24. #அந்த_ஒரு_நிமிடம் ..🙈😔

🕠🕕🕡🕡🕖🕖🕢🕖🕤
👨‍🌾👮‍♂️👮‍♀️🕵️‍♂️🕵️‍♀️🕵️‍♀️🕵️‍♀️🕵️‍♀️🕵️‍♀️
24/100
புத்தகம்..அந்த ஒரு நிமிடம் (12.30am)
ஆசிரியர்..தெரியவில்லை  Crazy dragon??
பக்கங்கள். 110
வகை..துப்பறியும் நாவல்
*அமேசான் கிண்டிலில் படித்தது.
❤  ஆரம்பம் முதல் முடிவு வரை திகில் மற்றும்  மர்மம் நிறைந்ததாக இருக்கும் என்று முன்னுரையில் கூறி இருந்தார்கள். ஆனால் என்னுடைய  எதிர்பார்ப்போடு  இது ஒத்து வரவில்லை.  
🔍5 பேர் நண்பர்கள். அவர்கள் ஒவ்வொருவராக 12.35 am மணிக்கு கொலை செய்யப்படுகிறார்கள்
🔎🔍.துப்பறியும் கதைகளில் முதலில் ஒரு சிலரைப் பற்றி நாம் இவர்தான் குற்றவாளி ஆக இருப்பார் என்று கருதும்படி காட்சிகளை அமைத்து இருப்பார்கள் ஆனால் கடைசி அத்தியாயத்திற்கு முன் அத்தியாயத்தில் ஒரு கதாபாத்திரத்தை நுழைத்து அவர்தான் குற்றவாளி என்று முடிப்பார்கள் இதிலும் அவ்வாறுதான் இருக்கிறது😍.
//"குணாவோட பாடில  கழுத்துல அந்த தீய்ஞ்சு போன  ரத்தத்தோட குற்றவாளி கழுத்தை இறுக்கிப் பிடிக்கும்போது குற்றவாளி கையில் போட்டு இருந்த கையுறையைத் தாண்டி  குற்றவாளியின் நகம் பட்டு கீரல் விழுந்து இருந்தது.. "//இந்த வரிகளில் பொருள் குற்றம்??🧐.குற்றவாளியின் நகம் பட்டா செத்தவன் ரத்தம் தான் கீறல் ல இருக்கும். ஆனால் இன்ஸ் இரத்தப்பரிசோதனையில் குற்றவாளி ஒரு பெண் என்று  கண்டுபிடிக்கிறாராம்.
❤🔍காதலனுக்காக கொலை செய்யும் பெண் சிறையில் இருந்து வெளியே வந்து காதலனின் அம்மாவை கவனித்து தியாகி ஆகிடறாங்க.அவன் தம்பி கல்யாணம் பண்ணி மகிழ்ச்சியா இருக்கிறாராம்.🙄
கதை தானே அந்த பெண்ணுக்கும் ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கலாம் எழுத்தாளர் அவர்களே💐👍
ஒருமுறை படிக்கலாம் 😍

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு