25. #கொற்கை (கால்டுவெல் &ரீயா)

🌏🌏🌎🧭🀄🀄⛳🏖🏝🏜🏝
25/100
புத்தகம் .#கொற்கை
வகை..கட்டுரைகள்
 ஆசிரியர்கள்..1. அருட்திரு ராபர்ட் கால்டுவெல்2. முனைவர் அலெக்ஸாண்டர் ரீயா தமிழில்..#வானதி (முத்து பிரகாஷ்) .
பக்கங்கள்..60
❤இந்த நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூல். மூன்று கட்டுரைகளை உள்ளடக்கியது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளே 
 மூன்று கட்டுரைகளாக  ஆசிரியர் மொழிபெயர்த்துள்ளார் ஆதிச்ச நல்லூரில் அகழ்வு எப்போது ஆரம்பித்தது ?என்ற அவரின் கேள்விக்கு விடை தேடிய போது கிடைத்த பதில்களை புத்தகமாக வெளியிட்டுள்ளதாக தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார்.  
❤தாமிரபரணியின் இரண்டு புறமும் கிடைத்த தொல்லியல் பொருள்களை அடிப்படையாகக் கொண்டவையே இந்த கட்டுரைகள்.முதல் கட்டுரை இராபர்ட் கால்டுவெல் அவர்களால் எழுதப்பட்டு உள்ளது .ஆனால் இந்த கதை 1876 இல் தொடங்குகிறது .ஜெர்மனியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் முனைவர்  ஜோகார்  என்பவர் தென் தமிழ்நாட்டில் சுற்றி வரும்போது #கொற்கை என்ற சிறிய ஊரின்  அருகே பல வரலாற்றுக்கு முந்தைய பொருட்கள் கிடப்பதை பார்த்து அவற்றை சேகரித்து ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார்.  அந்த விசாரணைக்குப் பிறகு கால்டுவெல் அவர்கள்1877 ல் அந்த பகுதிக்குச்  சென்று தொல்லியல் ஆய்வுகள் செய்து பல முதுமக்கள் தாழிகளையும்,பல பொருட்களையும் கண்டறிகிறார். அவற்றைப் பற்றி தனது கட்டுரையில் விவரமாக கூறியுள்ளார்.❤
❤இரண்டாவதாக அலெக்சாண்டர் ரீயா என்பவர் 1899 இல்  இங்கு ஒரு நீண்ட அகழ்வை மேற்கொள்கிறார். பாளையங்கோட்டையில் இருந்து காயல் வரை நடத்தப்படும் இந்த ஆய்வில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்லியல் பொருள்கள் கிடைக்கின்றன .மூன்று ஆண்டுகள் அகழ்விற்குப்  பிறகு 1902 ல் எழுதிய கட்டுரையே இது❤ .
கொற்கையில் ஆரம்பித்த சிறு அகழ்வாராய்ச்சி எப்படி #தாமிரபரணியை தமிழகத்தின் நாகரீகத் தொட்டிலாக மாற்றியது என்றுஎல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதே
 மொழிபெயர்ப்பாளரின் அவா என்று குறிப்பிட்டிருக்கிறார். அது போலவே மொழிபெயர்ப்பு நடை சுவாரசியமாக இருப்பதால் இது நிச்சயம் பல பேரை சென்று அடையும் என்று தோன்றுகிறது . அரை மணி நேரத்தில் படித்து விடலாம்   .📚📚👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு