27. #நீதிதேவன்மயக்கம்..பேரறிஞர் அண்ணா

🏅🥇🥈🥉🥈🥇🏅🥉🥈🥇🏅🥈🥉🥇🏅🥉🥈🎈🎈🎈🎈🎈🎈
27/100
புத்தகம் ..#நீதி_தேவன்_மயக்கம்.
ஆசிரியர்..பேரறிஞர் அண்ணா. 
வகை.நாடகம்.
பக்கங்கள்.102
❤ அமேசான் கிண்டிலில் படித்தது. ❤❤அண்ணாவின் எழுத்துக்களைப் படித்த எல்லோரும் அவருடைய தம்பிகளாக எப்படி மாறினார்கள் என்பதற்கு இந்த புத்தகம் ஒரு சாட்சி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல👍🏻
❤தாம் மட்டும் மாத்தி யோசி என்று இருக்காமல் தம்மை சுற்றியுள்ள சமூகமும் மாற்றி யோசிக்க வேண்டும் என்று சிந்தித்தவர்கள் பெரியாரும் அண்ணாவும்.
❤நாடகத்தைப் பற்றி.. இது பூலோகத்தில் புதுமைக் கருத்துக்கள் பரவி விட்டதால் பழைய தீர்ப்புகளை மாற்ற வேண்டும் என்று ஆண்டவர் புனர் விசாரணை நீதிமன்றம் ஒன்றை அமைக்கிறார்.முதல் விசாரணை  கம்பரின் குற்றச்சாட்டுக்குள்ளான ராவணன் ஒரு அரக்கன் என்பதைப்பற்றியே👍🏻 
இராவணன் தண்டிக்கப்பட்டது நியாயமா என்பதை விசாரிக்கிறார் நீதிதேவன். இராவணன் தரப்பு நியாயத்தை செவிமடுக்கிறது புதிய நீதிமன்றம் ❤ 
❤இராவணன் தான் மட்டுமா அரக்கன்? #அரிச்சந்திரன்  பெருமையை உலகிற்கு தெரிவிக்கிறேன் என்று இரக்கமில்லாமல் அவனிடம் நடந்துகொண்ட விசுவாமித்திரர், மேனகையை மட்டும் ஏற்றுக் கொண்டு சகுந்தலையை ஏற்க மறுத்த #விசுவாமித்திரர். 
🔍தகப்பன் பேச்சைக் கேட்டு தலையை கொய்த #பரசுராமர்,
 ❤ கர்ப்பிணி மனைவியை காட்டுக்கு அனுப்பிய #இராமன்  
இராமனைக் காட்டுக்கு அனுப்பிய #கைகேயி, 
🔍குல தர்மத்தைக் காக்க சம்புகனின் தலையைக் கொய்த #இராமர் ,
🔍ஏகலைவனின் கட்டைவிரலை குருதட்சணையாக பெற்ற #துரோணர், 
🔍 வரம் அளிக்க சப்தரிஷிகளின் பத்தினிகளை விரும்பிய #அக்னிதேவன், 
🔍கோட்புலி நாயனார் என்ற இயற்பெயர் கொண்ட #சேக்கிழார் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் சிவனுக்கு என்று சேர்த்து வைத்த நெல்லை பஞ்ச காலத்தில்  மக்கள் எடுத்துக்கொள்கின்றனர். சிவன் சொத்தை கொள்ளை அடித்தார்கள் என்று அந்த எளிய மக்களை கொன்று குவிக்கிறார்.அதில் ஒரு சிசுவும் அடக்கம்(ஏனெனில் அரிசியை சாப்பிட்ட தாயின் பாலை குடித்ததால்😢 )  இதில் எங்கு வருகிறது இரக்கம்? இது போல பலர் இரக்கமற்று நடந்து கொண்டிருக்கும் பொழுது என்னுடைய தங்கையை அவமதித்த இராமனை எதிர்த்து  நான் செய்தது எப்படி தவறாகும் என்று தன் தரப்பு வாதங்களை வைக்கிறார் இராவணன்😌.இறுதித் தீர்ப்பு யாருக்கு என்று சொல்ல வேண்டியது இல்லை 😍
அனைத்து இலக்கியங்களையும் கரைத்து குடித்தவர் .எழுத்து நடையைப்பற்றி சொல்லவா வேண்டும்!  
மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. ஆனால் கிண்டிலில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள்.புத்தகமாக வாங்கி அலமாரியில் வைத்து வாசிக்க வேண்டிய புத்தகம் ❤

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு