29.சிவகாமி பர்வம்..ஆனந்த் நீலகண்டன்

🌇🌇🌇🌇🌇🌇🌇🌇
💖💖💖💖💖💖💖💖
29/100
புத்தகம். #சிவகாமி_பர்வம் 
ஆசிரியர் ..
#ஆனந்த்_நீலகண்டன் தமிழில் ..மீரா ரவிசங்கர்.  பக்கங்கள்.. 498 
ஆசிரியரின் பிற நூல்கள்..
 அசுரா (ரோல் ஆப் தே டைஸ்) &ரைஸ் ஆஃப் காளி.
😍😍😇கீழே உள்ள 5 அல்லது 6 வரிகளை படிச்சுட்டு அப்படியே இது எந்த காலம் என்று யோசித்து பார்க்கலாமா? #நாட்டை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே ஊழல் பெருச்சாளிகள், அரசு அனாதை விடுதியில் இருந்து 18 வயதானதும் பணத்துக்காக , சதிகாரர்களால் விற்கப்படும் குழந்தைகள்(அங்கு அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் தனி😢) நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவது நமது கடமை. நமது உயிரே எஜமானர்களுக்கு தான் சொந்தம் 🙆‍♀️என்று பெற்றோராலேயே சொல்லி வளர்க்கப்படும் அடிமை கூட்டம் ஒருபுறம், எந்த விதத்திலும் திறமை  இல்லாது போனாலும் பதவியில் இருக்கும் காரணத்தினால் எல்லாவித சுகங்களையும் அனுபவிக்கும் கூட்டம் மற்றொருபுறம், 😌
நம் கண்ணெதிரிலேயே இயற்கை அழிக்கப்படுவதையும், உழைப்பு சுரண்டப்படுவதைக் கண்டும்,அபாயகரமான வேலையில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளைக் கண்டும் கொதித்து எதிர்க்கும் புரட்சியாளர்கள் கூட்டம் ஒருபுறம் 🤺😇
இந்த காட்சிகள் அனைத்தும் எந்த காலத்தில் நடந்தது என்று கேட்டால் ....
🤔நம் கொள்ளுத் தாத்தா, தாத்தா ,அப்பா, நான், ஏன் ?என் மகள் கூட #நம்_காலத்தில்_தான்  என்று கூறுவோம். சரி தானே??
🤴👸 #பாகுபலியின் தாத்தா காலத்திலும் இப்படித்தான் இருந்ததாம்.
இந்த நாவல் பாகுபலி திரைப்படத்தின் முன்கதையாக கற்பனை செய்யப்பட்டது.
 பாகுபலியின் தாய் சிவகாமியை சுற்றி நிகழ்வது.
🏛 மகிழ்மதி அரண்மனையில் பூமிபதியாக இருந்த தேவராயரின் மகள் தான் சிவகாமி.அவளுக்கு 5 வயதாக இருக்கும் போது  தேவராயர் #துரோகி பட்டம் சூட்டப்பட்டு தூக்கிலிடப்படுகிறார். அவரின் கையெழுத்துப் பிரதி ஒன்று, பைசாச மொழியில் எழுதப்பட்டது சிவகாமியின் கைக்கு வருகிறது .அதில் என்ன இருக்கிறது  என்று கண்டறியும் முயற்சிகளின் நடுவே,  மகிழ்மதி அரசாங்கத்தின் ஊழல் அதிகாரிகள், சதிகாரர்கள், புரட்சியாளர்கள் எனப் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறாள். இறுதியில் ,சிவகாமியே பூமிபதியாக (தந்தையின் மரணத்திற்கு யாரை பழி வாங்க நினைத்தாளோ அந்த) மகாராஜாவைக் காப்பாற்றியதற்காக அவரின் கைகளால் பதவியைப் பெற்றுக்கொள்வதோடு பாகம்-1 முடிந்துவிட்டது. மகிழ்மதி  அரசை அழிக்க சபதம் பூண்ட சிவகாமிஎப்படி ராஜமாதா ஆனார்? அந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இருந்தது என்று அடுத்த புத்தகத்தில் தான் தெரியும் போல.😟 இது தெரியாம ஒரு புத்தகம் மட்டும் வாங்கிட்டேன்🙆‍♀️ சிவகாமியை சிலகாலம் வளர்த்த திம்மா ,  மகாராஜா,இளவரசன் பிஜ்ஜாலா, இளவரசன் மகாதேவா ,சிவகாமியின்  நண்பர்களான குண்டு ராமு ,காமாக்ஷி,பிரதம மந்திரி  பரமேஸ்வரன்,  துணை பிரதம மந்திரி கந்ததாசன்,பட்டராயர்,
தண்டநாயக பிரதாபன், ருத்ரபட்டர்,மலையப்ப_கட்டப்பா _சிவப்பா,ஆச்சி நாகம்மா,அல்லி,ஜீமோத்தா,பூதராயன்,பிரகன்நளா,கேகி எனப் பல கதாபாத்திரங்கள்❤
#நினைவில்_நின்ற_கதாபாத்திரம் ..துணை பிரதம மந்திரியாக இருக்கும் #கந்ததாசன்.
😢கரடிநடனக்காரன் என மற்றவர்களால் ஏளனம் செய்யப்படுபவர்.  கீழ் நிலையில் மிகவும் உணவுக்காக கஷ்டப்படும் அவர் பிரதம மந்திரி பரமேஸ்வரன் கண்ணில்பட்டு படிப்பறிவு பெற்று, படிப்படியாக தனது நேர்மையாலும், தனது கடின உழைப்பாலும் துணை பிரதம மந்திரி வரை உயர்கிறார்.பரமேஸ்வரருக்கு அடுத்து  
பிரதம மந்திரியாகவும் உயர்கிறார்.  அவர்தான் அடித்தட்டு மக்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு உதவி செய்கிறார் . மகிழ்மதியின்  அரசாங்க ரகசியமான கௌரி காந்தா கல் ,அதிலிருந்து தயாரிக்கப்படும்  கௌரி தூளியைப் பற்றிப் பதிவு செய்ய முயற்சிப்பதற்குள் பேராசைக்கார மற்ற அதிகாரிகளால்  உயிர் துறக்கிறார்.
❤ஒருமுறை படிக்கலாம் 👍

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு