*ஓநாய்குலச்சின்னம்*

🐺🦊🐀🐁🐺🦊🦝
🦌🦌🦌🐴🐴🐴🐴🐴
21/100
பக்கங்கள்..939
புத்தகம் _#ஓநாய்குலச்சின்னம்(சீன நாவல்)
ஆசிரியர்..ஜியோங் ரோங்
தமிழில்..சி.மோகன். 
❤📚அமேசான் கிண்டிலில் படித்தது. மங்கோலியர்களின் மேய்ச்சல் நில வாழ்க்கை முறை மனிதர்களின் நவீன வாழ்க்கை முறையால் எப்படி படிப்படியாக கபளீகரம் செய்யப்பட்டது என்பதை கதையின் ஒரு நாயகன் ஜென் சென்னின் பார்வையில் சொல்லப்பட்டதே இந்த நாவல்.   இது ஒரு Semi autobiography என்று எங்கோ படித்தேன்.
💕🐺🐴🐐🐑🐀🐕
//நாம் இங்கு வந்திருக்காவிட்டால், நாமும் இந்த உலகத்தை ஒரு எலியின் சின்னஞ்சிறு கண்களால்தானே பார்த்திருப்போம்; மேலும் நாம்தான் எப்போதுமே சரி என்று வேறு நினைத்துக்கொண்டிருந்திருப்போம்.’’//
 இது ஜென் சென் தன் நண்பனிடம் கூறுவது.ஆம் ❤#பயணங்கள் தான் நம் பார்வையை விசாலமாக்கும்.கலாச்சார புரட்சி சமயத்தில் ஹேன் இனத்தைச் சேர்ந்த ஜென் னோடு சில மாணவர்கள் ஓலோன்புலாக் என்னும் மங்கோலியர்களின் மேய்ச்சல் நிலத்திற்கு பயிற்சி பெற வருகிறார்கள். #பில்ஜி மேய்ச்சல் நிலத்தின் முதிய தலைவர் .பழுத்த அனுபவசாலி (நம்மாழ்வார் ஐயாவை நினைவுபடுத்துகிறார்).
மங்கோலியர்கள் டெஞ்சரை(கடவுள் போல) வணங்குகிறார்கள்.வாழ்விற்குப் பிறகு தமது உடலை மேய்ச்சல் நிலத்தின் குறிப்பிட்ட பகுதியில் வைக்கிறார்கள்.ஓநாய்களுக்கும்,பருந்துகளுக்கும் இரையாக ஒப்படைக்கிறார்கள்.அப்போது தான் ஆன்மா டெஞ்சருக்கு செல்லும் என நம்புகிறார்கள்.மண்ணில் புதைப்பது, எரிப்பது ஆகியவை வீண் என வாதிடும் பில்ஜி பிற விலங்குகளின்   மாமிசத்தை உண்டு வாழும் மனிதன் இறுதியில் தன் மாமிசத்தை அந்த விலங்குகளுக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்பது என்ன மாதிரியான மனம்❤  சிறப்பு 💕.மேய்ச்சல் நிலத்தை அழிக்கும் நான்கு விலங்கினங்கள்: வயல் எலி, காட்டு முயல், மர்மோட்டுகள்,மற்றும் மான்கள்.இவற்றை வேட்டையாடி மேய்ச்சல் நிலத்தை பாதுகாக்கும் #ஓநாய் மங்கோலியர்களின் #குலச்சின்னம் 
❤வேட்டைகள்🦌🦌🦌🐎🐎🐎🐇🐁🐏🐏🐏பலவிதம்.
ஓநாய்கள் மான்களை  வேட்டையாடுவது
*குதிரைகளை வேட்டையாடுவது,
*கல்பட்டியில் உள்ள ஆடுகளை வேட்டையாடுவது  எல்லாமே சண்டைப்பட இறுதிக்காட்சியில் இருக்கையோட நுனியில் உட்கார்ந்து பார்க்க வைக்குமே 🤩   அது போலவே இருந்தது. அந்த திட்டமிடல் (ஓநாய்களின்)
இராணுவ படையெடுப்பைப் போல அற்புதம்.🐺
மர்மோட்டுகள்(என்ன விலங்குகள்?)வளைகளில் வசிப்பவை.பொறி வைத்து மனிதர்கள் பிடிக்கிறார்கள்.அதையும் ஓநாய்கள் பொறுமையாக வேட்டையாடுவதும் அழகு.
ஆனால் மனிதர்கள் துப்பாக்கி, வெடிகளைப் பயன்படுத்தி ஓநாய்கள்,மர்மோட்கள்,அன்னங்கள்,வாத்துகள் ஆகியவற்றை குரூரமாக வேட்டையாடுவது...ஏற்றுக்கொள்ள இயலவில்லை 😢 
🐺❤ #ஓநாய்_குட்டி_ வளர்ப்பு.ஓநாய்களின் தன்மையை அறிந்து கொள்வதற்காக ஒரு ஓநாய்க்குட்டியை எடுத்து வளர்க்க விரும்புகிறான் ஜென்.குகையில் இருந்து நண்பனின் உதவியுடன் பிடித்து வந்த பிறகு #யிர் என்ற பெண் நாயின் மூலம் அதற்கு பாலூட்டி ,  பிறகு அவனுடைய பட்டியில் வைத்து  ஒரு குழந்தையைப்போல் பராமரிக்கிறான்.தனித்துவமான ஓநாய் தன் குணத்தால் பல போராட்டங்களுக்குப் பிறகு  இறுதியில் அவன் கையாலேயே இறப்பது கொடுமை.
❤ஓநாய் வளர்க்க பில்ஜியிடம் அனுமதி வேண்டும் போது, அவர்களின் நம்பிக்கைக்கும் மதிப்பளித்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளப் பேசுவது மற்ற மாணவர்களிடமும் தர்க்க ரீதியான விளக்கம் அளிப்பது, பொறுமையாக நடப்பது என  ஜென்சென் தன் குணங்களால் மிளிர்கிறார்.❤
👩‍👩‍👦‍👦கதாபாத்திரங்கள். #கஸ்மாய்..பில்ஜியின் மனைவி. ஓநாயைத் தனியாக விரட்டியடிக்கும் அளவு தைரியசாலி. 
#பாயர்.. பில்ஜியின் மகன்
#யாங் கீ ..ஜென்னின் நண்பன். இரக்க மனம் கொண்டவன்
#உல்ஜீ...கால்நடை மேய்ச்சலுக்கான புல்வெளி
தலைவர்.
#பட்டு, #லாசுருங்..குதிரை மேய்ப்பவர்கள் 
#சாங் ஜியோன்..குதிரை மேய்ப்பவர்.மேய்ச்சல் நிலத்தில் இடம் பெயரும்போது   ஓநாய் குட்டியை எடுத்துச் செல்ல உதவுபவர். 
#பாவோ_ சுங்காய்..அழிவுக்கு அடிகோலும் அதிகார வர்க்கம்......
#எர்லாங் ,#எல்லோ#யிர்,#பார்...வேட்டை நாய்கள்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். 
📚தத்துவம்#1“பொறுமைசாலிகளுக்கே, மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி , சந்தர்ப்பங்கள் தம்மை அர்ப்பணித்துக் கொள்கின்றன.❤
❤உலகம் முழுவதும் பயணம் செய்தாலும் இந்த மேய்ச்சல் நிலத்தை ரசிக்கணும் னா இந்த நூலைப்  படித்தால் தான் முடியும். புத்தகத்தை எடுங்கள்.. படியுங்கள் 📚❤
பில்ஜியோடு சேர்ந்து இந்தப் பாடலைப் பாடலாம்
🐴❤💕// 
வானம்பாடிகள் கீதமிசைக்கின்றன, இளவேனிற்காலம் இங்கிருக்கிறது; மர்மோட்டுகள் கீச்சிடுகின்றன, வண்ணப்பூக்கள் மலர்கின்றன; 
சாம்பல் கொக்குகள் அழைக்கின்றன, மழை இங்கு பெய்கிறது;
ஓநாய்க்குட்டிகள் ஊளையிடுகின்றன, நிலா வானில் எழுகிறது.//❤
திரைப்படம்..Wolf Totem https://m.youtube.com/watch?feature=youtu.be&v=lgP7E_dc7KMபார்க்க வேண்டும்.
நன்றி தமிழ் மதி

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு