32.ஒற்றை வைக்கோல் புரட்சி..மசானபு ஃபுகோகா


*சூழலியல்*
🌏🌏🌏🌏🌐🌱🍁🍀🍃🍂🌼🌻🌏🌏🌏
பக்கங்கள்..202
புத்தகம்_ #ஒற்றை_வைக்கோல்_ புரட்சி
 ஆசிரியர்_ #மசானபு ஃபுகோகா தமிழில் #நம்மாழ்வார் தாசன்.
 கிண்டிலில் படித்தது .
❤ஜப்பானைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானி அவருடைய அனுபவங்களை லாரி கோர்ன் அவர்கள் ஃபுகோகாவின் வார்த்தைகளாலேயே 🌾தொகுத்திருக்கிறார் ஆங்கிலத்தில். 
🌾🌾🌾 சிறுவயதில் இருந்தே விவசாயத்தை பார்த்து வளர்ந்தவர்கள் கூட வைக்கோலை வயலில் போடும் காட்சியை நாம் பார்த்திருக்க மாட்டோம் ஆனால், ஃபுகோகா  அவர்கள் வைக்கோலை வயலில் பரப்பி உரமாக மாற்றி, நீரை குறைவாகப் பயன்படுத்தி உரங்களை பயன்படுத்தாமல் மகசூலை கண்டு வெற்றி பெற்று இருக்கிறார்.
🌾🌾 ஆராய்ச்சிகள் மூலமும் கண்டுபிடிப்புகள் மூலமும் இயற்கையை விட சிறந்த ஒன்றை கண்டுபிடிக்கும் என நம்புவது ஒரு மாயை என்கிறார் ஆசிரியர்.
🌾🌾🌾 //"சரியான உணவு, சரியான செயல், சரியான விழிப்புணர்வு." இம்மூன்றும் ஒன்றிடம் இருந்து ஒன்று பிரித்துவிட முடியாதவை இதில் ஒன்று இல்லாவிட்டால் எதையும் உணர முடியாது ஒன்றை உணர்ந்து விட்டால் எல்லாமே புரிந்துவிடும் இதுவும் ஆசிரியரின் கருத்தே. இது வேளாண்மை பற்றி மட்டும் பேசும் புத்தகம் அல்ல என்று முதல் அத்தியாயத்தில் லாரி கோர்ன்  குறிப்பிடுகிறார்.  அதைப்போலவே வாழ்க்கைக்குத் தேவையானவை எவை ,அறிவியல் முன்னேற்றம் ,மனிதர்களின் இடையே ஏற்பட்டுள்ள மன மாற்றம் ஆகிய அனைத்தைப்பற்றியும் பேசுகிறது இந்நூல்.
🌾🌾 இயற்கை வேளாண்மையை பின்பற்றுவது என்பது தற்காலத்தில் மிகவும் சிரமம் தான் .சிறு விவசாயிகள் இத்தகைய சோதனை முயற்சியை தொடங்குவது என்பது அவர்கள் வாழ்க்கையைப் பணயம் வைப்பது போலத்தான்.
🌴🌿🌾🌳20 அல்லது  முப்பது ஏக்கர் வைத்துள்ள பெரிய விவசாயிகள் வேண்டுமானால் இந்த இயற்கை வேளாண்மைக்கென சில பகுதிகளைப் பரிசோதித்துப் பார்க்கலாம். ஆனால் ,நவீன விஞ்ஞான அவசரயுகத்தில் இயற்கையின் பக்கம் விவசாயிகள் திரும்புவது என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு