31.கண்டதச் சொல்றேன் ..T.S.கிருஷ்ணவேல்

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
🎁🎁🎁🎁🎁🎁🎁
31/100
புத்தகம்_ #கண்டத_சொல்றேன். ஆசிரியர் _டி .எஸ். கிருஷ்ண வேல். பக்கங்கள் _90 .
வகை _கட்டுரை தொகுப்பு 
 வெளியீடு_ தமிழ்நூல் மன்றம்.
❤ நமது "வாசிப்பை நேசிப்போம்" குழுமத்திலிருந்து எனக்கு கிடைத்த முதல் புத்தகப் பரிசு❤📚❤ குழுவிற்கும், இப்புத்தகத்தின் ஆசிரியருக்கும் நன்றி🙏🏻  இப்புத்தகம் 15 கட்டுரைகளைக் கொண்டது. 
🔎🔎முன்னுரையில் சொல்லப்பட்டது போலவே தெரிந்த செய்திகளில் மேலும் பல கூடுதல் தகவல்களை சேர்த்துள்ளார்.
📚 முதல் கட்டுரையே சுவாரசியம் தான். #24_மாதங்களில்_காணாமல்_போகும் என்பது தலைப்பு .என்ன என்று பார்த்தால் இணையத்தில் இருக்கும் நமது #கடவுச்சொல் .பாஸ்வேர்ட் ரீசெட் செய்யும் சேவைக்கு மாதம் 38 கோடி ரூபாய் செலவாகிறதாம்.  TRUSONA app பற்றியும் இதில் தெரிந்துகொள்ளலாம். 📚#கிரெடிட்_கார்டு கட்டுரையில் தனது அனுபவத்தையும், மற்றவர்களுக்கு வழிகாட்டுதல்களையும் தெரிவித்துள்ளார். பயனுள்ள கட்டுரை. 
#பசங்க 2 கட்டுரையும் திரைப்படத்தில் ஆரம்பித்து கல்விமுறையில் நிற்கிறது .5_3_2 என்ற முறையில் படிக்க வைக்கலாம் என்பது புதுவித கருத்தாக தான் உள்ளது .மகனை அடித்து திருத்தினேன் என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை😢 அதேபோல் ஆசிரியர்களுக்கு தொடக்க நிலை சம்பளம் ரூபாய் 50,000 என்பதற்கு ஆசிரியர்களிடமிருந்து மட்டுமே சில எதிர்ப்புக்கள் வரலாம் ஆனால் நீங்கள் சொல்ல வந்த கருத்து பின்னாலுள்ள வரிகளில் புரிகிறது .உங்கள் பிள்ளையுடன் நீங்கள் செலவழிக்கும் இரண்டு மணிநேரம்தான் தனியார் பள்ளிகளை வாழவைக்கிறது பேரும் புகழும் பெற வைக்கிறது என்பது என்னைப் போன்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியும் என்ன செய்வது??🙄.
 ஆனால் ,நீங்களும் 1,2,3 என்ற எண்களுக்கு  அடிமை தானா??? #மாங்காடு_காமாட்சி அம்மன் கோயில் ,புத்த கோயிலாக இருக்கலாம் என்பது ஆசிரியரின் கணிப்பு. பீடத்தின் முன் வெள்ளித் தகடு போட்டு மூடப்பட்டிருந்தது சுயம்பு என்று சொல்லப்படுவது. அம்மன் கோயில்களில் கருவறையில் இருக்கும் இதை உங்கள் மனைவியிடம் கேட்டு இருந்தாலே சொல்லியிருப்பார்.  ♦️♦️♦️வைரத்தை மற்றொரு வைரத்தின் முனையை கொண்டு அறுக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், நான் சமீபத்தில் படித்த ❤ஷாந்தினி சொர்க்கம் நாவலில் வைரத்தை விட கடினமான #போரான்_ கார்பைட் என்ற அடர்கரியால் மட்டும்தான் அது சாத்தியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.😊 
❤இந்திய சூப்பர் ஸ்டார்கள் பற்றிய தகவல்கள் எனக்கு புதியவையே.
📚ஹீலர்கள் _தடுப்பூசி_ இயற்கை உணவு  என்ற கட்டுரையில் மேற்கத்திய நாடுகள் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி முன்னேறினர் என்ற நல்ல கருத்தையும், நவீன மருத்துவத்தின் பால் உள்ள அவரது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளார்.
🎭நீங்களும் ஆகலாம்  ஒரு #இல்லுமினாட்டி என்ற கட்டுரையில் இலுமினாட்டி ஆகும் வழியைக் கூறி இருக்கிறார் .ஆனால், நிறைய செலவாகுமாம். நமக்கு தேவையா சார்?😍
❤ இயேசுவுக்கும் சூப்பர்மேனுக்கும் உள்ள தொடர்பு கட்டுரையில் கிமு 4500 இல் ஆரம்பித்து தொடர்பை விளக்கியிருப்பது சிறப்பு.
🙏🏻 லிங்க வழிபாட்டின் மூலமும் வரலாறும் கட்டுரை புத்த மதம், இஸ்லாம், எகிப்து நாகரீகம் என பல தரவுகள் இருந்தாலும் முடிவு எட்டப்படவில்லை.
 💒தேவ மைந்தனின் பிறந்தநாள் கிமு 44 இல் உள்ள ஆதி கர்த்தரைப் பற்றிய கதையை நம்ம ஊரு பிள்ளையார் கதையோடு இணைத்திருக்கிறார். ஆனால் எனக்கு விளங்கவில்லை🧐 
❤ஒவ்வொரு கட்டுரையும் சாதாரண விஷயம் தானே என்று படிக்க ஆரம்பித்தால் அதற்குள் பல தரவுகளை சேகரித்து எழுதியிருக்கும் ஆசிரியரின் உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள் 💐
#தெரிந்த_வரலாற்றின்_ தெரியாத_பக்கங்கள் புத்தகத்தை வாங்கி வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது இப்புத்தகம்❤

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு