24.உத்தராயணம் #லா.ச.ரா.

❤💐⚘💙🌷❤💙⚘🌷

23/100
புத்தகம் ..உத்தராயணம் ஆசிரியர் ..லாசா ராமாமிருதம்
*அமேசான் கிண்டிலில் படித்த புத்தகம்.
❤ஆசிரியரைப் பற்றி... இவர் மணிக்கொடி காலத்திலிருந்து  எழுதிய பழைய எழுத்தாளர் என்று குறிப்பிடுவார்கள். இவருடைய ஐம்பதாவது வயதில்தான் #புத்ர என்ற முதல் நாவலை எழுதியுள்ளார் .1989 ல் அவருடைய சுயசரிதை சிந்தாநதி என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
திருமணத்திற்கு முன் இவருடைய சிறுகதைகள் வாசித்த நினைவு 🙄.
உத்தராயணம் என்ற இந்த தலைப்பை படித்ததும் என் நினைவுக்கு வந்தது என் அப்பா வழிப்பாட்டிதான்.💙 அவர்கள்தான் தை முதல் ஆனி வரை உள்ள காலத்தை உத்தராயண புண்ணிய காலம் என்று கூறுவார்கள் .அந்த காலத்தில் நல்ல நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்றும் கூறுவார். அதே போல்  ... மார்கழி மாதத்தில் உயிர் பிரிந்தால் வைகுண்டத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை பல பேருக்கு அக்காலத்தில் உண்டு.    அதைவிட இந்த உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர் பிரிவது தான்  மிகவும் சிறந்தது என்பதுவும் அவரின்  அதீத நம்பிக்கை  .
❤   
அதற்கு ஏற்றார் போலவே இந்த உத்தராயணம் என்னும் தலைப்பில் உள்ள 13 சிறுகதைகளும் ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொரு மனிதருடைய இறுதி பயணத்தை பற்றி கூறுகிறது😢 உத்தராயணம் என்ற கதையிலும் யாருமற்ற வீட்டில்   நிகழும் ஒருவரின்  இறுதி நாளைப் பற்றிய நினைவுகள் .பிறகு முடிவு.
❤ இரண்டாவது கதையாகிய #விடைபெறநில் என்பதில் கூனப்ப முதலி என்பவரின் வீட்டிற்கு லட்சுமிதேவி வருவதாகவும் ,அதனால் செல்வச் செழிப்புடன் இருப்பதாகவும்,லட்சுமி தேவியை  வீட்டில் தங்க வைப்பதற்காக "என்னிடம் சொல்லி விட்டு தான் வெளியே செல்ல வேண்டும் " என்று  அவர் தற்கொலை செய்து கொள்வதாகவும் முடிகிறது கதை.
❤ மூன்றாவது கதை
#சப்தபதி..  காதல் மணம்? புரிந்து  ,  மனைவி இன்னொரு நண்பனிடம் இவரைப் பற்றி குறை கூறுவதோடு வேறு எங்காவது அழைத்துச் செல் என்று மன்றாடுகிறார்.இந்த  ஏமாற்றத்தால் தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொள்கிறார். 
❤ 4.#புலி_ஆடு (கவனிக்க..ஆடுபுலி இல்லை)  கணவன் மனைவி இருவரும் ஆடுபுலி ஆட்டம் ஆடுகிறார்கள். மனைவி வெற்றி பெறப் போவதை, கணவன் ஏற்றுக் கொள்ளாமல் அவளை அடித்து அதன் மூலம் அந்த ஆட்டத்தை ஜெயிக்கிறான் .ஆனால் அவளை ??என்று முடிக்கிறார் ஆசிரியர்.💙
❤#ஜ்வாலை  இதுவும் அன்பிற்கு ஏங்கும் விலாசினி யின் அகமனப் போராட்டங்களின் விளைவு மரணம். (கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் இப்பெண்ணுக்கு இப்படி நேர்ந்திருக்காதோ? )
7.#ஆஹூதி..அவள் அப்படித்தான் மாதிரி சுய மரியாதை மிக்க மனுஷியின் கதை.
❤8.#அகிலா ..உண்மையில் நடந்த கதை.வாசகரின் வீட்டிற்கு லா.ச.ரா சென்று தங்குவதில் தொடங்குகிறது கதை.
வீட்டின் தலைவர் கோமாவில்.சில நாள்கள் 
கழித்து அக்குடும்பத்தில் ஒரு மறைவு.அது வீட்டுத் தலைவர் அல்ல.
❤ஸர்ப்பம் ..அழகான அக்கா தங்கை கதை.அக்காவின் மனதைப் புரிந்து கொண்டு சிரிப்பது சிறப்பு. 
❤  ப்ரயாணம்..தனியாக பிள்ளையை வளர்த்து ஆளாக்கும் தகப்பன். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும் நேரத்தில் தடை வரக்கூடாது என்று தன் இறுதிக்காலம் நெருங்கி விட்டதை மறைத்து வழியனுப்புகிறார்.  
❤11.#ராமப்ரஸாதம்..
இந்தக் கதையில் இராணுவத்தில் பணிபுரியும் தந்தை இறந்து விட்டதாக தந்தி வருகிறது.அதை தாயிடம் மறைத்து தவிக்கிறார் மகன்.மனைவியின் சந்தேகம், பல மன உளைச்சல்களுக்குப் பிறகு திடீரென்று வருகிறார் தந்தை.
❤12.#கமலி  17 வயதில் காணாமல் போன மகளை நினைத்து பல வருடங்கள் கழித்தும் தாய்மனம் படும்பாடு. 
❤13.#வித்துகள்  ..3 முரட்டு பிள்ளைகளை வைத்து பாடுபடும் தாயின் கதை.
❤அக்ரகாரத்துல மாமிகளோட சில நாட்கள் பேசிவிட்டு வந்தது போல் இருக்கு.
எல்லாக் கதைகளும் மெல்லிய மன உணர்வுகளைப் பற்றியே  பேசுகின்றன.படிக்க வேண்டிய புத்தகம் தான்❤👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு