30.சமுதாய வீதி_நா.பா

🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🏠🏠
🏠🏠🏠🏠🏠🏠🏠🏠
30/100
புத்தகம் .#சமுதாய_வீதி
#ஆசிரியர் _'தீபம்' #நா.பார்த்தசாரதி.
 பக்கங்கள் ..321 
வகை ..நாவல் 
அமேசான் கிண்டிலில் படித்தது.
❤ஆசிரியரின் பெயரை படித்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது தொலைக்காட்சியில் பார்த்த #குறிஞ்சிமலர் கதைதான். இவருடைய 51 நூல்கள்  நாட்டுடைமையாக்கப்பட்டு உள்ளன. 
❤   இந்தக் கதையைப் பற்றி இது இருபது அத்தியாயங்கள் கொண்டது.மதுரை கந்தசாமி வாத்தியார்  நடன நாடக சபாவில் வசனகர்த்தா, பாடலாசிரியர் ,நடிகர் போன்ற பன்முகத் திறமை கொண்ட முத்துக்குமாரசுவாமி பாவலர் என்ற முத்துக்குமரனும்,ஸ்த்ரீபார்ட் என்ற பெண் வேடமிடும் கோபால்சாமியும் நண்பர்கள்?. இதில் கோபால்சாமி ,⭐சென்னை திரைப்பட துறைக்கு வந்து நடிகர் கோபால் என்ற நட்சத்திர அந்தஸ்துடன் இருக்கிறார் .கோபால் தன் திரைப் புகழைப் பயன்படுத்தி நாடகம் தயாரிக்க நினைக்கும் தருணத்தில் முத்துக்குமரன் மிகச்சரியாக கோபாலை சென்னையில் சந்திக்கிறார். முத்துக்குமரன் நாடகம் எழுத ,கோபாலுக்கு கதாநாயகியாக நடிக்கிறார் துணை நடிகை மாதவி .நாடகம் சென்னையில் அரங்கேற்றப்பட்டு வெற்றிபெற்ற உடன் மலேசியாவில் நடத்த கலைக்குழு அங்கு செல்கிறது .பினாங்கு வியாபாரி அப்துல்லா, ஒரு மாத ஒப்பந்தம் செய்து அழைத்துச் செல்கிறார். எதிர்பாராதவிதமாக கோபால் நடிக்க முடியாத நேரத்தில் முத்துக்குமரனை கதாநாயகனாக நடித்து அனைவரையும் கவர்கிறார். சென்னைக்கு திரும்பியவுடன் கோபாலுடன் மனத்தாங்கல், மாதவியுடன் திருமணம் கதை சுபம். 
முத்துக்குமரன் கதாபாத்திரம்  நம்மை சிவாஜி கணேசனைக் கண்முன்னால் நிறுத்துகிறது. ஆனால் கோபால்  புகழ்பெற்ற நடிகர் என்பதால் அவரை சிவாஜி போல் என்று மற்றவர்களுக்கு தோன்றுமோ?😍 
1968ல் வெளிவந்த நாவல் என்பதால் அக்காலத்திற்கு ஏற்ற ஆண்,பெண் இலக்கணங்களோடு உள்ளது.திரைத்துறை பற்றிய ஆசிரியரின் கருத்தே இதில் மேலோங்கி இருப்பதாகக் கருதுகிறேன்.
😢 //சமுதாய வீதியில் நிரந்தரமாக இராவணர்கள் இன்னும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.”இராவணன்கள் இருக்கிறவரை அவள் சமூகத்தின் புழுதி படிந்த வீதிகளில் துணையின்றித் தனியாக நடக்கவே முடியாதோ என்னவோ?//
இக்கால கட்டத்தில் குழந்தைகள் கூட இயல்பாய் ,சுதந்திரமாக விளையாட முடியவில்லை என்பது தான் இந்த வரிகளைப் படித்ததும் நினைவில் வந்தது.
⭐// “சமூகத்தின் ஒவ்வொரு துறையும் இன்றைக்கு ஒரு பெரிய வீதியாக நீண்டிருக்கிறது. அவற்றில் சில வீதிகளில் நடந்து செல்கிறவர்களுக்குப் பாதுகாப்புக் குறைவு; பிரகாசம் அதிகம். சமூகத்தின் இருண்ட வீதிகளில் நடப்பதை விட அதிகமான திருட்டுக்களும் வழிப்பறிகளும் பிரகாசமான வீதியில் தான் மிகுதியாக நடைபெறுகின்றன. பிரகாசங்களின் அடியில்தான் அந்தகாரம் வசிக்கிறது. கலையுலகம் என்ற வீதி இரவும் பகலும் பிரகாசமாக மின்னுகிறது. புகழால் மின்னுகிறது. வசதிகளால் மின்னுகிறது. ஆனால் இதயங்களால் மின்னவில்லை. எண்ணங்களின் பரிசுத்தத்தால் மின்னவில்லை. அந்த வீதியின் பிரகாசத்தில் மிக வனப்புடைய பலருடைய சரீர அழகும், மன அழகும், மௌனமாகவும் இரகசியமாகவும் பலியாகிக் கொண்டே இருக்கின்றன.”//
⭐❤பிடித்த வரிகள் ❤⭐❤
//மனிதனோட உயர்ந்த மொழி பிறரிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் போது தான் பேசப்படுகிறது. அது தெரிஞ்சாலே போதும். அது தெரியாதவங்களுக்கு எத்தனை மொழிகள் தெரிந்தாலும் பயனில்லை. துக்கப்படறபோது ரெண்டு சொட்டுக் கண்ணீரும் சந்தோஷப்படறபோது ஒரு புன்னகையும் பதிலாக எங்கிருந்து கிடைக்குமோ அங்கேதான் எல்லா மொழிகளும் புரியற இதயம் இருக்கு.”//
நா.பா💐

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு