங்கினேன்.
 இந்த நூலில் 27 வெளி உலகிற்கு பிரபலமடையாத விஞ்ஞானிகளை பற்றி ஆசிரியர்   ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் கொடுத்துள்ளார் .
💙👨‍🔬லவாய்சியர்,ஜான் டால்டன் ,கிரிகர் மெண்டல் ஆகியோர் நமது பாடப் புத்தகத்தில் படித்தவர்கள் தான்.  அவர்களைப் பற்றியும் சிலபுதிய தகவல்களோடு நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. 
❤👨‍🔬 நமது இந்தியாவை சேர்ந்த 4 விஞ்ஞானிகளைப் பற்றி ....
1.இந்திய விஞ்ஞானி #K_S_கிருஷ்ணன். அவர்களைப் பார்த்து நமது நேரு "இவரது உழைப்பு, துடுக்குத்தனம், உற்சாகம், எல்லாவற்றையும் பார்க்கும் போது பேசாமல் பிரதமர் பதவியை விட்டு இந்திய இயற்பியல் ஆய்வகத்தில் சேர்ந்து விடலாமா என்று பார்க்கிறேன் "என்று பாராட்டுகிறார் . அப்படிப்பட்ட கே எஸ் கிருஷ்ணன் பற்றி கூட நம் பாடநூல்களில் அறிய முடியாதது வேதனைதான்.
❤👨‍🔬அடுத்த விஞ்ஞானி #குளச்சல்_சீதாராமையா இவர் வாகனங்களின் எரிபொருள் ஆனவர் என்று புகழப்படுகிறார். மோட்டார் திரவ எரிபொருள் குறித்த அவரது நூல் அவர் இறந்த பிறகு தான் வெளிவந்தது. சித்தராமையா என்னும் பெயர் இல்லாது இருந்திருந்தால் நம் சாலைகளை நிறைக்கும் வாகனங்களில் பாதி அடுத்த நூற்றாண்டில் கூட வந்திருக்க முடியாது என்று கூறுகிறார்  ஆசிரியர். 
❤👨‍🔬
3.இந்திய நவீன விஞ்ஞான ஆராய்ச்சிக்கு வித்திட்டவர் #மகேந்திர_லால்_சிர்கார் இவர் சில நண்பர்களின் உதவியோடு இந்திய அறிவியல் முன்னேற்ற அமைப்பினை 1876 ல் நிறுவினார். இவரது ஆசை என்னவென்றால் பல பிரபலமான விஞ்ஞானிகள் அந்த ஆய்வு ஆய்வுக்கூடத்தில் ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அவரது உழைப்பும் முயற்சியும் வீண் போகவில்லை .அந்த கழகத்தைப் பற்றி அறிந்து சர் சி வி ராமன் அவர்கள் ,#ராமன்_விளைவு  என்ற ஒப்பற்ற கண்டுபிடிப்பை அங்குதான் கண்டுபிடித்தார்.
❤4.#பிரஸந்த_சந்திர_மஹல்னோபிஸ். இந்திய கணித புள்ளியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் கல்கத்தாவில் வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இயற்பியலில்  ஆர்வம் என்றாலும் இராமானுஜம் போன்ற நண்பர்கள் கிடைக்கவே கணிதம் பயில தொடங்குகிறார்.முதல் உலகப்போரின் காரணமாக இவர் வெளிநாட்டிற்குச் செல்லாமல் நம் நாட்டிலேயே பிரசிடென்சி காலேஜ் இல் பேராசிரியராக இருந்திருக்கிறார். இந்திய திட்டக் கமிஷனில் இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் இவரது  கைவண்ணம் மிளிர்ந்தது.
💙👨‍🔬
கெப்ளரின் வானவியல் ஆய்வகத்தின் பெயர் "டைக்கோ ஆய்வகம்" என்று படித்திருப்போம். அந்த #டைக்கோ_பிராஹே என்ற விஞ்ஞானியை பற்றியும் இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. 
❤அடுத்து தொழில் துறையில் முதல் தொழிற்சாலையைப் பல சிரமங்களுக்கு இடையே நடத்திய #ரிச்சர்ட்_ஆர்கிட் .
💜👨‍🔬அடுத்து, வான் ஹம்போல்ட் என்ற விஞ்ஞானி ,ஒரு செல்வந்தர் .ஆனால், அவர் பல துறைகளில் வித்தகராக விளங்கினார். (நிதித்துறை ,புவியியல், வானியல் போன்றவை.. ) ❤❤ஜோசப் லூயிஸ் கே. லூசாக் வாயுக்கள் பற்றி ஆய்வுசெய்து வெப்ப விரிவு விதியை கண்டறிந்து அதற்கு தன் நண்பர் சார்லஸின் பெயரை வைத்தவர்.
❤//விஞ்ஞான பாட வேளைகளில் 6 வயதிலிருந்து விஞ்ஞான ஆசிரியர்கள் மாணவர்களை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும்//என்றார்  சர்.சி.வி இராமன் .அந்த எண்ணத்தை வலுப்படுத்தும் வகையிலும், அறிவியலில் ஆர்வத்தை தூண்டவும் #துளிர் இதழில்  கட்டுரைகளாக இவை வெளிவந்திருக்கின்றன.
📚நூல் ஆதாரம். Understanding Science .பள்ளி மாணவர்களுக்கான இங்கிலாந்து இதழ்.
📚🧐ஒரு பெண் விஞ்ஞானி கூட இந்த வரிசையில் இல்லை. மேரி கியூரி தான் நினைவுக்கு வந்தார். எப்படி தான் சாதித்தார்?❤💐.
மாணவர்களுக்கு படிக்கப் பரிந்துரைக்கலாம்.
பரிசளிக்கலாம்.👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு