33.ஏழாவது அறிவு

💜💜💜💜💜🎈🎈🎈
#சுய_முன்னேற்றம்
#புத்தகம்_ _#ஏழாவது_அறிவு (முதல்பாகம்).
 ஆசிரியர்_ இறையன்பு ஐஏஎஸ்
வகை ..கட்டுரைத் தொகுப்பு.
பக்கங்கள்.. 268
   2012 ல் எனது மகள் பரிசளித்த புத்தகம். பொதுவாக நான் சுயமுன்னேற்ற நூல்களை விரும்பிப் படிப்பதில்லை .(ஏன்னா,Follow பண்றது ரொம்ப கஷ்டங்க😍அதனால தான்).ஆகவே,🙃  இப்போதுதான் முழுமையாக படித்து முடித்தேன்.
❤   புத்தகத்தைப் பற்றி... இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் சென்னை வானொலி பண்பலையில்  " இன்று பிறப்போம் புதிதாய்" என்னும் தலைப்பில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இந்த நூல். ஆகும் .இதில்  70 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
  இந்த கட்டுரைகளை நாம் படிக்கும்போது இறையன்பு அவர்களின் குரலில் கேட்பது போலவே இருக்கின்றது.தென்கச்சி ஐயாவையும் நினைவூட்டுகிறது.  ஒவ்வொரு கட்டுரையும் வித்தியாசமான  கருத்துக்களைக் கொண்டுள்ளது.
எதிர்மறைச்சிந்தனை,பயம்,வாழ்க்கை,சுயம் என பல தலைப்புகள் .
💙💙
//லியோனார்டோ டாவின்சியின் புகழ்பெற்ற ஓவியமான 'Last supper ' ல் இயேசுவுக்கு மாடலாக இருந்த இளைஞன் Pietro Bandinelli பல வருடங்கள் கழித்து  யூதாஸுக்கும்  மாடலாக இருந்தான்.மனிதர்களுக்குள் இயேசுவும் உண்டு ,யூதாஸும் உண்டு .நமக்குள் இருக்கும் யாரை சாகடிக்க போகிறோம் என்பதுதான் கேள்வி.// பல தகவல்களுடன் நம் சிந்தனையையும் தூண்டுகின்றன
பல கட்டுரைகள். 
💙 இன்று புதிதாய் பிறந்தோம் என்ற பாரதியின் அற்புத வரிகளோடு ஒரு கட்டுரை, குற்றத்தை ஏற்பேன், ஒரு நிமிடம் போதும் போன்ற கட்டுரைகள் படிப்பவர்களை புதிய பாதையில் 
அழைத்துச் செல்லும்.
💙Fugai குரு,போலந்தின் HASSID 
இயக்கம்,Fredrich Nietzsche என்ற எழுத்தாளர்,சர்ச்சில்,ஜென் கதைகள்,வள்ளலார்,திருவள்ளுவர்   ..போன்ற  ஏராளமான செய்திகள். 
💙அகத்தை தூய்மையாக்கி,வெற்றி பெற வழிகாட்டும் நூல்👍

Comments

Popular posts from this blog

51.நன்மைகளின் கருவூலம்.

லெனின் முதல் காம்ரேட்

12.. வானிலிருந்து வந்தவர்கள்.. சிந்து சீனு