28.கதாவிலாசம்..தொகுப்பு..வெ.நீலகண்டன்

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
💖💖💖🔥🔥🔥🔥🔥🔥
28/100
புத்தகம் #கால_விலாசம். தொகுப்பாசிரியர்.. வெ.நீலகண்டன் பக்கங்கள் .142
வகை.. கட்டுரை தொகுப்பு .
அமேசான் கிண்டிலில் படித்தது .#குங்குமம்_தோழி இதழில் தொடராக வெளி வந்த கட்டுரைகள்.
❤15 பெண் ஆளுமைகளின் வெற்றிக்கு காரணமான நேர நிர்வாகத்தைப்  பற்றி பேசுகிறது.
# நம் சமூகத்தில் ஒரு பெண் ஜெயிக்கணும்னா 100% வேலை செஞ்சா போதாது 200% வேலை செய்யணும். பெண்ணுங்கிறதுக்காக எந்த சலுகையும் நான் எதிர் பார்த்தது இல்லை அப்படின்னு சொல்றாங்க தீயணைப்பு வீரர் #மீனாட்சி_விஜயகுமார் (தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி).
💖#லதா_நம்பீசன்(#HR)   
“நேர நிர்வாகம் வளர்ப்போடு ஒட்டி வரவேண்டிய ஒரு வாழ்க்கை நெறி.. வெற்றி பெற்ற எல்லாருக்குப் பின்னாடியும் திட்டமிட்ட நேர நிர்வாகம் இருக்கும். ஆண், பெண் பேதமெல்லாம் இதில கிடையாது..//
💖#மஹதி(இசைக்கலைஞர்)//ஒரு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கும் போதே இன்னொரு வேலையைப் பத்தி யோசிக்கிறது.. இதெல்லாம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. இந்த மாதிரி மனிதர்களோட மனசுல எப்பவும் ஒரு பரபரப்பு இருந்துக்கிட்டே இருக்கும்.. எந்த வேலையிலயும் ஒட்ட முடியாது. முதல்ல அந்த மனநிலையில இருந்து வெளியே வரணும். //
💖#சண்முகப்ரியா_ஹரிப்ரியா(இசைக்கலைஞர்கள்)
//“நேர நிர்வாகங்கிறது தனியா ஒரு விஷயமில்லை. இசை மாதிரியே அதுவும் வாழ்க்கையோட இணைஞ்ச ஒரு அங்கம். அதுமட்டும் கைவந்துட்டா எந்த துறையா இருந்தாலும் அதில சாதிச்சுடலாம். அதுக்கு, ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கிடையாது. //
💖#ரேவதி_சங்கரன் தரும் டிப்ஸ் நாளைய வேலையை இன்றே திட்டமிடுங்கள்.
💖
#அபூர்வா_IAS//"என்னோட அனுபவம் இன்னொருத்தருக்குப் பொருந்தாது. என்னைப் பொறுத்தவரை, ஒரேமாதிரி ‘ஸ்டாண்டர்டு புரோட்டாக்கால்’ போட்டுக்கிட்டு, 1மணிக்குச் சாப்பிடனும், 8மணிக்குத் தூங்கன்னுன்னு ஒரேமோதிரி திட்டமிடுறதில நம்பிக்கை இல்லை. //
(எனக்கு கூட மேம்🤪)
💖#வழக்கறிஞர்_அஜிதா (சட்டப்போராளி)
//நேர நிர்வாகம் என்பது மற்றவர்களுக்கானது அல்ல. உங்களுக்கானது. அதில் உங்களது நலனுக்குமான நேரம் கொஞ்சமாவது இருக்கட்டும்.." கனிவோடு சொல்கிறார் அஜிதா.//
💖#அனகா_அலங்காமணி(ஸ்குவாஷ் வீராங்கனை)
//எல்லோருடைய கடிகாரமும் ஒரேமாதிரி, ஒரே வேகத்துல தான் சுத்துது. ஒவ்வொரு நொடி நகரும்போதும், நமக்கே நமக்கான ஒரு கணம் போயிக்கிட்டிருக்கு.. அதை வீணாக்கக்கூடாது. எல்லோருக்கும் இங்கே களங்கள் தயாரா இருக்கு.. முதல்ல களத்துல இறங்கனும்.. மத்தவங்களை விட முன்னாடி ஓடனும்🏃‍♀️//
❣💚💖
#பாரதி_பாஸ்கர் அவர்களோட அனுபவம் தொலைக்காட்சியில் பேசுவது போல் மனதுக்கு நெருக்கமா  
உணர வைக்கிறது. 
//😍😎💃🏻: தேடல்லயே நிறைய நேரத்தை இழந்திருக்கேன்.குறிப்பிட்ட காலம் வரைக்கும் எங்கேயும் சரியான நேரத்துக்கு நான் போனதேயில்லை.
(இப்ப வரைக்கும் நான் அப்படியே😢)
😍😎💃🏻: நேரத்தை நிர்வாகம் பண்ணனுன்னா இடத்தை சரியா நிர்வாகம் பண்ணனும். இடத்தை சரியா வச்சுக்கிட்டா தேடத் தேவையிருக்காது. கொஞ்சம் திட்டமிடனும். //
எடுத்த பொருளை அப்போதே எடுத்த இடத்தில் வெச்சா தானே அப்டீனு நம்ம வீட்லயும் தான் சொல்றாங்க. 
கேட்டா தானே😇அதனால் தான் நாம் சாதாரணப் பெண்மணி😔அவங்க சாதனைப் பெண்மணி 💐  .
இவங்க சொன்ன Highlight lines//💖ஒருமுறை, ‘இவ்வளவு பரபரப்பா இயங்குற நீங்க எப்படி இவ்வளவு புத்தகங்களைப் படிக்கிறீங்க’ன்னு நேருக்கிட்டா கேட்டாங்க. ‘என் தூங்கும் நேரத்தைத் திருடி படிக்கிறேன்’ன்னு சொன்னாராம். குறைந்தது ஒரு அரைமணி நேரம் படிக்க ஒதுக்கனும். அது வருங்காலத்துக்கான முதலீடு. நல்ல தலைமுறையை உருவாக்க வாசிப்பு ரொம்பவே முக்கியம்.💯💕//இந்த ஒண்ணு மட்டும் தான் உருப்படியாக பண்றது😍
எல்லோருக்கும் ஊக்கம் அளிக்கும் புத்தகம் படிங்க👍🏻

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு